Home
News

Gas Cylinder Subsidy: 12 மாதம் முழுசா ரூ.350 வரை மானியம் வேண்டுமா? இதை கட்டாயம் மறக்காம பண்னனும்..

எல்பிஜி கேஸ் சிலிண்டர் (LPG Gas Cylinder) பயன்படுத்தும் பொதுமக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. சமையல் எரிவாயு சிலிண்டர் பயன்படுத்தி வரும் மக்களுக்கு வழங்கப்படும் மானியம் (Gas cylinder subsidy) குறித்த புதிய தகவலை அரசாங்கம் தற்போது வெளியிட்டுள்ளது. இதன் படி, மத்திய அரசின் உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் பெறப்பட்டு வந்த மானிய தொகை (Ujjwala Yojana subsidy amount) அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல், சாமானிய மக்களுக்கு வழங்கப்படும் கேஸ் சிலிண்டர் மானியம் குறித்த தகவலும், மானியத் தொகையை பொதுமக்கள் தடையில்லாமல் பெற என்ன செய்ய வேண்டுமென்ற தகவலும் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் தோராயமாக சுமார் 30.53 கோடி மக்கள் எல்பிஜி கேஸ் சிலிண்டர் (LPG Gas Cylinder) இணைப்பை பயன்படுத்தி வருகிறார்கள் என்று கூறப்படுகிறது. இதில் 9 கோடிக்கும் அதிகமான மக்கள், மத்திய அரசின் சிறப்பு திட்டமான உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் கேஸ் சிலிண்டர்களை வாங்கி பயன்பெற்று வருகிறார்கள். ஒட்டுமொத்த கேஸ் சிலிண்டர் பயன்பாட்டாளர்கள் அனைவருக்கும் இப்போது மானியம் வழங்கப்பட்டு வருகிறது.

Gas Cylinder Subsidy: 12 மாதம் முழுசா ரூ.350 வரை மானியம் வேண்டுமா?

பிரதான் மந்த்ரி உஜ்வலா யோஜனா கேஸ் சிலிண்டர் மானியம் முழுசா வேண்டுமா? (Pradhan Mantri Ujjwala Yojana Gas Cylinder Subsidy):

ஆனால், இதில், முழுமையான கேஸ் சிலிண்டர் மானியத்தை பெரும் பயனாளர்களாக உஜ்வாலா யோஜனா திட்டத்தின் பயனாளர்கள் இருக்கிறார்கள். பிரதான் மந்த்ரி உஜ்வலா யோஜனா (Pradhan Mantri Ujjwala Yojana) திட்டத்தின் கீழ் இதற்கு முன்பு வரை ரூ.300 முதல் ரூ.200 வரை மானியம் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்த மானியத் தொகை தற்போது சிலருக்கு ரூ.350 ஆக கிடைக்கும்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், மத்திய அரசு அறிமுகம் செய்து, மக்களுக்கு பெரியளவில் உதவி செய்து வரும் உஜ்வாலா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மானியத் தொகை கடந்த மாதம் உயர்த்தப்பட்டது (gas cylinder subsidy increased). அதிகாரப்பூர்வ தகவலின் படி, மார்ச் 2024 வரை மட்டுமே மானியத் தொகை கிடைக்கவிருந்த நிலையில், தற்போது மார்ச் 2025 வரை இதன் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது பொதுமக்களுக்கு சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது.

12 மாதங்களுக்கான சிலிண்டர் மானியத் தொகை வரவு வைக்கப்படுகிறது:

குறிப்பாக உஜ்வலா யோஜனா திட்ட பயனர்களுக்கு 12 மாதங்களுக்கான சிலிண்டர் மானியத் தொகையாக (12 months gas cylinder subsidy) ரூ. 350 வரை அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், உஜ்வலா யோஜனா திட்டத்தில் இல்லாத கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு ரூ. 50 வரை சிலிண்டர் மணியத் தொகை மாதம் தவறாமல் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு கேஸ் சிலிண்டர் பயனருக்கும் எவ்வளவு மணியத்தொகை வங்கி கணக்கில் (bank account) வரவு வைக்கப்படுகிறது என்பதை நாம் வீட்டில் இருந்தபடி, ஆன்லைன் (Online) மூலம் சில நிமிடங்களில் செக் செய்து பார்க்கலாம். அதை எப்படி செய்வதென்றே செயல்முறையை இப்போது பார்க்கலாம்.

கேஸ் சிலிண்டர் மணியத்தொகை பேலன்சை எப்படி ஆன்லைனில் செக் செய்வது? (How to check gas cylinder subsidy balance online):

- உங்கள் ஸ்மார்ட்போனில் https://www.mylpg.in என்ற இணையதள பக்கத்திற்கு செல்லவும்.
- டிஸ்பிளேவின் வலதுபுறத்தில் 3 கேஸ் சிலிண்டர்கள் (gas cylinder) காண்பிக்கப்பட்டிருக்கும்.
- நீங்கள் வாங்கும் கேஸ் சிலிண்டர் நிறுவனத்தை அதிலிருந்து தேர்வு செய்யவும்.
- இப்போது உங்கள் லாகின் விபரங்களை உள்ளிடவும்.
- இதற்கு முன்பு நீங்கள் லாகின் செய்ததே இல்லை என்றால் சைன் இன் (Sign In) செய்யவும்.

- சைன் இன் செய்ய தேவையான விபரங்களை உள்ளிட்டு பாஸ்வோர்ட் உருவாக்கி லாகின் செய்யவும்.
- சிலிண்டர் இணைப்புடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை (Mobile number) உள்ளிடவும்.
- அடுத்து OTP விபரங்களை உள்ளிடவும்.
- மொபில் எண்ணை உள்ளிட்டு ஸ்கிரீனில் காட்டப்படும் கேப்ட்சா கோடை (Captcha code) உள்ளிடவும்.

- டிஸ்பிளேவின் இடதுபுறத்தில் View Cylinder Booking History / Subsidy transferred என்ற விருப்பத்தை கிளிக் செய்யவும்.
- இப்போது எந்த மாதத்தில் எவ்வளவு சிலிண்டர் மானியம் வரவு வைக்கப்பட்டது என்ற தகவல் காண்பிக்கப்படும்.
- தொடர்ந்து ரூ.50 முதல் ரூ.350 வரை முழு மானியத்தை தடையில்லாமல் பெற KYC கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்பது கவனிக்கத்தக்கது. இதை எல்லா சிலிண்டர் பயனர்களும் கட்டாயம் செய்து முடிக்க அறிவுரைக்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Gas Cylinder Subsidy Get Up To Rs 350 For Pradhan Mantri Ujjwala Yojana Users Check Balance Online
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X