கேலக்ஸி ஏ8 & கேலக்ஸி ஏ8பிளஸ் (2018) வெளியீட்டு தேதி அறிவிப்பு.!
சாம்சங் கேலக்ஸி ஏ8 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 6.0-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பை கொண்டுள்ளது, அதன்பின்பு (1080x2220)) பிக்சல் தீர்மானம் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ8 மற்றும் கேலக்ஸி ஏ8பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல்களை வரும் ஜனவரி 6-ம் தேதி அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன்கள் ஐரோப்பாவில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்திய மொபைல் சந்தையில் கேலக்ஸி ஏ8 மற்றும் கேலக்ஸி ஏ8பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல்கள் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள் அறிமுகப்படுத்தப்படும எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேலக்ஸி ஏ8:
சாம்சங் கேலக்ஸி ஏ8 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 5.6-இன்ச் முழு எச்டி பிளஸ் சூப்பர் அமோல்ட் டிஸ்பிளே வடிவமைப்பை கொண்டுள்ளது,
அதன்பின்பு (1080x2220) பிக்சல் தீர்மானம் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

கேலக்ஸி ஏ8பிளஸ்:
சாம்சங் கேலக்ஸி ஏ8 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 6.0-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பை கொண்டுள்ளது,
அதன்பின்பு (1080x2220) பிக்சல் தீர்மானம் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். மேலும் இந்த இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்கள்
கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்புடன் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேலக்ஸி ஏ8 (2018) கேமரா:
16எம்பி 10 8 எம்பி என்கிற இரட்டை முன்பக்க கேமரா கேலக்ஸி ஏ8 (2018) ஸ்மார்ட்போன் ஆனது, எப் ஃ 1.9 துளையுடனான 16எம்பி 10 8 எம்பி என்கிற இரட்டை முன்பக்க கேமராவை கொண்டுள்ளது. அதாவது ஒருவழியாக சாம்சங் போர்ட்ரியட் படங்களை எடுக்க அனுமதிக்கும் என்று அர்த்தம். பின்புறத்தில், கேலக்ஸி ஏ8 (2018) ஒரே ஒரு கேமராவுடன் தொடர்கிறது, இது எப் ஃ 1.7 துளையுடனான 16எம்பி ரியர் கேமராவை கொண்டுள்ளது.

கைரேகை ஸ்கேனர் :
மேலும் இரண்டு கருவிகளுமே மேக்னட்டிக் செக்யூர் டிரான்ஸ்மிஷன் (MST) மற்றும் நியர் பீல்ட் கம்யூனிகேஷன் (NFC) ஆகிய அம்சங்களையும்
கொண்டுள்ளன. கைரேகை ஸ்கேனர் ஆனது கேலக்ஸி ஏ8 தொடரில் கருவிகளின் கேமரா தொகுதியின் கீழே பொதிக்கப்பட்டுள்ளது.

மெமரி:
இரண்டு தொலைபேசிகளுமே ஐபி68 நீர் மற்றும் தூசி எதிர்ப்பு சான்றிதழ் மற்றும் 256ஜிபி வரையிலாக மைக்ரோ எஸ்டி அட்டை ஸ்லாட் கொண்டு நீட்டிக்கும் மெமரி ஆதரவு கொண்டுள்ளன. கேலக்ஸி ஏ8 (2018) தொடர் தான் சாம்சங் கியர் விஆர் ஹெட்செட் ஆதரவு கொண்டு வெளியாகும் முதல் ஏ தொடர் கருவிகளாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பேட்டரி
கேலக்ஸி ஏ8 ஸ்மார்ட்போன் ஆனது ஒரு 3000 எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளது, பெரிய மாறுபாடான ஏ8 ப்ளஸ் ஆனது 3500 எம்ஏஎச் பேட்டரி கொண்டிருக்கிறது. முன்னர் குறிப்பிட்டபடி, இரு தொலைபேசிகளுமே ஒரே மாதிரியான பின்புற மற்றும் முன்னணி கேமிராக்களை கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications