தலைவரே மீண்டும் ஒரு புதிய சாதனமா.! ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்த கேம் கண்ட்ரோலர்.!

|

ஜியோ நிறுவனம் கம்மி விலையில் புதிய சாதனங்களை அறிமுகம் செய்ய அதிக ஆர்வம் காட்டுகிறது என்றுதான் கூறவேண்டும். அதன்படி இந்நிறுவனம் புதிய ஜியோ கேம் கண்ட்ரோலரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த சாதனம் அருமையான வசதிகளுடன் வெளிவந்துள்ளது.

ஜியோ கேம் கண்ட்ரோலர்

ஜியோ கேம் கண்ட்ரோலர்

ஜியோ கேம் கண்ட்ரோலர் ஆனது ஆண்ட்ராய்டு டேப்லெட் மற்றும் ஆண்ட்ராய்டு டிவிகளுடன் இணைந்து வேலை செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பா சிறந்த கேமிங் அனுபவம் பெற இந்த கண்ட்ரோலரை ஜியோ செட் டாப் பாக்ஸ் கொண்டு பயன்படுத்த ஜியோ அறிவுறுத்துகிறது.

இது வயர்லெஸ் கேமிங் கண்ட்ரோலர்

அதேபோல் இது வயர்லெஸ் கேமிங் கண்ட்ரோலர் ஆகும். பின்பு இதில் நீண்ட பேக்கப் வழங்கும் ரீசார்ஜ் செய்யக் கூடிய பேட்டரி உள்ளது. பின்பு இதன் எடை மிகவும் குறைவு. குறிப்பாக இந்த ஜியோ கேமிங் கண்ட்ரோலர் சாதனத்தில் இரண்டு வைப்ரேஷன் மோட்டார்கள், இரண்டு பிரெஷர் பாயிண்ட் ட்ரிகர்கள், ப்ளூடூத் வசதி உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

ஏர்டெல் அறிமுகம் செய்த மூன்று ஏர்டெல் அறிமுகம் செய்த மூன்று "ஆல் இன் ஒன்" திட்டம்- இணையம், ஓடிடி அணுகல், டிவி சேனல் சேவை!

ப்ளூடூத் வசதி கொண்ட ஆண்ட்ராய்டு

மேலும் ப்ளூடூத் வசதி கொண்ட ஆண்ட்ராய்டு சாதனங்களுடன் இணைந்து செயல்படும் வகையில் இந்த ஜியோ கேமிங் கண்ட்ரோலர் உருவாக்கப்பட்டுள்ளது. பின்பு இந்த வயர்லெஸ் கேமிங் கண்ட்ரோலர் ஆனது 10 மீட்டர் வரையிலான வயர்லெஸ் ரேன்ஜ் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடடா., வேற லெவல்- ஐபோன் 13 சாதனத்துக்கு ரூ.27,000 தள்ளுபடி: சரி., ஐபோன் 14 வரப்போகுதே இதை வாங்கலாமா?அடடா., வேற லெவல்- ஐபோன் 13 சாதனத்துக்கு ரூ.27,000 தள்ளுபடி: சரி., ஐபோன் 14 வரப்போகுதே இதை வாங்கலாமா?

 நிறுவனம் அறிமுகம் செய்துள்ள இந்த

ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ள இந்த புதிய சாதனம் ஜியோ அதிகாரப்பூர்வ வலைதளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. மேலும் இந்த சாதனத்தின் விலை ரூ.3,499-ஆக உள்ளது. குறிப்பாக இந்த கேம் கண்ட்ரோலருக்கு வட்டியில்லா மாத தவணை முறை வசதியும் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 ஏர்டெல், வோடபோன் ஐடியா

அதேபோல் ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களுக்கு போட்டி கொடுக்கும் வகையில் பல அசத்தலான திட்டங்கள் மற்றும் சலுகைகளை வழங்கி வருகிறது ஜியோ நிறுவனம். குறிப்பாக ஜியோ நிறுவனத்திற்கு தான் அதிக வாடிக்கையாளர்கள் உள்ளனர்.பின்பு கடந்த ஆண்டின் இறுதியில் ஜியோ நிறுவனம் கட்டணங்களை உயர்த்தியது.

முடிவுதான் என்ன: காலையில் ஒன்னு சொல்றாங்க., மாலையில் ஒன்னு சொல்றாங்க- ஆதார் அறிவுறுத்தல் விவகாரம்!முடிவுதான் என்ன: காலையில் ஒன்னு சொல்றாங்க., மாலையில் ஒன்னு சொல்றாங்க- ஆதார் அறிவுறுத்தல் விவகாரம்!

 கடந்த டிசம்பர் மாதம் முதல் ஜி

அதன்பின்பு, கடந்த டிசம்பர் மாதம் முதல் ஜியோ நிறுவனம் தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் வாடிக்கையாளர்களை இழந்துகொண்டே வந்தது. இந்நிலையில் மார்ச்மாதத்தில் ஒருவழியாக ஜியோ நிறுவனத்தின் இழப்புகள் முடிவுக்கு வந்து புதிய வாடிக்கையாளர்களை சேர்த்துள்ளனர்.

புதிய iPhone 14 மற்றும் iOS 16 பற்றிய சுவாரசிய தகவல்.. ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுமா ஆப்பிள்?புதிய iPhone 14 மற்றும் iOS 16 பற்றிய சுவாரசிய தகவல்.. ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுமா ஆப்பிள்?

டிராய் அமைப்பு

டிராய் அமைப்பு வெளியிட்ட தகவலின்படி, கடந்த மார்ச் மாதத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 12.6 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை சேர்த்துள்ளது. எனவே இதன்மூலம் ஜியோ நிறுவனத்தின் மொத்த வாடிக்கையாளர் எண்ணிக்கை 40.4 கோடியாக உயர்ந்துள்ளது. குறிப்பாக மூன்று மாத இழப்புக்கு பிறகு மார்ச் மாதத்தில் வாடிக்கையாளர்கள் அதிகரித்துள்ளது முகேஷ் அம்பானிக்கு மகிழ்ச்சி செய்தியாக வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 வோடபோன் ஐடியா நிறுவனம் கடந்த

அதேசமயம் வோடபோன் ஐடியா நிறுவனம் கடந்த மார்ச் மாதத்தில் 28.1 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக மற்ற நிறுவனங்கள்
வாடிக்கையாளர்களை இழந்தாலும் ஏர்டெல் டிசம்பர் மாதம் முதல் தொடர்ந்து புதிய வாடிக்கையாளர்களை சேர்த்து வந்தது. அதன்படி கடந்த மார்ச் மாதத்தில் ஏர்டெல் நிறுவனம் 22.5 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை இணைத்துள்ளது. குறிப்பாக ஏர்டெல்நிறுவனத்தின் மொத்த வாடிக்கையாளர் எண்ணிக்கை 36 கோடியாக உள்ளது என்பதுகுறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Game controller introduced by Reliance Jio: full details: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X