பறக்கும் கார் பரிசோதனைக்கு ஒப்புதல் வழங்கியது யூஸ் எஃப்ஏஏ (டெமோ வீடியோ)..!
டிஎஃப்-எக்ஸ் (TF-X) எனப்படும் பறக்கும் காரை தயாரித்து உள்ள கம்பெனி டெர்ராஃபூகியா (Company Terrafugia) நிறுவனத்திற்கு அந்த காரை பரிசோதனை செய்து பார்க்க அனுமதி கிடைத்துள்ளது. அந்த அனுமதியை அமெரிக்காவின் ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (Federal Aviation Administration - FAA) வழங்கியுள்ளது என்பதும், எஃப்ஏஏ (FAA) என்பது அமெரிக்காவின் தேசிய விமான போக்குவரத்து அதிகாரம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் பறக்கும் கார் சார்ந்த தகவல்களையும், அதன் டெமோ வீடியோவையும் கீழ்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

நகைச்சுவை நிஜமாகியுள்ளது :
போக்குவரத்து நெரிசல் என்பதை இல்லாமல் ஆக்குவதற்கு இரண்டு வழிகள் தான் உண்டு ஒன்று அனைவரும் நடந்தே போக வேண்டும் இல்லையெனில் பறக்கும் கார்கள் உபயோகிக்கப்பட வேண்டும் என்று நகைச்சுவையாக பேசியது தற்போது நிஜமாகியுள்ளது.

பறக்கும் கார் :
அதாவது பறக்கும் கார் உருவாக்கம் பெற்று, வானில் பறந்து காட்டும் பரிசோதனைக்கும் தாயராக உள்ளது.

அனுமதி :
இந்த பரிசோதனைக்கு அனுமதி எஃப்ஏஏ-விடம் இருந்து கிடைத்துள்ள நிலையில் இன்னும் சில மாதங்களில் இந்த முன்மாதிரி பரிசோதனையானது நிகழ்த்தப்பட இருக்கிறது.

வடகிழக்கு வான்பகுதி :
குறிப்பாக இந்த பரிசோதனையானது அமெரிக்காவின் வடகிழக்கு வான்பகுதியில் நடத்தப்படலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மினி மாடல் :
பரிசோதனைக்கு உட்படுத்தப்பட இருக்கும் டிஎஃப்-எக்ஸ் பறக்கும் கார் ஆனது கம்பெனி டெர்ராஃபூகியா நிறுவனத்தின் மினி மாடல் என்பது குறிப்பிடத்தக்கது.

கட்டுப்பாடு :
பரிசசோதனை நிகழ்த்த 50 பவுண்ட் எடைக்கு மேல் இருக்க கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளத்தால், முன் மாதிரி பரிசோதனையில் மினி மாடல் கார் பயன்படுத்தப்பட இருக்கிறது.

10 ஆண்டுகள் :
மேலும் இவ்வகை பறக்கும் கார்கள் பொதுவான பயன்பாட்டிற்க்கு வர இன்னும் 10 ஆண்டுகள் ஆகும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
டெமோ வீடியோ :
டிஎஃப்-எக்ஸ் பறக்கும் கார் பரிசோதனையின் டெமோ வீடியோ..!

எமர்ஜென்சி :
டிஎஃப் எக்ஸ் பறக்கும் காரில் எமர்ஜென்சி என்றால் பத்திரமாக தரை இறங்கும் வண்ணம் பாராசூட் வசதி உள்ளபடி வடிவமைக்கப்பட்டுள்ளது.

சாதாரண கார் :
பறக்க வைக்கும் போது தரை இறங்கும் போதும் தான் விமான நிலையங்கள் மற்றும் ஹெலிபேட்கள் தேவைப்படும், மற்ற நேரத்தில் இதை சாதாரண கார் போல எங்கு வேண்டுமானாலும் நிறுத்தி வைத்துக் கொள்ளலாம்.

மேலும் படிக்க :

தமிழ் கிஸ்பாட் :
மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!


Click it and Unblock the Notifications








