Home
News

இனி எடிடிங் ஈஸி.. இப்படி வேணும்.. அப்படி வேணும்.. டைப் பண்ணா போதும்.. Gemini ஆப் இமேஜ் எடிடிங் பண்ணிடும்!

ஒரு போட்டோவை எடுத்துக் கொண்டு அதை இப்படி எடிட் செய்யலாம், அப்படி எடிட் செய்யலாம் என்று மனதுக்குள் ஒரு யோசனையை வைத்து செய்தாலும், அது நினைத்தப்படி கிடைக்காது. ஆனால், இப்போதுள்ள ஏஐ இமேஜ் ஜெனரேடிவ் ஆப்கள் சொன்னால் போதும், அதை அப்படியே எடிட் செய்து கொடுக்கின்றன. இதில் கூகுள் (Google) நிறுவனத்தின் ஜெமினி ஆப் (Gemini App) பட்டையை கிளப்ப இருக்கிறது. நேட்டிவ் ஏஐ இமேஜ் எடிடிங் கேப்பபிலிட்டிஸை (Native AI Image Editing Capabilities) கொடுக்கிறது.

நேட்டிவ் ஏஐ இமேஜ் எடிடிங் பீச்சர்களை இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே கூகுள் நிறுவனம் கொடுத்தது. இந்த பீச்சர் மூலம் இமேஜ் ஜெனரேட் செய்து அந்த இமேஜை உங்களுக்கு பிடித்தது போல மோடிஃபை (Modify) செய்து கொள்ள முடிந்தது. இந்த பீச்சர்கள் ஜெமினி ஆப் பிரியர்களிடையே மிகப்பெரும் வரவேற்பை பெற்றதால், அதில் அடுத்தடுத்த அப்கிரேட்கள் வந்தன.

இனி எடிடிங் ஈஸி.. இப்படி வேணும்.. அப்படி வேணும்.. டைப் பண்ணா போதும்!

இப்போது, ஜெனரேட் செய்யும் இமேஜ்களை மட்டுமல்லாமல், நீங்கள் அப்லோட் செய்யும் இமேஜ்களையும் மோடிஃபை செய்துகொள்ளும்படி அப்கிரேட் செய்யப்பட்டுள்ளது. இந்த அப்கிரேட் மூலம் உங்களுக்கு எடிட் செய்ய வேண்டிய இமேஜை அதில் அப்லோட் செய்துவிட்டு, அதில் என்ன மோடிஃபை செய்ய விரும்புகிறீர்களோ அதை ப்ராம்ட் (Prompt) செய்தால் போதும், அது எடிட் செய்யப்படும்.

இதில் பேக்கிரவுண்ட் மாற்றுதல், அப்ஜெக்ட்களை ரீபிளேஸ் செய்தல், கூடுதல் எலிமெண்ட்களை சேர்த்தல் உள்ளிட்ட பலவற்றை செய்து கொள்ளலாம். உங்களது மனதில் தோன்றும் எதையும் ப்ராம்ட் செய்து எடிட் செய்து கொள்ளலாம். உங்களது தலைமுடி நிறத்தை மாற்றுவது போன்ற நுணுக்கமான எடிட்டிங்களையும் இந்த நேட்டிவ் ஏஐ இமேஜ் எடிடிங் மூலம் செய்து கொள்ளலாம்.

அதுமட்டுமல்லாமல், மல்டி-ஸ்டெப் எடிடிங் கேப்பபிலிட்டி (Multi-step Editing Capability) கிடைக்கிறது. இந்த எடிடிங் மூலம் நீங்கள் பல இமேஜ்களை ஒரே நேரத்தில் ஜெனரேட் செய்யலாம். இந்த இமேஜ்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்பில் இருக்கும்படி ஜெனரேட் செய்யப்படும். அதாவது, ஒரு டிராகனை பற்றி கதை எழுதுகிறீர்கள் என்றால், இமேஜ்களை தொடர்புப்படுத்தி ஜெனரேட் செய்யலாம்.

இதுகிட்டத்தட்ட பிரீமியமான எடிடிங் பீச்சர்களாக இருப்பதால், சின்த்ஐடி டிஜிட்டல் வாட்டர்மார்க் (SynthID Digital Watermark) அந்த இமேஜ்களில் தோன்றுகிறது. இருப்பினும், அந்த வாட்டர்மார்க் வலது புறத்தின் கார்னரில் இன்விசிபிலாக தெரிகிறது. இமேஜை மறைக்கும்படி இருக்கவில்லை. இந்த பீச்சர்களே ஜெமினி ஆப்-இல் கிடைக்கிறது. இதில் ஆங்கிலத்தில் ப்ராம்ட் செய்ய வேண்டும்.

இருப்பினும், பல்வேறு நாடுகளை சேர்ந்த 45 மொழிகளில் ஜெமினி ஆப் சேவை கிடைக்க இருக்கிறது. வரும் வாரங்களில் பிராந்திய மொழிகளிலும் ப்ராம்ட் செய்யும்படி அப்கிரேட் வர இருக்கிறது. அப்படி வந்துவிட்டதால், உங்களது மொழியிலேயே போட்டோ எடிட்டிங் செய்து கொள்ளலாம். அதே நேரத்தில் உங்களுக்கு என்ன வேண்டும் என்பதை தெளிவாக அதில் கூற முடியும்.

இதேபோல பல்வேறு ஆப்கள் கிடைக்கின்றன. ஆனால், பேக்கிரவுண்ட் மாற்றுதல், ஆப்ஜெக்ட்களை நீக்குதல் போன்ற குறிப்பிட்ட சில பீச்சர்கள் மட்டுமே அதில் இருக்கின்றன. ஆனால், இந்த ஜெமினி ஆப் மூலம் புதிய ஆப்ஜெக்ட்களை சேர்க்கலாம். இன்னும் பலவற்றை செய்யலாம். ஆகவே இந்த ஆப் மிகப்பெரும் வரவேற்பு பெற வாய்ப்புள்ளது. அதேபோல எடிட்டிங் தெரியாமலேயே இதை செய்து கொள்ள முடிகிறது.

ஸ்மார்ட்போன் கஸ்டமர்களிடையே இதுபோன்ற ஏஐ இமேஜ் ஜெனரேட் ஆப்கள் நல்ல வரவேற்பை பெறுகின்றன. ஆனால், அதற்காக டெக் நிறுவனங்கள் பல்லாயிர கணக்கான கோடி ரூபாய்களை செலவு செய்கின்றன. ஆகவே, வரும் காலங்களில் இந்த ஆப்களை பயன்படுத்த கட்டணங்கள் இருக்கும் என்பதை மறுக்க முடியாது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Gemini App Brings Native AI Image Editing Capabilities Users Can Upload Images And Edit Directly
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X