Home
News

அடேங்கப்பா.. தினசரி 1,002 கோடி ரூபாய் வருமானம்.! கெத்து காட்டும் இந்தியாவின் 2-வது பணக்காரர்.!

கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான உலக பணக்காரர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார் டெஸ்லா சிஇஓ எலான் மஸ்க். மேலும் அமேசான் நிறுவனர் உலக பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு பின்தங்கியிருக்கிறார்.

ல் எலான் மஸ்க் உலக பண

இந்நிலையில் எலான் மஸ்க் உலக பணக்காரர் பட்டியலில் முதல் இடத்திற்கு வந்த சந்தோசத்தை அமேசான் நிறுவனர்ஜெஃப் பெஸோஸ்ஸுடனும் பகிர்ந்து கொள்ளும் வகையில் அவருக்கு மின்னஞ்சலில் வெள்ளிப் பதக்கத்துடன் 2-வது நம்பரை குறிப்பிடும் வடிவத்தில் பெரிய நம்பர் 2 என்ற சிலைய அனுப்பி இருப்பதாக செய்தி வெளிவந்துள்ளது.

சமீபத்தில் இந்தியாவின் 2020-ம்

மேலும் சமீபத்தில் இந்தியாவின் 2020-ம் ஆண்டுக்கான டாப்-10 பணக்காரர் பட்டியலை ஐ.ஐ.எஃப்.எல் வெல்த் ஹுரூன் இந்தியா என்ற ஒரு அமைப்பு வெளியிட்டுள்ளது. குறிப்பாக இந்த அமைப்பு இந்தியாவில் 1000 கோடி ரூபாய்க்கு மேல் வைத்திருப்பவர்களின் பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

000 கோடி சொத்து வைத்திருப்பவர்களின்

மேலும் இந்த அமைப்பு தற்போது வெளியிட்ட தகவலின்படி 1000 கோடி சொத்து வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகரித்து உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக இந்திய பணக்காரர் பட்டியலில் கடந்த 10 ஆண்டுகளாக முதல் இடத்தில் இருக்கும் முகேஷ் அம்பானியே இந்த ஆண்டும் 7,18,000 கோடி ரூபாய் சொத்துக்கள் உடன் முதல் இடத்தில் இருக்கிறார்.

 5,05,900கோடி ரூபாயுடன் கவுதம்

அதைதொடர்ந்து 5,05,900கோடி ரூபாயுடன் கவுதம் அதானி 2-வது இடத்தில் உள்ளார். மேலும் HCL இன் ஷிவ் நாடார் 2,36,600 கோடியுடன் 3-வது இடத்தை பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 4-ஆம் மற்றும் 5-ஆம் இடத்தில் எஸ்பி ஹிந்துஜா & பேமிலி மற்றும் எல்என் மிட்டல் உள்ளதாக
தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 சீரம் இன்ஸ்டிடியூட்டின் சைரஸ் பூனாவல்லா

பின்பு சீரம் இன்ஸ்டிடியூட்டின் சைரஸ் பூனாவல்லா 1,63,700 கோடியுடன் 6-வது இடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இதில் மிகவும் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் முதல் இடத்தில் உள்ள முகேஷ் அம்பானியின் வளர்ச்சி வகிதம் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 9 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது.

ஈட்டும் வருமானம் 1,002 கோடி என்று கூறப்படுகிற

ஆனால் இரண்டாவது இடத்தில் உள்ள கௌதம் அதானி மறறும் குழுமத்தின் வளர்ச்சி கடந்த ஆண்டை காட்டிலும் 261 சதவீதம் கூடுதலாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்தக்கது. அதாவது நாள் ஒன்றுக்கு அதானி குழுமம் ஈட்டும் வருமானம் 1,002 கோடி என்று கூறப்படுகிறது.

 அம்பானியின் ரிலையன்ஸ்

ஆனாலும் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது என்றுதான் கூறவேண்டும்.மேலும் ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போன் விரைவில் விற்பனைக்கு வரும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதாவது தனித்துவமான அம்சங்களுடன் இந்தபுதிய ஸ்மார்ட்போன் வெளிவரும். குறிப்பாக இந்தஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

Best Mobiles in India

English summary
Gautam Adani earns Rs 1,002 crore a day: Report : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X