லிஸ்ட் ரொம்ப பெருசா போகுது:ககன்யான் விண்வெளி வீரர்கள் சாப்பாடு- விண்ணுக்கு செல்லும் சிக்கன் பிரியாணி, ஹல்வா!

|

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் இந்தியாவின் முதல் விண்வெளி பயணத்தை நோக்கி பணியாற்றி வருவதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோ தெரிவித்தது.

 2022 ஆம் ஆண்டில் விண்ணில் செலுத்த திட்டம்

2022 ஆம் ஆண்டில் விண்ணில் செலுத்த திட்டம்

இந்த ககன்யான் திட்டமானது 2022 ஆம் ஆண்டில் விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இஸ்ரோ நிறுவனம் ஏற்கனவே இதற்கான விண்வெளி வீரர்களைத் தேர்ந்தெடுத்துள்ள நிலையில், அவர்களுக்கு ரஷ்யாவின் ககரின் விண்வெளி பயிற்சி மையத்தில் பயிற்சி கொடுக்கப்பட்டு வருகிறது.

மனித உருவிலான பெண் ரோபோ

மனித உருவிலான பெண் ரோபோ

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கு முன்னோடியாக மனித உருவிலான பெண் ரோபோவை முதற்கட்டமாக 2021 ஆம் ஆண்டில் விண்வெளிக்கு அனுப்ப இஸ்ரோ முடிவு செய்துள்ளது. கர்நாடகாவின் பெங்களூரு நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு இஸ்ரோ தலைவர் சிவன் இந்த பெண் ரோபோவை அறிமுகம் செய்து வைத்தார்.

வியோமமித்ரா பெண் ரோபோ

வியோமமித்ரா பெண் ரோபோ

இஸ்ரோவின் இந்த வியோமமித்ரா பெண் ரோபோ மாதிரிகளின் அளவுகளைக் கண்காணித்தல், ஆபத்துக் காலத்தில் எச்சரிக்கை தகவல் தெரிவித்தல், மேலும் ஸ்விட்ச் பேனல் செயல்பாட்டைக் கட்டுப்படுத்தும் திறன், விண்வெளிக்கும் வரும் விண்வெளி வீரர்களுடன் உரையாடும் திறன் மற்றும் விண்வெளி வீரர்களின் சந்தேகங்களுக்குப் பதில் அளிக்கும் திறன் போன்று பல திறன்கள் வியோமமித்ராவிற்கு வழங்கப்பட்டுள்ளது என்று சிவன் தெரிவித்தார்.

இரண்டு ஆண்டுகள் ஆய்வு

இரண்டு ஆண்டுகள் ஆய்வு

விண்வெளிக்கு செல்லும் வீரர்களுக்கு சிறந்த தேர்ந்தெடுக்கப்பட்ட உணவுகளை வழங்க இரண்டு ஆண்டுகள் ஆய்வு நடத்தப்பட்டு ராணுவ ஆய்வகத்தில் பட்டியல் தயார் செய்யப்பட்டு வருகிறது. விண்வெளிக்கு செல்லும் வீரர்கள் ஏழு நாட்கள் விண்வெளியில் தங்க உள்ளனர்.

சிக்கன் பிரியாணி, சிக்கன் குருமா, சாஹி பன்னீர்

ஏழு நாட்கள் விண்வெளியில் தங்கும் வீரர்களுக்கு சிறந்த சுவைமிகுந்த உணவுகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் சிக்கன் பிரியாணி, சிக்கன் குருமா, சாஹி பன்னீர், ஆலு பரோட்டா, டால் சாவல், சப்பாத்தி, பீன்ஸ் சாஸ் உள்ளிட்ட உணவுகள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

ஆன்லைன் மூலம் நடைபெற்ற நீதிமன்ற விசாரணையில் திடீரென தோன்றிய 'பூனை' முகம்.! இணையத்தில் வைரல்.!

இந்திய உணவுகள் பட்டியல்

இந்திய உணவுகள் பட்டியல்

பாதுகாப்பு உணவு ஆராய்ச்சி ஆய்வகம் விண்வெளிக்கு செல்லும் வீரர்களுக்கு தேவையான இந்திய உணவுகள் பட்டியலை தயாரிக்க ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் ஆய்வு செய்தது.

மூங் தால் ஹல்வா, சூஜி ஹல்வா, உலர்ந்த பாதாம்

இந்த பட்டியலில் மூங் தால் ஹல்வா, சூஜி ஹல்வா, உலர்ந்த பாதாம் ஆகியவை வழங்கப்பட உள்ளன. முன்னதாக அப்பல்லோ பயணத்தின்போது நாசா, தனது விண்வெளி வீரர்களுக்கு அன்னாசி கேக், பீச், சாக்லெட் புட்டு, பிரவுனிகள் ஆகியவை வழங்கின.

பாதுகாப்பு உணவு ஆராய்ச்சி ஆய்வகம்

பாதுகாப்பு உணவு ஆராய்ச்சி ஆய்வகம், கடந்த வாரம் எலஹங்கா விமான தளத்தில் நடைபெற்ற ஏரோ இந்தியா 2021இல் உணவு பட்டியலை வெளியிட்டது. சிக்கன் பிரியாணி, சிக்கன் குர்மா அதேபோல் இனிமையான உணவாக மூங்தால் ஹல்வா, சூஜி ஹல்வா உள்ளிட்டவைகளும் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

2500 கலோரிகள் வரை சேர்க்கப்படும்

விண்வெளி வீரர்கள் ஒருநாளைக்கு மூன்றுவேளை சாப்பிடுவார்கள் எனவும் உணவில் 2500 கலோரிகள் வரை சேர்க்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அமெரிக்க விண்வெளி வீரர்கள் தங்கள் சுவைக்கு ஏற்ற உணவை எடுத்து செல்கின்றனர் எனவும் அதேபோல் இந்தியர்கள் வீட்டு உணவை போல சுவைக்க எடுத்து செல்கின்றனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

File Images

Most Read Articles
Best Mobiles in India

English summary
Gaganyaan Astronauts Going to Eat Indian Dishes in Space Like Chicken Biryani, Halwa

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X