Home
News

மர்மத்தின் மேல் மர்மம்.. மைக்ரோஸ்கோப் மூலம் கங்கை நீரை பார்த்தவருக்கு அதிர்ச்சி.. இது சாத்தியமே இல்லையே!

கங்கை நீரை (Ganga river water) ஆராய்ச்சி செய்த நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி. கங்கை நதி (Ganga river) இந்தியாவின் முக்கிய நதிகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. கங்கை நதி பலரால் கடவுளாக (god) பார்க்கப்படுகிறது. இந்தியாவில் பலர் இந்த நதியை 'கங்கை மாதா' (Ganga Madha) என்று தான் பெயர்ச்சொல்லியே அழைக்கிறார்கள். இத்தகைய பெருமைக்குரிய கங்கை நதி, இமையலையில் இருந்து தொடங்குவதாக கூறப்படுகிறது. ஆனால், இன்று வரை யாராலும் இந்த நதி உண்மையிலேயே இமையமலையில் எங்கிருந்து உருவாக்குகிறது என்பதை கண்டறிய முடியவில்லை. இதுவொரு நீண்டகால மர்மமாக இருக்கிறது.

கங்கை நதியை மக்கள் கடவுளாக பார்ப்பதற்கு 2 காரணங்கள் உள்ளது. முதல் காரணம், இந்த நதியின் பின்னணியில் சிவன், விஷ்ணு, பிரம்மா மூவரும் இருப்பதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் இது ஹிந்துக்களின் நம்பிக்கையை பெறுகிறது. மறுபுறம், இந்த நதியானது 2525 கி.மீ பாய்ந்து, பல கோடி மக்களுக்கு வாழ்கை அளிக்கிறது. இதனால் இதுவொரு சமத்துவ நதியாக பார்க்கப்படுகிறது.

மர்மத்தின் மேல் மர்மம்.. மைக்ரோஸ்கோப் மூலம் கங்கை நீர் ஆராய்ச்சி..

மர்மத்தின் மேல் மர்மம்.. மைக்ரோஸ்கோப் மூலம் கங்கை நீரை பார்த்தவருக்கு அதிர்ச்சி:

இந்தியாவில் 2525 கி.மீ ஓடும், கடவுள் நதி மற்றும் சமத்துவ நதி என்று அழைக்கப்படும் இந்த நதியின் நீரில் என்ன இருக்கிறது? என்பதை ஆராய்ச்சி செய்ய ஒருவர் முயன்றிருக்கிறார். கங்கை நதியில் ஓடும் வழித்தடத்தில் இருந்து ஒரு நபர் கங்கை நீரை எடுத்து, அதை மைக்ரோஸ்கோப் (microscope) கீழே வைத்து ஆராய்ந்து பார்த்திருக்கிறார். இதுவரை நாம் கனவில் கூட நினைத்து பார்த்திடாத மர்மம் இப்போது கங்கை நீரீல் காணப்பட்டிருக்கிறது.

நமது கண்களுக்கு தெரியாத மிக நுணுக்கமான விஷயங்களை மைக்ரோஸ்கோப் உதவியுடன் நம்மால் பார்க்க முடியும். குறிப்பாக, மைக்ரோஸ்கோப் மூலம் நுண்ணுயிரிகளை (Microorganisms) நம்மால் அடையாளம் காண முடியும். நம்மை சுற்றியுள்ள எல்லா பொருட்களிலும் நுண்ணுயிரிகள் வாழ்கின்றன. நமது கை, கால், முகம், உடல் மற்றும் நாக்கில் கூட நுண்ணுயிர்கள் உயிர்வாழ்கின்றன. இவற்றை நாம் மைக்ரோஸ்கோப் மூலம் மட்டுமே பார்க்க முடியும்.

கங்கை நீரில் நுண்ணுயிரிகளே இல்லையா? உண்மையாவா?

வெறும் கண்களால் பார்க்க இயலாது. இத்தகைய அறிவியல் பூர்வமான தொழில்நுட்பட் சாதனத்தை பயன்படுத்தி கங்கை நதியின் நீரை ஒருவர் ஆராய்ச்சி செய்து பார்த்திருக்கிறார். கங்கை நீரில் ஒரு நுண்ணுயிர் கூட இல்லை என்பது ஆச்சரியத்தை உருவாக்கியுள்ளது. பொதுவாக, நுண்ணுயிர்கள் முதலில் நீரில் தான் அதிகளவில் தோன்றக்கூடியது. குறிப்பாக, ஏரி, குளம், குட்டை மற்றும் ஆறு போன்ற பொது நீர்களில் நுண்ணுயிர்கள் எப்போதும் அதிகமாவே காணப்படுகிறது.

ஆனால், கங்கை நீரில் ஒரு நுண்ணுயிர் கூட இல்லை என்பது வியப்பாகவும் மர்மமாகவும் இருக்கிறது. இத்தகைய நிகழ்விற்கு சாத்தியமே இல்லையே என்று உணர்ந்த நபர், மீண்டும் அந்த நீரை உயர் திறன் கொண்ட மைக்ரோஸ்கோப்பில் ஆராய்ந்து பார்க்க முடிவு செய்து, அருகில் இருக்கும் மருத்துவமனை மைக்ரோஸ்கோப்பிலும் கூட அந்த நீரை ஆராய்ச்சி செய்திருக்கிறார். அப்போதும், கங்கை நீரில் ஒரு நுண்ணுயிரை கூட அவரால் காணமுடியவில்லை.

ஹை-டெக் மைக்ரோஸ்கோப் கீழ் கங்கை நீர் என்ன காண்பித்தது தெரியுமா?

அதி நவீன ஆய்வக மைக்ரோஸ்கோப் கருவியை பயன்படுத்திய போதிலும் நுண்ணுயிர்களை அடையாளம் காணமுடியவில்லை. இத்துடன் அந்த நபர் நின்றுவிடவில்லை. எந்தவொரு திரவ பொருளாக இருந்தாலும் சரி, அதை நீண்ட நாட்கள் வைத்திருக்கும் போது அதில் எப்படியாவது நுண்ணுயிர்கள் உருவாக்கிய தீரும் என்ற நம்பிக்கையில், அந்த நபர் 4 நாட்களுக்கு கங்கை நீரை இயல்பு நிலையில் வைத்து, பிறகு ஆராய்ச்சி செய்து பார்த்திருக்கிறார்.

அப்போதும் கங்கை நீரில் எந்தவொரு நுண்ணுயிர்களும் காணப்படவில்லை என்பதை கண்டு அதிர்ந்து போனார். இது எப்படி சாத்தியம் என்பது புரியாத புதிராக இருக்கிறது. பல அறிவியல் கோட்ப்பாடுகளை தாண்டி நீரில் நுண்ணுயிர் இல்லாமல் இருப்பது மர்மத்தின் மேல் மர்மமாக இருக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Ganga river water under high tech microscope gives shocking results check now
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X