இஸ்ரோவின் ககன்யான் திட்டத்தில் விண்ணுக்கு செல்லும் வியோமமித்ரா! யார் இந்த வியோமமித்ரா?

|

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கு முன்னோடியாக மனித உருவிலான பெண் ரோபோவை முதலில் விண்வெளிக்கு அனுப்ப இஸ்ரோ முடிவு செய்துள்ளது. கர்நாடகாவின் பெங்களூரு நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு இஸ்ரோ தலைவர் சிவன் இந்த பெண் ரோபோவை அறிமுகம் செய்து வைத்தார்.

இஸ்ரோவின் வியோமமித்ரா

இஸ்ரோவின் வியோமமித்ரா

மனிதர்களுக்கு முன்னாள் விண்வெளிக்குச் செல்லப் போகும் இந்த பெண் ரோபோவுக்கு இஸ்ரோ வைத்துள்ள பெயர்தான் 'வியோமமித்ரா'. சமஸ்கிருதத்தில் 'வியோம' என்றால் விண்வெளி என்று பொருள். அதேபோல் 'மித்ரா' என்றால் தோழி என்பது பொருள். இந்த இரண்டு வார்த்தைகளையும் ஒன்றிணைத்துத் தான் இஸ்ரோ 'வியோமாமித்ரா' என்று பெயர் வைத்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வியோமமித்ரா பெண் ரோபோ

வியோமமித்ரா பெண் ரோபோ

இஸ்ரோவின் இந்த வியோமமித்ரா பெண் ரோபோ மாதிரிகளின் அளவுகளைக் கண்காணித்தல், ஆபத்துக் காலத்தில் எச்சரிக்கை தகவல் தெரிவித்தல், மேலும் ஸ்விட்ச் பேனல் செயல்பாட்டைக் கட்டுப்படுத்தும் திறன், விண்வெளிக்கும் வரும் விண்வெளி வீரர்களுடன் உரையாடும் திறன் மற்றும் விண்வெளி வீரர்களின் சந்தேகங்களுக்குப் பதில் அளிக்கும் திறன் போன்று பல திறன்கள் வியோமமித்ராவிற்கு வழங்கப்பட்டுள்ளது என்று சிவன் தெரிவித்தார்.

வாட்ஸ்அப் டார்க் தீம் இறுதியாக வெளியிடப்பட்டது! எப்படி டார்க் தீம் ஆக்டிவேட் செய்யலாம்?வாட்ஸ்அப் டார்க் தீம் இறுதியாக வெளியிடப்பட்டது! எப்படி டார்க் தீம் ஆக்டிவேட் செய்யலாம்?

விண்ணுக்கு செல்லும் விண்வெளி வீரர்

விண்ணுக்கு செல்லும் விண்வெளி வீரர்

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்தும் முயற்சியில் இஸ்ரோ முழு முயற்சியுடன் ஈடுபட்டு வருகிறது. இந்த ககன்யான் திட்டத்தின் கீழ் வரும் 2022ம் ஆண்டு, 3 விண்வெளிவீரர் கொண்ட குழு விண்வெளிக்குச் செல்ல உள்ளது. முதல் முறையாக இந்திய விண்வெளி வீரர்கள் இந்தியாவிலிருந்து இந்திய விண்கலத்தில் விண்வெளிக்குப் பயணம் செய்ய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

20 ஆண்டில் ஒரு நாள் கூட லீவுவிடலை கிளிக் பண்ணிட்டே தான் இருந்தேன்!பலவீனமாக உள்ளவர் பார்க்க வேண்டாம்20 ஆண்டில் ஒரு நாள் கூட லீவுவிடலை கிளிக் பண்ணிட்டே தான் இருந்தேன்!பலவீனமாக உள்ளவர் பார்க்க வேண்டாம்

 ரஷ்யாவிற்கு பயிற்சிக்காக செல்லும் இந்திய விண்வெளி வீரர்கள்

ரஷ்யாவிற்கு பயிற்சிக்காக செல்லும் இந்திய விண்வெளி வீரர்கள்

ககன்யான் திட்டத்திற்காக இந்தியாவிலிருந்து 4 விண்வெளி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு இந்த மாத இறுதியில் ரஷ்யாவிற்கு பயிற்சிக்காக அனுப்பி வைக்கப்படவுள்ளனர். அதேபோல் கடந்த 1984ம் ஆண்டு ரஷ்ய விண்கலத்தில் ராகேஷ் சர்மா என்ற இந்திய விண்வெளி வீரர் பயணம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் சந்திரயான் 3 திட்டத்திற்கான பணிகள் தொடங்கி முழு வீச்சில் நடந்து வருகின்றது என்று சிவன் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

Best Mobiles in India

English summary
Gaganyaan mission: Meet ISRO's Vyommitra : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X