ககன்யான் திட்டம் எப்போது செயல்படுத்தப்படும்? மத்திய மந்திரி புதிய தகவல்.!

|

கடந்த ஜூலை மாதம் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தில், விண்கலத்தின் இன்ஜின் சோதனை வெற்றி பெற்றதாக இஸ்ரோ அறிவித்தது. இந்நிலையில் தற்போது வெளிவந்த தகவலின்படி, ககன்யான் திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

 டெல்லியில், இந்திய வர்த்தகம் மற்றம்

குறிப்பாக டெல்லியில், இந்திய வர்த்தகம் மற்றம் தொழில் கூட்டமைப்பின் சார்பாக, எதிர்கால விண்வெளி தொழில்நுட்பம் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. அதில் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக விண்வெளித் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியது என்னவென்றால், ககன்யான் திட்டம் கொரோனா காரணமாக தாமதமாகி விட்டது. இருந்தபோதிலும் அடுத்த ஆண்டு இறுதியிலோ அல்லது 2023-ம் ஆண்டு தொடக்கத்திலோ ககன்யான் விண்கலம் செலுத்தப்படும் என்று கூறியுள்ளார்.

ஆண்டு இறுதியிலோ அல்லது

எனவே அடுத்த ஆண்டு இறுதியிலோ அல்லது 2023-ம் ஆண்டு தொடக்கத்திலோ ககன்யான் திட்டத்தில் மூன்று பேர் விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்படுவர் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் பசிபிக் தீவு நாடுகள் இந்தியாவுடன் இணைந்து விண்வெளி தொழில்நுட்ப தீர்வுகளை தரவும், புதிய பொருட்களின் கண்டுபிடிப்பில் ஈடுபடவும் வாய்புக்கள்உள்ளன என்று விண்வெளித் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.

ஆப்பிள் ஐபோன் 13 மாடலுக்கு போட்டியாக சியோமி அறிமுகம் செய்த Xiaomi 11T, Xiaomi 11T Pro ஸ்மார்ட்போன்..ஆப்பிள் ஐபோன் 13 மாடலுக்கு போட்டியாக சியோமி அறிமுகம் செய்த Xiaomi 11T, Xiaomi 11T Pro ஸ்மார்ட்போன்..

ஸ்ரோ நிறுவனம் ஏற்கனவே விண்வெளி

குறிப்பாக இஸ்ரோ நிறுவனம் ஏற்கனவே விண்வெளி வீரர்களை தேர்ந்தெடுத்துள்ள நிலையில் அவர்களுக்கும் ரஷ்யாவின் ககரின் விண்வெளி பயிற்சி மையத்தில் சிறப்பான பயிற்சி கொடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Xiaomi 11T மற்றும் Xiaomi 11T Pro போன்களின் அறிமுகத்தை லைவ் பார்ப்பது எப்படி? இது வீடியோ லிங்க் உள்ளே..Xiaomi 11T மற்றும் Xiaomi 11T Pro போன்களின் அறிமுகத்தை லைவ் பார்ப்பது எப்படி? இது வீடியோ லிங்க் உள்ளே..

மாதம் GSLV MK III விண்கலத்தின்

கடந்த ஜூலை மாதம் GSLV MK III விண்கலத்தின் திரவ இஞ்சின் பரிசோதனை செய்யப்பட்டு, இதற்கான வெப்பபரிசோதனை நடைபெற்றது. சுமார் 240 வினாடிகள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அதற்குரிய கவுன்ட்டவுன் தொடங்கி
பரிசோதிக்கப்பட்ட நிலையில்,வெப்பபரிசோதனை வெற்றி பெற்றதாக இஸ்ரோ அமைப்புதெரிவித்தது.

பெண்களின் முகங்களை ஆபாச வீடியோக்களில் பதிவிடும் திகிலூட்டும் புதிய AI ஆப்.. உஷார் பெண்களே.!பெண்களின் முகங்களை ஆபாச வீடியோக்களில் பதிவிடும் திகிலூட்டும் புதிய AI ஆப்.. உஷார் பெண்களே.!

துகாப்பு உணவு ஆராய்ச்சி ஆய்வகம்

குறிப்பாக பாதுகாப்பு உணவு ஆராய்ச்சி ஆய்வகம் விண்வெளிக்கு செல்லும் வீரர்களுக்கு தேவையான இந்திய உணவுகள் பட்டியலை தயாரிக்க ஏறக்குறைய இரண்டுகள் ஆய்வு செய்தது. பின்பு இந்த பட்டியலில் மூங் தால் ஹல்வா, சூஜி ஹல்வா, உலர்ந்த பாதாம் ஆகியவை வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக அப்பல்லோ பயணத்தின்போது நாசா அமைப்பு தனது விண்வெளிவீரர்களுக்கு அன்னாசி கேக், பீச், சாக்லெட் புட்டு,பிரவுனிகள் ஆகியவை வழங்கின என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதான் ஃபர்ஸ்ட்- 1 டிபி சேமிப்பு, திரைப்பட தர கேமரா பதிவுடன் ஐபோன் 13 ப்ரோ, ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் அறிமுகம்!இதுதான் ஃபர்ஸ்ட்- 1 டிபி சேமிப்பு, திரைப்பட தர கேமரா பதிவுடன் ஐபோன் 13 ப்ரோ, ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் அறிமுகம்!

 ஒருநாளைக்கு மூன்றுவேளை

விண்வெளி வீரர்கள் ஒருநாளைக்கு மூன்றுவேளை சாப்பிடுவார்கள் எனவும் உணவில் 2500 கலோரிகள் வரை சேர்க்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு அமெரிக்க விண்வெளி வீரர்கள் தங்கள் சுவைக்கு ஏற்ற உணவை எடுத்து செல்கின்றனர் எனவும்
அதேபோல் இந்தியர்கள் வீட்டு உணவை போல சுவைக்க எடுத்து செல்கின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சந்திரயான் -2 விண்கலம் சமீபத்தில் தனது இரண்டாம் ஆண்டு நிறைவை நிறைவு செய்துள்ளது. இந்த மகிழ்ச்சியான வெற்றி செய்தியுடன், சந்திரயான் -2 விண்கலம் நிலவில் நீர் இருப்பதற்கான அடையாளங்களைக் கண்டறிந்துவிட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேபோல் இஸ்ரோ அமைப்பு தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Gaganyaan mission will be launched at the end of 2022: Jitendra Singh: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X