Gemini ஒரே போடு.. இனி வீடியோ மட்டுமில்ல.. ஆடியோவும் ரெடி.. Lyria 3-ஐ களமிறக்கிய கூகுள்.. இப்போ beta மட்டும்!
கூகுள் (Google) நிறுவனத்தின் ஜெமினி (Gemini) ஆப் வழியாக போட்டோ மற்றும் வீடியோக்களை மட்டுமே ஜெனரேட் செய்ய முடிந்தது. இப்போது, லைரியா 3 (Lyria 3) என்னும் மியூசிக் மாடல் வழியாக ஆடியோவை ஜெனரேட் செய்யும் அணுகலும் கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த லைரியா 3 மாடல் குறித்த முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ஜெமினி ஏஐ ஆப் ஆனது வெறும் ஏஐ சாட்பாட் போல மட்டுமல்லாமல், இமேஜ்களில் இருந்து வீடியோக்களை உருவாக்குவது, டெக்ஸ்ட்களில் இருந்து வீடியோக்கள் மற்றும் இமேஜ்களை உருவாக்குவது உள்ளிட்டவற்றை செய்கிறது. இதனால், ஏஐ சாட்பாட்களில் தனியிடம் பிடித்துள்ளது. ஆனால், வீடியோ, இமேஜ்களை ஜெனரேட் செய்வதுபோல மியூசிக் ஜெனரேட் கிடைக்காமல் இருந்தது.

ஜெனரேட்டிவ் மியூசிக் மாடல்
இப்போது, அதற்கும் கூகுள் நிறுவனம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. கூகுள் டீப் மைண்ட் (Google DeepMind) மூலம் உருவாக்கப்பட்ட ஜெனரேட்டிவ் மியூசிக் மாடலை (Generative Music Model) அறிமுகம் செய்துள்ளது. இதற்கு லைரியா 3 எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஆனால், இது கூகுள் ஜெமினி ஆப் வழியாக பீட்டா வெர்ஷனில் மட்டுமே கொடுக்கப்பட்டு உள்ளது.
ஆகவே, ஒட்டுமொத்த ஜெமினி யூசர்களுக்கும் கொடுக்கப்படாது. இந்த லைரியா 3 மாடல் வழியாக 30 செகண்ட்களுக்கு ஆடியோவை ஜெனரேட் செய்து கொள்ளலாம். இதை ப்ராம்ப்ட் கொடுத்து ஜெனரேட் செய்யலாம். அல்லது இமேஜ் கொடுத்து ஜெனரேட் செய்யலாம். மேலும், வீடியோவை கொடுத்தும் மியூசிக்கை ஜெனரேட் செய்து கொள்ள முடியும்.
வெறும் மியூசிக் மட்டுமல்லாமல், பாடல் வரிகளையும் ஜெனரேட் செய்து கொள்ளலாம். இதுவும் உங்களது ப்ராம்ப்ட் அல்லது இமேஜ் அல்லது வீடியோவுக்கு ஏற்ப கொடுக்கப்படும். மேலும், நீங்கள் விரும்பும் ஸ்டைல் (Style), குரல் (Vocals) மற்றும் டெம்போ (Tempo) போன்றவற்றையும் மாற்றி கொள்ளலாம். ஆகவே, எளிதாக பொருந்தக் கூடிய மியூசிக் கிடைக்கும்.

மிகவும் யதார்த்தமான மற்றும் இசை ரீதியாக சிக்கலான பாடல்களையும் கூட இதில் உருவாக்க முடியும் என்று கூகுள் நிறுவனம் சொல்கிறது. இப்படி பல்வேறு அணுகல்களை இந்த லைரியா 3 கொடுத்து இருக்கிறது. டெக்ஸ்ட்-டூ டிராக் (Text to track) முதல் போட்டோஸ் & வீடியோஸ் டூ டிராக் (Photos & Videos to track) கிடைப்பதால், விவரிப்பதில் இருக்கும் சிக்கலும் தவிர்க்கப்படுகிறது.
* டெக்ஸ்ட் டூ டிராக்: குறிப்பிட்ட பாடல் வரிகள், ஜோக்குகள் அல்லது ஏதாவது நினைவுகள் ஆகியவற்றை டெக்ஸ்ட்டாக கொடுத்து, அதற்கு ஏற்ப மியூசிக் ஜெனரேட் செய்து கொள்ள முடியும்.
* போட்டோஸ் & வீடியோஸ் டூ டிராக்: வழக்கம்போல போட்டோ அல்லது வீடியோக்களை அப்லோட் செய்து, அதற்கு ஏற்ப மியூசிக்கை ஜெனரேட் செய்து கொள்ளலாம்.
இப்படி ஜெனரேட் செய்யும்போது, அதிகபட்சம் 30 செகண்ட்களுக்கு மட்டுமே டியூரேஷன் இருக்கும். ஆகவே, இதை நினைவில் வைத்து கொண்டு பாடல் வரிகளை எடுத்து கொள்ளுங்கள். இந்த 30 செகண்ட் வீடியோ கிளிப்களை டவுன்லோட் செய்யலாம். ஷேர் செய்து கொள்ளலாம். இந்த லைரியா 3 மாடலானது, யூடியூப் ட்ரீம் டிராக்கிலும் கிடைக்கிறது.
ஆனால், இதை அமெரிக்காவில் இருக்கும் யூசர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். மேலும், லைரியா 3 மாடல் வழியாக உருவாக்கப்படும் டிராக்குகளுக்கு சின்த்ஐடி (SynthID) இருக்கும். இது கூகுள் நிறுவனத்தின் ஏஐ ஜெனரேட்டட் கன்டென்ட்களை கண்டறிய கொடுக்கப்பட்டு உள்ளது. பீட்டா வெர்ஷனுக்கு அடுத்த மொத்த யூசர்களுக்கும் அப்டேட் வழியாக கிடைக்க இருக்கிறது.


Click it and Unblock the Notifications