ககன்யான் திட்டத்தின் முக்கிய மைல்கல்-திருநெல்வேலியில் நடந்த என்ஜின் சோதனை வெற்றி:இஸ்ரோ பெருமிதம்-அடுத்து என்ன?

|

ககன்யான் திட்டத்துக்கான கிரையோஜெனிக் என்ஜின் தகுதிச் சோதனையை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தமிழகத்தில் மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ ப்ராபல்ஷன் வளாகத்தில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இந்த சோதனையானது 720 வினாடிக்கு நடத்தப்பட்டது. ஐபிஆர்சி வளாகத்தில் 720 வினாடிகளுக்கு செய்யப்பட்டது.

மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ வளாகம்

மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ வளாகம்

தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டம் மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ வளாகத்தில் இந்த சோதனை நடத்தப்பட்டது. இதுகுறித்த இஸ்ரோ தகவலின்படி, என்ஜினின் செயல்திறன் சோதனை நோக்கங்களின் அனைத்து அம்சங்களிலும் செயல்திறன் நிவர்த்தியாக பூர்த்தி செய்யப்பட்டது. இந்த வெற்றி ககன்யான் திட்டத்தின் மிகப் பெரிய மைல்கல் என நிறுவனம் தெரிவித்துள்ளது. மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டமானது வெற்றிகரமான நீண்ட கால சோதனையாகும். என்ஜின் சோதனையில் இதன் நம்பகத்தன்மை மற்றும் வலிமையை உறுதி செய்துள்ளது.

மேலும் நான்கு சோதனைகள்

மேலும் நான்கு சோதனைகள்

இந்த என்ஜின் மேலும் நான்கு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இந்த சோதனையானது 1810 வினாடிகளுக்கு நடக்க இருக்கிறது. ககன்யான் திட்டத்திற்கான கிரையோஜெனிக் என்ஜின் முழு தகுதியை முடிக்க இயந்திரம் இரண்டு குறுகிய கால சோதனைகள் மற்றும் ஒரு நீண்ட கால சோதனைக்கு உட்படுத்தப்பட இருக்கிறது. தொடர்ந்து ககன்யான் திட்டம் பல கட்டங்கள் முன்னேறி வருகிறது. இந்த திட்டத்தின் சோதனை தொடர்ந்து வெற்றி பெற்று வருவது இஸ்ரோ நிறுவனத்தை பல கட்டம் முன்னோக்கி எடுத்து செல்லும் வகையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்திய வர்த்தகம் மற்றம் தொழில் கூட்டமைப்பு

இந்திய வர்த்தகம் மற்றம் தொழில் கூட்டமைப்பு

இந்திய வர்த்தகம் மற்றம் தொழில் கூட்டமைப்பின் சார்பாக, எதிர்கால விண்வெளி தொழில்நுட்பம் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. அதில் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக விண்வெளித் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியது என்னவென்றால், ககன்யான் திட்டம் கொரோனா காரணமாக தாமதமாகி விட்டது. இருந்தபோதிலும் அடுத்த ஆண்டு இறுதியிலோ அல்லது 2023-ம் ஆண்டு தொடக்கத்திலோ ககன்யான் விண்கலம் செலுத்தப்படும் என்று கூறினார்.

மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் திட்டம்

எனவே அடுத்த ஆண்டு இறுதியிலோ அல்லது 2023-ம் ஆண்டு தொடக்கத்திலோ ககன்யான் திட்டத்தில் மூன்று பேர் விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்படுவர் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் பசிபிக் தீவு நாடுகள் இந்தியாவுடன் இணைந்து விண்வெளி தொழில்நுட்ப தீர்வுகளை தரவும், புதிய பொருட்களின் கண்டுபிடிப்பில் ஈடுபடவும் வாய்புக்கள்உள்ளன என்று விண்வெளித் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் கூறினார். இஸ்ரோ நிறுவனம் ஏற்கனவே விண்வெளி வீரர்களை தேர்ந்தெடுத்துள்ள நிலையில் அவர்களுக்கும் ரஷ்யாவின் ககரின் விண்வெளி பயிற்சி மையத்தில் சிறப்பான பயிற்சி கொடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்பு உணவு ஆராய்ச்சி ஆய்வகம்

பாதுகாப்பு உணவு ஆராய்ச்சி ஆய்வகம்

குறிப்பாக பாதுகாப்பு உணவு ஆராய்ச்சி ஆய்வகம் விண்வெளிக்கு செல்லும் வீரர்களுக்கு தேவையான இந்திய உணவுகள் பட்டியலை தயாரிக்க ஏறக்குறைய இரண்டுகள் ஆய்வு செய்தது. பின்பு இந்த பட்டியலில் மூங் தால் ஹல்வா, சூஜி ஹல்வா, உலர்ந்த பாதாம் ஆகியவை வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக அப்பல்லோ பயணத்தின்போது நாசா அமைப்பு தனது விண்வெளிவீரர்களுக்கு அன்னாசி கேக், பீச், சாக்லெட் புட்டு,பிரவுனிகள் ஆகியவை வழங்கின என்பது குறிப்பிடத்தக்கது.

உணவில் 2500 கலோரிகள் வரை சேர்க்கப்படும்

உணவில் 2500 கலோரிகள் வரை சேர்க்கப்படும்

விண்வெளி வீரர்கள் ஒருநாளைக்கு மூன்றுவேளை சாப்பிடுவார்கள் எனவும் உணவில் 2500 கலோரிகள் வரை சேர்க்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு அமெரிக்க விண்வெளி வீரர்கள் தங்கள் சுவைக்கு ஏற்ற உணவை எடுத்து செல்கின்றனர் எனவும் அதேபோல் இந்தியர்கள் வீட்டு உணவை போல சுவைக்க எடுத்து செல்கின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சந்திரயான் -2 விண்கலம் சமீபத்தில் தனது இரண்டாம் ஆண்டு நிறைவை நிறைவு செய்துள்ளது. இந்த மகிழ்ச்சியான வெற்றி செய்தியுடன், சந்திரயான் -2 விண்கலம் நிலவில் நீர் இருப்பதற்கான அடையாளங்களைக் கண்டறிந்துவிட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேபோல் இஸ்ரோ அமைப்பு தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Gaganyann Cryogenic Engine Successfully Tested by ISRO in Mahendragiri TamilNadu

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X