Subscribe to Gizbot

'நிஜத்தில் தயாராகும் பறக்கும் தட்டு' துவக்க பணிகளில் தொழில்நுட்ப துறை.!!

Written By:

அடையாளம் தெரியாத பல்வேறு பறக்கும் தட்டுகள் கடந்த 50 ஆண்டுகளாக நம்மை குழப்பில் ஆழ்த்தி வருகின்றது. இது போன்ற அடையாளம் தெரியாத பொருள்களில் ஏலியன்கள் இருக்கலாம் என்றும் அவை பூமியை கண்கானித்து வருகின்றது என்றும் ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

இந்நிலையில் பூமியில் உண்மையாகவே ஒரு பறக்கும் தட்டு தயாரிக்க திட்டமிடப்பட்டு அதற்கான தயாரிப்பு பணிகள் துவங்கியிருப்பது உங்களுக்கு தெரியுமா.??

இதுவரை செய்திகளில் குழப்பமாகவும், திரைப்படங்களில் கதையாகவும் நாம் பார்த்து வந்த பறக்கும் பொருள் போன்று திரைப்படங்களின் மூலம் நமக்கு அறிமுகமாகி விரைவில் 'சாத்தியமாக இருக்கும்' தொழில்நுட்ப சாதனங்கள் சார்ந்த தகவல்களை தான் இங்கு தொகுத்திருக்கின்றோம்..

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
குவான்டம் டெலிபோர்டர்

குவான்டம் டெலிபோர்டர்

வரலாற்றில் முதல் முறையாக குவான்டம் டெலிபோர்டர் சோதனை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி ஒரு இடத்தில் இருக்கும் பொருளை அழித்து, அதனினை மற்றொரு இடத்தில் உருவாக்க முடியும்.

rn

ஆறாம் திறன் தொழில்நுட்பம்

இந்த தொழில்நுட்பமானது பல்வேறு திறன்களை ஒரே கருவியில் வழங்குவதாகும். இது குறித்து மேலும் தெரிந்து கொள்ள வீடியோவினை பாருங்கள்.

360 டிகிரி ஹாலோகிராம்

360 டிகிரி ஹாலோகிராம்

சமீபத்தில் வெளியான சில ஹாலிவுட் திரைப்படங்களின் மூலம் இவ்வகை டிஸ்ப்ளேக்கள் பிரபலமாகின. தற்சமயம் ZCam எனும் புதிய வகை கேமரா மூலம் அதிக தரம் கொண்ட வீடியோவை பதிவு செய்து, அவைகளை முப்பரிமாணத்தில் காண்பிக்க முடியும். இந்த தொழில்நுட்பம் ஒரு வகை இயற்பியல் சார்ந்த கோட்பாட்டின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.

லைட்சேபர்

லைட்சேபர்

ஸ்டார் வார்ஸ் திரைப்படத்தில் காண்பிக்கப்பட்ட இவ்வகை ஆயுதங்கள் தற்சமயம் சோதனை செய்யப்பட்டு வருகின்றன. இவை ஒரு மீட்டர் நீளத்தில் சக்திகளை தொடர்ச்சியாக பீய்த்தடிக்கும் திறன் கொண்டவையாகும், இதை கொண்டு கத்திகளின் பிளேடுகளை உருக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜெட்பேக்

ஜெட்பேக்

அதிகப்படியான திரைப்படங்களில் காட்சிப்படுத்தப்பட்ட ஜெட்பேக் தொழில்நுட்பம் உண்மையில் சாத்தியமாக்கப்பட்டுள்ளது. ராக்கெட் பெல்ட் என அழைக்கப்படும் இந்த ஜெட்பேக் கருவிகள் விரைவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எக்சோஸ்கெலிட்டன்

எக்சோஸ்கெலிட்டன்

இவை தற்சமயம் ராணுவத்தில் பயன்படுத்தப்படுவது பெரும்பாலானோரும் அறிந்ததே. எக்சோஸ்கெலிட்டன்களை பயன்படுத்தி அதிக எடையை சுலபமாக சுமந்து கொண்டு அதிக தூரத்தை குறைந்த நேரத்தில் கடக்க முடியும்.

பறக்கும் கார்

பறக்கும் கார்

உலகெங்கும் பல்வேறு வகையான பறக்கும் கார்களை பார்த்திருப்போம். ஆனால் இவை உண்மையில் சாத்தியமாகி இருப்பது எத்தனை பேருக்கு தெரியும். பல்வேறு நிறுவனங்களும் பறக்கும் கார் தயாரிப்பில் கிட்டத்தட்ட வெற்றியை நெருங்கி விட்டதோடு தற்சமயம் அவைகளை சோதனையும் செய்து வருகின்றன.

பறக்கும் தட்டு

பறக்கும் தட்டு

ஏரியா 51 பற்றிய தகவல்கள் கிடைத்தது முதல் சுமார் 50 ஆண்டுகளாக பறக்கும் தட்டுகளை பற்றி அறிந்திருப்போம். அந்த வகையில் உண்மையில் பறக்கும் தட்டு உருவாக்கப்பட இருக்கின்றது. இதற்கான வடிவமைப்பு பணிகளில் பல்வேறு நிறுவனங்களும் ஈடுப்பட்டு வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

விர்ச்சுவல் காகிள்ஸ்

விர்ச்சுவல் காகிள்ஸ்

தற்சமயம் உலகெங்கும் பிரபலமாகி வரும் தொழில்நுட்பம் தான் விர்ச்சுவல் ரியால்டி ஆகும். இதன் மூலம் முப்பரிமாணத்தில் வீடியோக்களை பார்க்க முடியும்.

காண்டாக்ட் லென்ஸ்

காண்டாக்ட் லென்ஸ்

சர்க்கரை நோய் இருப்பவர்களின் உடலில் குளுகோஸ் அளவு குறைந்தால் ஹைட்ரோஜெல் காண்டாக்ட் லென்ஸ் நிறம் மாறும். இது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

மேலும் படிக்க

மேலும் படிக்க

ஜேம்ஸ் பான்ட் திரைப்படங்களின் உண்மை பின்னணி.!!

பேய் இருப்பதற்கான ஆதாரங்கள்.!?

முகநூல்

முகநூல்

இது போன்ற தொழில்நுட்பம் மற்றும் உலகின் வினோத தகவல்களை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

 

English summary
Futuristic Inventions from Comics That Are Real Now Tamil

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot