கேலக்ஸி நோட் 7 (GT-N5100) டேப்லெட்

Posted By: Staff

கேலக்ஸி நோட் 7 (GT-N5100) டேப்லெட்

கேலக்ஸி நோட் 7 டேப்லெட்டானது GLபென்ச்மார்க் என்ற தரச்சாற்று நிறுவனத்தில் சோதனைக்கு உற்படுத்தப்பட்டது. GT-N5100 என்ற எண்கள் சாம்சங் கைபேசிக்கான குறியீடாகும். இதன் மூலம் சாம்சங் நிறுவனம் 7 அங்குல திரைகொண்ட கேலக்ஸி நோட் என்ற டேப்லெட்டை வெளியிடுமெனத்தெரிகிறது.

 

இந்த தகவலை பென்ச்மார்க் நிறுவனமும் உறுதிசெய்துள்ளது. கேலக்ஸி நோட் 7ஆனது, 1.6 GHz எக்ஸிநோஸ் 4412 ப்ராசெசர் மற்றும் 1280 x 800 என்ற அளவுகொண்ட திரையையும் தன்னகத்தே கொண்டுள்ளது.

 

மேலும் இந்த கேலக்ஸி நோட் 7ஆனது ஆன்ட்ராய்டு 4.1.2 இயங்குதளத்தையும் கொண்டு செயல்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சாதனம் வரும் 2013 முதல் விற்பனைக்கு வரலாமெனத் தெரிகிறது.

 

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot