அரசாங்க வலைத்தளத்திலிருந்து மன்மோகன் சிங்கின் உள்நாட்டு வளர்ச்சி அறிக்கை நீக்கம்!

|

மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில் நடந்த அதிக உள்நாட்டு உற்பத்தியில் வளர்ச்சியைக் காட்டும் அறிக்கை அரசாங்க வலைத்தளத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது. இது பலருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது. வலைத்தளத்தில் இருந்து ஏன் இந்த அறிக்கை நீக்கப்பட்டுள்ளது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

வளர்ச்சி காட்டிய அறிக்கை புள்ளிவிவரங்கள் நீக்கம்

வளர்ச்சி காட்டிய அறிக்கை புள்ளிவிவரங்கள் நீக்கம்

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் அரசாங்கத்தின் காலகட்டத்தில் நடந்த மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அதிக வளர்ச்சியைக் காட்டிய அறிக்கை புள்ளிவிவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க விபரங்கள் அரசாங்க அமைச்சகத்தின் வலைத்தளத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் 10.8 சதவீதமாக வளர்ச்சி

இந்தியாவின் 10.8 சதவீதமாக வளர்ச்சி

தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) அரசாங்கம் மொத்த உள்நாட்டு உற்பத்தியைக் கணக்கிடுவதற்கான அடிப்படை ஆண்டை 2004-05 முதல் 2010-11 என மாற்றியது. இந்த அறிக்கையின் படி 2006 முதல் 2007 ஆம் ஆண்டில் மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது, இந்தியா 10.8 சதவீதமாக வளர்ச்சியில் வளர்ந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜியோ ஜிகா பைபர் சேவை இந்தியா முழுக்க இலவசம்: அதிரவிட்ட அம்பானி.!ஜியோ ஜிகா பைபர் சேவை இந்தியா முழுக்க இலவசம்: அதிரவிட்ட அம்பானி.!

இணையதளத்தில் வெளியிடப்பட்ட முடிவுகள்

இணையதளத்தில் வெளியிடப்பட்ட முடிவுகள்

ஜூலை 25 அன்று அமைச்சக இணையதளத்தில் இதன் முடிவுகள் வெளியிடப்பட்டது. அதே தளத்தை அளவுகோலாகப் பயன்படுத்தி 2006 முதல் 2007 ஆம் ஆண்டில் இந்தியா 10.8 சதவீதமாக உள்நாட்டு உற்பத்தியில் வளர்ந்தது என்று உறுதிப்படுத்தப்பட்டது.

உண்மை வெற்றி பெற்றுள்ளது

உண்மை வெற்றி பெற்றுள்ளது

முன்னாள் மத்திய அமைச்சர் பி.சிதம்பரம் கடந்த வாரம் கூறியபோது, "உண்மை வெற்றி பெற்றுள்ளது, மொத்த உள்நாட்டு உற்பத்தியின் பின் தொடர் கணக்கீட்டுப் பொருளாதார வளர்ச்சியின் சிறந்த ஆண்டுகளாக யுபிஏ அறிவித்துள்ள ஆண்டுகள் 2004-2014 என்பதை நிரூபித்துள்ளது."என்று கூறினார்.

உஷார்! Malware தாக்குதல்: உங்களுக்கு தேவை சைபர் கிரைம் பாதுகாப்பு! உடனே படியுங்கள்உஷார்! Malware தாக்குதல்: உங்களுக்கு தேவை சைபர் கிரைம் பாதுகாப்பு! உடனே படியுங்கள்

மத்திய மந்திரி அருண் ஜெட்லி

மத்திய மந்திரி அருண் ஜெட்லி

ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட ஒரு பேஸ்புக் வலைப்பதிவில், மத்திய மந்திரி அருண் ஜெட்லி, 2003 மற்றும் 2008 க்கு இடையில் இந்தியா "அதிக விகிதத்தில்" வளர்ந்தது என்றும், வாஜ்பாய் அரசாங்கம் "1991 முதல் 2004 வரை தொடர்ச்சியான அதிகரிக்கும் சீர்திருத்தங்கள், ஏற்றுமதிகள் மற்றும் உலகளாவிய உகந்ததாக முன்னேற்றத்தை மாற்றியது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்பார்க்கப்படும் நிலைமை

எதிர்பார்க்கப்படும் நிலைமை

2019 தேர்தலுக்கு முன்னர் பகிரங்கமாக வந்த இந்த அறிக்கை - பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது கட்சிக்கு எதிரான எதிர்க்கட்சி வாக்கெடுப்பு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

Read more about:
English summary
GDP growth during Manmohan era removed from govt website : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X