கையில் வெடித்த கேலக்ஸி ரூ.92,534 காலி.!!

By Meganathan
|

ஸ்மார்ட்போன்கள் வெடிப்பது இன்று மிகவும் சாதாரண விடயம் ஆகிவிட்டது. புதிய கருவி வாங்கிய சில நாட்களில் வெடிப்பது பயனர்களை ஆதிர்ச்சியில் ஆழ்த்தினாலும் கூடவே மாற்றுக் கருவியை புதிதாகவும் கிடைக்கின்றது. ஒரு முறைப் போன் வெடித்ததும் அது மீண்டும் வெடிக்கும் அபாயத்துடனே பயன்படுத்த வேண்டியுள்ளது.

சாம்சங் கேலக்ஸி நோட் 7

சாம்சங் கேலக்ஸி நோட் 7

இதுபோல் சமீபத்தில் வெடித்துச் சிதறிய ஸ்மார்ட்போன் அதன் பயனாளிக்கு ரூ.92,354 வரை செலவு வைத்திருக்கின்றது. ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற இந்தச் சம்பத்தில் புத்தம் புதிய சாம்சங் கேலக்ஸி நோட் 7 வெடித்துள்ளது.

தங்கும் விடுதி

தங்கும் விடுதி

கருவி வெடித்து அதன் மூலம் ஏற்பட்ட தீ தங்கும் விடுதி அறை முழுக்க பரவியதால் 1,800 ஆஸ்திரேலியா டாலர்கள் மதிப்புடைய பொருட்கள் சேதமடைந்திருக்கின்றது. ஆஸ்திரேலியாவில் பதிவு செய்யப்பட்ட முதல் சம்பவம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது. இத்தகவலை ஸ்மார்ட்போன் பயனர் ரெடிட் மூலம் பதிவு செய்திருக்கின்றார்.

சார்ஜ்

சார்ஜ்

'காலையில் உறங்கிக் கொண்டிருக்கும் போது சார்ஜரில் இருந்த கேலக்ஸி நோட் 7 திடீரென வெடித்து அதிலிருந்து தீ பரவத் துவங்கியது. போன் முழுக்க எரிந்து விட்டதால் சிம் கார்டு மற்றும் எஸ்டி கார்டு போன்றவற்றை எடுக்க இயலவில்லை. நான் போன் சார்ஜ் செய்ய சாம்சங் வழங்கிய சார்ஜரையே பயன்படுத்தினேன்', என ரெடிட் பதிவில் அவர் பதிவு செய்திருக்கின்றார்.

சாம்சங்

சாம்சங்

இச்சம்பவம் குறித்து சாம்சங் நிறுவனத்திடம் தெரிவித்த போது, ஆஸ்திரேலியாவில் இதுவே முதல் சம்பவம் என்றும், தற்சமயம் பயன்படுத்த ஜெ1 கருவி வழங்கப்பட்டுள்ளது - தங்கும் விடுதி கட்டணங்களை சாம்சங் நிறுவனம் வழங்குவதாக உறுதியளித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜூப்

ஜூப்

இதே போல் அமெரிக்காவிலும் கேலக்ஸி நோட் 7 வெடித்து ஜூப் வாகனம் முழுக்க தீயில் கருகியுள்ளது. தனது காரில் கருவியை சார்ஜர் செய்யும் போது கேலக்ஸி நோட் 7 வெடித்து அதில் இருந்து தீ பரவியதாகக் கருவியின் பயனர் தெரிவித்துள்ளார்.

பேட்டரி

பேட்டரி

சாம்சங் நிறுவனத்தின் புதிய கருவி உலகின் பல்வேறு பகுதிகளிலும் வெடித்துச் சிதறும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றது. இதனைத் தொடர்ந்து சாம்சங் நிறுவனம் இந்தக் கருவிகளை திரும்பப் பெறுவதாக கடந்த வாரம் அறிவித்ததும் குறிப்பிடத்தக்கது. பேட்டரி தயாரிப்பு பணிகளில் ஏற்பட்ட பிழை காரணமாகக் கருவிகள் வெடித்துச் சிதறியது தெரியவந்திருக்கின்றது.

Best Mobiles in India

English summary
Galaxy Note 7 Explodes And Causes $1,400 Worth Of Damage Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X