உலகளவில் டாப் 5 பணக்காரரான இந்தியர்: யார் இந்த கௌதம் அதானி?., அம்பானி நிலை என்ன?
ஃபோர்ப்ஸ் மதிப்பீட்டின்படி, 59 வயதான கௌதம் அதானியின் நிகர மதிப்பு கடந்த வெள்ளிக்கிழமை சந்தை முடிவில் $123.7 பில்லியன் டாலராக உயர்ந்திருக்கிறது. அதே சமயத்தில் வாரன் 91 வயதான வாரன் பஃபெட் நிகர மதிப்பு $121.7 பில்லியன் டாலராக இருக்கிறது. அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி, போர்ப்ஸ் தளத்தில் வெளியான தகவலின்படி புகழ்பெற்ற முதலீட்டாளர் ஆன வாரன் பஃபெட்டை முந்தி உலகின் ஐந்தாவது பணக்காரராக இருக்கிறார்.

கௌதம் அதானியின் நிகர மதிப்பு
ஃபோர்ப்ஸ் மதிப்பீட்டின்படி, 59 வயதான கௌதம் அதானியின் நிகர மதிப்பு கடந்த வெள்ளிக்கிழமை சந்தை முடிவில் $123.7 பில்லியனாக உயர்ந்தது. அதே நேரத்தில் வாரன் பஃபெட்டில் நிகர மதிப்பு $121.7 பில்லியன் டாலராக இருக்கிறது. அதானியிந் சொத்து மதிப்புப்படி இவரது நிகர மதிப்பு இவரை இந்தியாவின் பணக்காரராக மாற்றி இருக்கிறது. இந்தியாவில் இரண்டாவது பணக்காரராக முகேஷ் அம்பானி இரு்கிறார். அதானியை விட அம்பானியின் சொத்து மதிப்பு 19 பில்லியன் டாலர் குறைந்து இருக்கிறது. அம்பானியின் சொத்து மதிப்பு 104.7 பில்லியன் டாலர் ஆகும் என ஃபோர்ப்ஸ் அறிக்கை தெரிவிக்கிறது.

டாப் பணக்காரர் பட்டியல்
ஃபோர்ப்ஸ் நிகழ்நேர பில்லியனர் கணக்கீட்டின்படி, அதானியை விட தற்போது நான்கு பேர் மட்டும் பணக்காரர்களாக முன்னணியில் இருக்கின்றனர். முதல் நான்கு இடத்தில் இருக்கும் பணக்காரர்கள் குறித்து பார்க்கையில், அவர் பில் கேட்ஸ் சொத்து மதிப்பு $130.2 பில்லியன் டாலர்கள் ஆகும். பிரெஞ்சு ஆடம்பரப் பொருட்களின் மன்னர் பெர்னார்ட் அர்னால்ட் சொத்து மதிப்பு $167.9 பில்லியன் டாலர்கள் ஆகும். அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் சொத்து மதிப்பு $170.2 பில்லியன் ஆகும். மற்றும் முதலிடத்தில் இருப்பவர் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க், இவர் சொத்து மதிப்பு $269.7 பில்லியன் ஆகும்.

அதானி குழுமத் தலைவர்
குஜராத் அகமதாபாத்தில் பிறந்தவர் கௌதம் அதானி, இவர் அதானி குழுமத் தலைவர் ஆவார். அடிப்படை வசதியோடு வாழ்ந்து வந்த இவர் 1988 ஆம் ஆண்டு 5 லட்சம் ரூபாய் முதலீட்டுடன் அதானி எக்ஸ்போர்ட்ஸ் லிமிடெட் என்ற நிறுவனத்தை தொடங்கினார். இது ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொழிலாகும். பின் 1990 ஆம் ஆண்டு குஜராத்தில் தனி போர்ட்டை உருவாக்கி முந்தரா என பெயர் வைத்தார். பின் இந்தியாவில் அதிக ஏற்றுமதி இறக்குமதி செய்யப்படும் தனியார் போர்ட் ஆக உருவெடுத்தது.

அதானி குழுமத் தொழில்கள்
கடந்த 2000-ம் ஆவது ஆண்டுக்கு பிறகு கன்ஸ்டர்கஷன், பவர் பிளாண்ட், ரயில் பாதை அமைப்பு, சுரங்கம், கப்பல் கட்டுமானத் தொழில் என பல தொழிலில் அடியெடுத்து வைக்கத் தொடங்கியது அதானி குழுமம். இந்தியா மட்டுமின்றி இந்தோனேஷியா, சிங்கப்பூர் என தனது தொழிலை வெளிநாடுகளில் முன்னேற்றினார். தற்போது வரைக்கும் மிகப் பெரிய தனியார் துறைமுகமாக இந்த முந்த்ரா துறைமுகம் திகழ்கிறது.

அதானி எண்டர்பிரைஸ் லிமிடெட்
அதானி எண்டர்பிரைஸ் லிமிடெட் மூலமாக நிலக்கரியில் இருந்து ஏணைய இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் தனியார் துறைமுகங்கள் கட்டுமானப் பணியை அதானி குழுமம் செய்து வருகிறது. அதானி பிளாண்ட்ஸ் மற்றும் பவர் லிமிடெட் என்ற பெயரில் மின்சார உற்பத்திப் பணி செய்யப்பட்டு வருகிறது. இதுவும் முன்னணிதான், பின் அதானி க்ரீன் எனர்ஜி லிமிடெட் என்ற பெயரில் மின்சாரம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதில் சோலார் மற்றும் காற்றாலை மின்சார தயாரிப்பு நடைபெற்று வருகிறது. பின் அதானி கேஸ், இதுவும் குஜராத்தில் பெருமளவு பிரபலமடைந்த நிறுவனமாகும்.

பல்வேறு தொழில்களும் அதானி குழுமத்தில் மேற்கொள்ளப்பட்டு முன்னேற்றம்
அதானி கன்ஸ்டர்கஷன் என்ற பெயரில் மிகப்பெரிய அபார்ட்மென்ட்கள் கட்டிக் கொடுக்கப்பட்டு வருகிறது. வில்மர் என்கிற நிறுவனத்துடன் இணைந்து அதானி வில்மர் என்ற பெயரில் பல உணவு தயாரிப்பு விற்பனைகளும் செய்யப்பட்டு வருகிறது. ஃபைனான்ஸ் நிறுவனமும் அதானி குழுமத்தில் இடம்பெற்றிருக்கிறது, அதானி கேபிடல்ஸ் என்ற பெயரில் தொழிற் கடன், சொத்து கடன், டூவீலர் கடன், கார் கடன் என பல வகைகளுக்கு லோன் தரப்படுகிறது. பின் அதானி ஹவுசிங் பைனான்ஸ் என்ற பெயரில் அதிக வீட்டுக் கடன் வழங்கப்பட்டு வருகிறது. அதானி பவுண்டேஷன் என்ற பெயரில் அதிக சமூக சேவைப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுபோன்று பல்வேறு தொழில்களும் அதானி குழுமத்தில் மேற்கொள்ளப்பட்டு முன்னேறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications