சாம்சங் ஸ்மார்ட்போன்களின் மீது ரூ.8000/- வரை தள்ளுபடி; மார்ச் 8 வரை மட்டுமே.!
இந்த சாம்சங் கார்னிவல் சலுகையில்கீழ் என்னென்ன ஸ்மார்ட்போன்கள் கிடைக்கும்.? அதன் விலை நிர்யணம் என்ன.? என்பதை விரிவாக காண்போம்.
பிரபல இ-காமர்ஸ் வலைத்தளமான ப்ளிப்கார்ட் அதன் சாம்சங் கார்னிவல் சலுகையை இன்று அறிவித்துள்ளது. இந்த சலுகையானது இன்று தொடங்கு (மார்ச் 5) மார்ச் 8 வரை நீடிக்கும். இந்த விற்பனை திருவிழாவில் சாம்சங் நிறுவனத்தின் பிரீமியம் கருவிகள் விற்பனைக்கு வருகிறது.
இந்த சாம்சங் கார்னிவல் சலுகையில்கீழ் என்னென்ன ஸ்மார்ட்போன்கள் கிடைக்கும்.? அதன் விலை நிர்யணம் என்ன.? என்பதை விரிவாக காண்போம்.

சாம்சங் கேலக்ஸி ஏ8 ப்ளஸ்
இந்த விற்பனையில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட சாம்சங் கேலக்ஸி ஏ8 ப்ளஸ் ஸ்மார்ட்போன் உடன் கடந்த ஆண்டு அறிமுகமான சாம்சங் கேலக்ஸி நோட் 8 ஆகிய கருவிகளுக்கு முறையே ரூ.4000/- மற்றும் ரூ.8000/- வரை கேஷ்பேக் சலுகை கிடைக்கிறது என்பது சிறப்பம்சம்.

சாம்சங் கேலக்ஸி நோட் 8
இருப்பினும் கேலக்ஸி ஏ8 ப்ளஸ் மற்றும் கேலக்ஸி நோட் 8 கருவிகளின் மீதான கேஷ்பேக் வாய்ப்பை பெற வாடிக்கையாளர்கள் இக்கருவிகளை அமேசான் பே வேலட் மூலம் மட்டுமே வாங்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.4000/- மதிப்பிலான கேஷ்பேக்
அதாவது ரூ.32,990/-க்கு அறிமுகமான சாம்சங் கேலக்ஸி ஏ8+ ஸ்மார்ட்போன் ஆனது இந்த விற்பனை திருவிழாவின் கீழ் ரூ.28,990/-க்கு வாங்க கிடைக்கும். அதாவது ரூ.4000/- மதிப்பிலான கேஷ்பேக் வாய்ப்பை பெறலாம். முன்னரே குறிப்பிட்டபடி இதை நீங்கள் அமேசான் பே வேலட் வழியாக வாங்க வேண்டும்.

ரூ.8000/- மதிப்பிலான கேஷ்பேக்
மறுகையில் உள்ள கேலக்ஸி நோட் 8 ஆனது இந்தியாவில் ரூ. 67,900/-க்கு அறிமுகமானது. இந்த விற்பனையின் கீழ் இக்கருவி ரூ.ரூ. 59,900/-க்கு வாங்க கிடைக்கும். அதாவது ரூ.8000/- மதிப்பிலான கேஷ்பேக் வாய்ப்பை பெறலாம். இக்கருவியையும் அமேசான் பே வேலட் வழியாக மட்டுமே வாங்க கிடைக்கிறது.

கேலக்ஸி ஆன்7 ப்ரைம்
மேலும் இந்த ப்ளிப்கார்ட் சலுகை தினங்களில் கேலக்ஸி ஆன்5 மற்றும் ஆன்7 தொடர் ஸ்மார்ட்போன்களும் தள்ளுபடி விலையின் கீழ் வாங்க கிடைக்கும். கேலக்ஸி ஆன்7 ப்ரைம் ஸ்மார்ட்போனின் 4ஜிபி மற்றும் 32ஜிபி அளவிலான உள்ளாக்க சேமிப்பு மாறுபாடானது முறையே ரூ.12,990/- மற்றும் ரூ.10,990/-க்கு வாங்க கிடைக்கும்.

கேலக்ஸி ஆன்5 ப்ரோ
அதாவது ஆன்7 கருவிகள் மீது ரூ.2000/- மதிப்பிலான கேஷ்பேக் கிடைக்கும் என்று அர்த்தம். இந்த வாய்ப்பை அமேசான் பே வேலட் வழியாக மட்டுமே அணுக முடியும். மறுகையில் உள்ள கேலக்ஸி ஆன்5 ப்ரோ ஆனது ரூ.6,490/- என்கிற ஆரம்ப விலையின்கீழ் விற்பனைக்கு திறந்துவிடப்பட்டுள்ளது.

எஸ்பிஐ மீது 5 சதவீத கேஷ்பேக்
மேற்குறிப்பிட்ட சாம்சங் ஸ்மார்ட்போன்கள் தான் இந்த கார்னிவல் விற்பனையில் கிடைக்கப்பெறும் பிரதான கருவிகளாகும். உடன் கூடுதலாக எஸ்பிஐ கிரெடிட் கார்ட் மூலம் வாங்கினால், 5 சதவீத கேஷ்பேக் வாய்ப்பையும் ப்ளிப்கார்ட் வழங்குகிறது, ஆனால் இந்த வாய்ப்பானது தேர்ந்தெடுக்கப்பட்ட சாம்சங் கைபேசிகளில் மட்டுமே உள்ளது.


சாம்சங் கேலக்ஸி எஸ்9 மற்றும் கேலக்ஸி எஸ்9 ப்ளஸ்
இதற்கிடையில், சாம்சங் கேலக்ஸி எஸ்9 மற்றும் கேலக்ஸி எஸ்9+ ஆகிய ஸ்மார்ட்போன்கள், நாளை இந்தியாவில் அறிமுகமாகவுள்ளது. அதாவது மார்ச் 6 அன்று அறிமுகமாகி வருகிற மார்ச் 16-ஆம் தேதிக்குள் விற்பனைக்கு வரும் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் பல ஸ்மார்ட்போன்கள் பற்றிய அப்டேட்ஸ்களுக்கு தமிழ் கிஸ்பாட் உடன் இணைந்திருக்கவும்.


Click it and Unblock the Notifications