Home
News

உங்க ஸ்மார்ட்போனில் Gemini AI இருக்கா.. இனிமே வந்தாச்சு லிமிட்.. FREE திட்டம் மட்டுமில்ல.. மத்ததுக்கும் வருது!

கூகுள் நிறுவனத்தின் ஜெமினி ஏஐ மாடல்களை பயன்படுத்தும் ஒட்டுமொத்த யூசர்களுக்கும் ப்ராம்ப்ட் செய்வதில் லிமிட் விதிக்கப்பட்டுள்ளது. ஜெமினி‌ ஏஐ மாடலை இலவசமாக பயன்படுத்தினாலும் சரி, அல்லது உங்களிடம் ஜெமினி ஏஐ ப்ரோ (Gemini AI Pro) மற்றும் ஜெமினி ஏஐ அல்ட்ரா (Gemini AI Ultra) திட்டங்கள் இருந்தாலும் சரி, உங்களுக்கு தினசரி லிமிட் இருக்கிறது. இது குறித்த முழு விவரங்களை தெரிந்து கொள்ளலாம். அதோடு ஜெமினி ஏஐ திட்டங்களின் அனுகல்களையும் இதில் பார்க்கலாம்.

* இலவச திட்டம் (Free Tier)
* ஜெமினி ஏஐ ப்ரோ (Gemini AI Pro)
* ஜெமினி ஏஐ அல்ட்ரா (Gemini AI Ultra)

உங்க ஸ்மார்ட்போனில் Gemini AI இருக்கா.. இனிமே வந்தாச்சு லிமிட்.. FREE!

இலவச திட்டம்
இந்தத் திட்டம் அனைத்து கஷ்டமர்களுக்கும் இலவசமாக கொடுக்கப்படுகிறது. இதில் ஜெமினி 2.5 ஃப்ளாஷ் (Gemini 2.5 Flash) மற்றும் ஜெமினி 2.5 ப்ரோ (Gemini 2.5 Pro) ஆகிய மாடல்கள் பயன்படுத்த கிடைக்கும். நாளொன்றுக்கு 5 ப்ராம்ப்ட்களை (Prompts) செய்து கொள்ளலாம். நாளொன்றுக்கு 100 இமேஜ்களை ஜெனரேட் செய்யலாம்.

மாதத்திற்கு 5 டீப் ரிசர்ச் (Deep Research) செய்து கொள்ளலாம். ஆடியோ ஓவர்வியூகளை (Audio Overviews) நாளொன்றுக்கு 20 வரையில் பெற்றுக் கொள்ளலாம். இந்த திட்டத்துக்கு கட்டணம் ஏதும் கிடையாது. கூகுள் ஜெமினி ஆப் டவுன்லோட் செய்து அதில் கூகுள் அக்கவுண்ட்டை லாகின் செய்தால் போதும் பயன்படுத்தி கொள்ளலாம்.

ஜெமினி ஏஐ ப்ரோ
இந்த ப்ரோ மாடலில் நாளொன்றுக்கு 100 ப்ராம்ப்ட்களை செய்து கொள்ளலாம். அதேபோல ஒரு நாளில் 1,000 இமேஜ்களை ஜெனரேட் செய்து கொள்ள முடியும். இதை ஜெமினி 2.5 ப்ரோ (Gemini 2.5 Pro) வெர்ஷன் மூலம் செய்து கொள்ளலாம். ஜெமினி வியோ 3 (Gemini Veo 3) வீடியோ ஜெனரேட் மாடல் மூலம் ஒரு நாளுக்கு 3 வீடியோக்களை உருவாக்கலாம்.

உங்க ஸ்மார்ட்போனில் Gemini AI இருக்கா.. இனிமே வந்தாச்சு லிமிட்.. FREE!

அதேபோல ஜெமினி 2.5 ப்ரோ மூலம் 20 டீப் ரிசர்ச் ரிப்போர்ட்களை செய்து கொள்ளலாம். ஜெமினி ஏஐ ப்ரோ திட்டத்தின் விலை ரூ.1,950ஆக இருக்கிறது. முதல்முறை பெறும் கஸ்டமர்களுக்கு ஒரு மாதம் இலவசமாக கொடுக்கப்படுகிறது. இந்தியாவில் அதிகப்படியான கூகுள் யூசர்கள் இந்த ப்ரோ திட்டத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

ஜெமினி ஏஐ அல்ட்ரா
இந்த அல்ட்ரா திட்டம் கிரியேட்டர்கள் மற்றும் ஹெவி யூசர்களுக்கு ஏற்ப கிடைக்கிறது. மாதத்துக்கு ரூ.24,500ஆக விலை இருக்கிறது. முதலில் பெறும்போது மாதத்துக்கு ரூ.12,200 விலைக்கு கிடைக்கும். இதில் ஜெமினி 2.5 ப்ரோ டீப் திங்க் (Gemini 2.5 Pro Deep Think) மாடல் கிடைக்கிறது. இதில் நாளொன்றுக்கு 500 ப்ராம்ப்ட்களை செய்து கொள்ளலாம்.

ஜெமினி வியோ 3 (Gemino Veo 3) மூலம் 5 வீடியோக்களை ஜெனரேட் செய்து கொள்ளலாம். ஒரு நாளுக்கு 200 ரிப்போர்ட்களை டீப் ரிசர்ச் மூலம் செய்து கொள்ளலாம். இந்த லிமிட்களே இனிமேல் கஸ்டமர்களுக்கு இருக்கும். இதுபோக ப்ரோ மற்றும் அல்ட்ரா திட்டங்களில் பல்வேறு கூடுதல் அனுகல்கள் கிடைக்கின்றன. அதை பார்ப்போம்.

ஜெமினி ஏஐ ப்ரோ மாடலில் 2 டிபிக்கான ஸ்டோரேஜ் கிடைக்கிறது. மாதம் 1000 ஏஐ கிரெடிட்கள் கிடைக்கிறது. ப்ளோவ் ஏஐ ஃபிலிம் மேக்கிங் கிடைக்கிறது. விஸ்க் (Wisk) மற்றும் நோட்புக்எல்எம் கிடைக்கிறது. அல்ட்ரா மாடலில் 30 டிபிக்கான ஸ்டோரேஜ் கிடைக்கிறது. மாதம் 25,000 ஏஐ கிரெடிட்கள் கிடைக்கிறது. இதைவைத்து வீடியோ ஜெனரேட் செய்யலாம்.

Best Mobiles in India

English summary
Gemini AI Usage Limits Comparing the Free Pro And Tiers Plans
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X