ரூ.10 கோடி கதாபாத்திரத்தை ரூ.40 ஆயிரத்திற்கு விற்ற நண்பன்: நீதிமன்றம் அளித்த தீர்ப்பு

|

பொதுவாக கேம் மோகத்தில் சிக்கி தவிப்பவர்கள் அதிகம். அதுவும் சமீப காலமாக பப்ஜி என்ற கேம் இந்தியாவில் பெரிதளவு வளம் வந்துக் கொண்டிருக்கிறது. சில நேரங்களில் நமது நண்பர்களை பார்க்கும் போது தீவிரவாதி போல் அவனை சுடு, என்னிடம் அந்த துப்பாக்கி உள்ளது என தனியாக பேசிக் கொண்டிருப்பான். கேம் பரபரப்பாக செல்லும் நேரத்தில் தன்னையே மறந்து சத்தமாக பேச தொடங்குவான். அந்த நேரத்தில் அவரை தொந்தரவு செய்தால் அவ்வளவு தான். அந்த இடமே போர்களமாக காட்சியளிக்கும்.

ஜஸ்டிஸ் ஆன்லைன் கேம்

ஜஸ்டிஸ் ஆன்லைன் கேம்

ஜஸ்டிஸ் என்பது வென் ருயான் என்ற எழுத்தாளரின் நாவலான தி ஃபோர் கிரேட் கான்ஸ்டபிள்ஸ் என்ற அடிப்படையாகக் கொண்ட ஒரு தற்காப்புக் கலை ஆகும். இந்த தற்காப்பு கலையை மையமாக கொண்டு ஜஸ்டிஸ் ஆன்லைன் என்ற கேம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த விளையாட்டில் ஆறுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று விளையாடுவார்கள். காவியக்கதையை நெசவு செய்ய நூல்களை போன்று விளையாட்டு வீரர்கள் ஒன்றிணைந்து போரில் ஈடுபடுகிறார்கள் என தெரிவிக்கப்படுகிறது. பிவிஇ முதலாளி சண்டைகள், பிவிபி தெரு சண்டைகள் மற்றும் பிவிபி போர்கள் என மூன்று வகையாக விளையாடலாம்.

பணம் செலுத்தும் ஆன்லைன் கேம்

பணம் செலுத்தும் ஆன்லைன் கேம்

இந்த கேமில் சற்று ஆர்வமாக சென்றோமானால் அவ்வளவு தான், ஜஸ்டின் ஆன்லைன் தான் உண்மையான உலகம் நாம் வாழ்வது நிழல் உலகம் என நினைக்கத் தொடங்கி விடுவோம் என்று கூறப்படுகிறது. இந்த விளையாட்டில் கதாபாத்திரத்தின் திறமைகளையும், ஆயுதங்களையும் தங்களுக்கேற்ப தயாரித்துக் கொள்ளலாம். ஆனால் ஒருசிலவற்றை தவிர பிற அனைத்திற்கும் பணம் செலுத்த வேண்டும்.

வாட்ஸ் அப் தகவல் திருட்டு: இஸ்ரேல் நிறுவனத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ்வாட்ஸ் அப் தகவல் திருட்டு: இஸ்ரேல் நிறுவனத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ்

ரூ.10 கோடிக்கு கதாபாத்திரம்

ரூ.10 கோடிக்கு கதாபாத்திரம்

சீனாவில் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் 90 நிமிடத்திற்கு மேல் கேம் விளையாடக் கூடாது என சட்டம் உள்ளதாம். இதில் சீனாவைச் சேர்ந்த லு மௌ என்ற ஒருவர் கேம்மில் சற்று ஆர்வமாக சென்று அனைவரைவிடவும் தனது கதாபாத்திரம்தான் சிறப்பாக இருக்க வேண்டும் என்ற ஆசையில், சுமார் ரூ.10 கோடி செலவு செய்து ஒரு கதாபாத்திரத்தை தயாரித்துள்ளார்.

நண்பருக்கு அளித்த கதாபாத்திரம்

நண்பருக்கு அளித்த கதாபாத்திரம்

அப்போது தான் லு மௌ-வின் நண்பரான லி மவுஸ்செங் ரூ.10 கோடி கதாபாத்திரத்தை விளையாடுவதற்கு கேட்டுள்ளார். தனது நண்பர் தானே என்று லி-மௌவும் வழங்கியுள்ளார். நீண்ட நேரம் விளையாடியதற்கு பிறகு லு மௌ-விடம் கதாபாத்திரத்தை வழங்கு லி முடிவு செய்துள்ளார். அப்போது தான் அந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

தவறுதலாக ஆன்லைனில் விற்பனை

தவறுதலாக ஆன்லைனில் விற்பனை

அவர் ஆன்லைன் மூலம் கதாபாத்திரத்தை தனது நண்பருக்கு மாற்றும் போது, வேறு ஒருவர் ரூ.40000-த்திற்கு அந்த கதாபாத்திரத்தை விலைக்கு கேட்டுள்ளார். அப்போது லி-யும் தவறுதலாக் யெஸ் என்ற பட்டனை கிளிக் செய்துவிட்டார். நாம் தனது நண்பருக்குதான் கதாபாத்திரத்தை அனுப்பிவிட்டோம் என்று லி நினைத்துள்ளார்.

சம்பளம்: ரூ.1 லட்சம்., வேலை: தூக்கம்: விவரம் மற்றும் வேலை லிங்க் உள்ளேசம்பளம்: ரூ.1 லட்சம்., வேலை: தூக்கம்: விவரம் மற்றும் வேலை லிங்க் உள்ளே

நீதிமன்றத்தில் விசாரணை

நீதிமன்றத்தில் விசாரணை

சிறிது நேரத்திற்கு பிறகு ரூ.10 கோடி கதாபாத்திரத்திற்கு சொந்தமான லு, கேம்மை ஓபன் செய்து பார்க்கையில் அதிர்ச்சி அடைந்துள்ளார். பின் என்ன செய்வு இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்தார். இந்த சம்பவம் அந்நாட்டில் உள்ள நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது.

தீர்ப்பு வழங்கிய நீதிபதி

தீர்ப்பு வழங்கிய நீதிபதி

அதில் நீதிபதி, ரூ.10 கதாபாத்திரத்தை தயாரித்த லு-விடம்(உரிமையாளரிடம்) ஒப்படைக்க வேண்டும் எனவும் ஆனால் விற்பனைக்கு வாங்கிய நபர் எந்த தப்பும் செய்யவில்லை தவறுதலாக விற்றது உரிமையாளரின் குற்றம் என்று கூறிய நீதிபதி விற்பனைக்கு வாங்கிய நபருக்கு ரூ.9 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பளித்தார். இதுபோன்ற விஷயத்திற்கு அதிக தொகை செலவு செய்வதை நிறுத்தவேண்டும் என நீதிபதி அறிவுரை வழங்கினார்.

Best Mobiles in India

Read more about:
English summary
Gamer sues friend for accidentally selling rs 10 crore character to rs 40000!

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X