கண்ணால் காண்பது பொய்., கேமராவால் ஆராய்வதே மெய்- டோக்கியோ ஒலிம்பிக்கில் Nikon கேமராக்களின் அதீத பங்கு!

|

பொதுவாக கிரிக்கெட் விளையாட்டை எடுத்துக் கொண்டால். இரண்டு நடுவர்கள் மைதானத்தில் இருந்தபோதிலும் சந்தேகம் வரும் பட்சத்தில் கேமராவில் பதிவான காட்சிகளையே ரீப்ளே செய்து பார்த்து தீர்மானத்துக்கு வரப்படும். சமயத்தில் நடுவரின் முடிவு தவறாகக் கூட அமையும் ஆனால் கேமராக் காட்சிகளில் பெரும்பாலும் தவறு இருந்தது இல்லை. மனிதர்களின் பார்வைக்கு அவ்வளவுதான் துல்லியத் தன்மை உள்ளது என்றோ கேமராவை இயக்குவது மனிதர்கள் தானே என்றோ விவாதத்திற்கு வரவில்லை. தற்போது நாம் வியப்பது தொழில்நுட்ப வளர்ச்சியை நோக்கியே.

டோக்கியோவில் ஒலிம்பிக் 2020 நிகழ்வு

டோக்கியோவில் ஒலிம்பிக் 2020 நிகழ்வு

தொழில்நுட்ப வளர்ச்சி நம்மை இன்னும் பல கட்டங்கள் மேம்படுத்த இருக்கிறது என்பதில் ஆச்சரியமில்லை. கொரோனா தொற்று காரணமாக டோக்கியோவில் 2020 ஒலிம்பிக் இந்தாண்டு ரசிகர்கள் இல்லாமல் நடைபெற்று வருகிறது. இருந்தாலும் புகைப்பட கலைஞர்கள் வருகையும் அவர்களின் பங்கும் மேலோங்கி தொடர்கிறது. கேனான் மற்றும் நிகான் போன்ற நிறுவனங்கள் இன்னும் கேமரா கியர் நிரப்பப்பட்ட அறைகளில் சாதனங்களை தரையில் இருந்து உச்சம் வரை நிரப்பி வைத்திருக்கின்றன.

டோக்கியோவில் நடைபெற்ற கோடைகால ஒலிம்பிக் போட்டி

டோக்கியோவில் நடைபெற்ற கோடைகால ஒலிம்பிக் போட்டி

இந்தாண்டு டோக்கியோவில் நடைபெற்ற கோடைகால ஒலிம்பிக் போட்டிகளில் நிகான் நிபுணத்துவ சேவைகள் அளப்பரியதாக உள்ளது. நிகான் நிபுணத்துவ சேவைகள் (என்பிஎஸ்) கியர் அறையின் சில புகைப்படங்களை பெல்ஜிய விளையாட்டு புகைப்படக் கலைஞர் வின்சென்ட் கலுட் படம்படித்து பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தில் டஜன் கணக்கான நிகான் டி6 டிஎஸ்எல்ஆர் கேமராக்கள் மற்றும் ஏணைய 800 எம்எம் சூப்பர் டெலிபோட்டோ லென்ஸ்கள் முதல் 14 எம்எம் வைட் ஆங்கிள் வரை காணப்படுகின்றன.

நிகான் மெயின் பிரஸ் சென்டர்

இந்த மெயின் பிரஸ் சென்டரானது டோக்கியோ பிக்சைட் காம்ப்ளக்ஸ்-ன் வெஸ்ட் ஹால் பகுதியில் அமைந்துள்ளது. இந்த மெயின் பிரஸ் சென்டரில் அங்கீகாரம் பெற்ற புகைப்பட கலைஞர்களுக்கான கேமராக்கள் மற்றும் லென்ஸ்கள் வழங்கப்படுகிறு என கலூர் குறிப்பிட்டார்.

புகைப்பட கலைஞருக்கான சாதனம்

அதுமட்டுமின்றி சேவை உபகரணங்களுக்கு அதாவது பழுது நீக்க அங்கேயே தொழில்நுட்ப வல்லுநர்களும் இருக்கின்றனர். கலூட் புகைப்படம் எடுத்த இந்த பகுதிகளில் நிகான் இசட் தொடர் மிரர்லெஸ் கேமராக்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் புகைப்பட காட்சியில் லென்ஸ்கள் எதுவும் இடம்பெறவில்லை. ஒலிம்பிக்கில் Z6 II, Z7 II மற்றும் Z-மவுண்ட் லென்ஸ்கள் புகைப்பட கலைஞர்கள் பயன்படுத்துகின்றனர்.

கேனான் அவசரகால சூழ்நிலை

கேனான் அவசரகால சூழ்நிலை

அதேசமயத்தில் கேனான் அவசரகால சூழ்நிலைகளுக்கு ஒரு குறிப்பிட்ட அளவிலான கியர் மட்டுமே வைத்திருக்க திட்டமிட்டிருப்பதாக கூறப்பட்டது. ஆனால் நிறுவனம் முழு அளவிலான தொழில்முறை சேவை மையத்தையும் நிறுவப்போவதாக கடந்தவாரம் அறிவித்தது.

முக்கிய விளையாட்டு போட்டி

கொரோனா காலக்கட்டத்தில் பல்வேறு வழிமுறைகளுடன் முக்கிய விளையாட்டு போட்டியான ஒலிம்பிக் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகின்றன. ரசிகர்கள் இன்றி போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த போட்டியில் அமெரிக்கா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகள் மாறிமாறி முன்னிலை வகித்து வருகின்றன.

ஒலிம்பிக் போட்டி பதக்க பட்டியல்

ஒலிம்பிக் போட்டியில் அமெரிக்கா 13 தங்கம், 12 வெள்ளி, 10 வெண்கலம் என மொத்தம் 35 பதக்கங்களுடன் முதல் இடத்தில் இருக்கிறது. சீனா 13 தங்கம், 6 வெள்ளி, 9 வெண்கலத்துடன் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. ஜப்பான் 13 தங்கம், 4 வெள்ளி, 5 வெண்கலத்துடன் மூன்றாம் இடத்தில் இருக்கிறது. இதில் இந்தியா ஒரே ஒரு வெள்ளியுடன் 45-வது இடத்தில் இருக்கிறது.

Pic Courtesy: @vkalut

Most Read Articles
Best Mobiles in India

English summary
Gear Room of Nikon at Tokyo 2020 Summer Olympic Games- Professional Services For Accredited Photographers

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X