டிஸ்பிளே மேல யாருடா ஸ்பீட் பிரேக்கர் போட்டது? ஓ.. அது கீஸ்-ஆ? இது தான் எதிர்கால Mobile டிஸ்பிளேவாம்!
வரும் காலத்தில் அல்லது எதிர்காலத்தில் விரைவில் ஸ்மார்ட்போன்களின் டச் டிஸ்பிளேக்கள் பிஸிக்கல் கீபோட் உடன் மாற்றப்படுமா? என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது. காரணம், புதிய தொழில்நுட்பம் ஒன்று நம்முடைய டச் டிஸ்பிளேவுடன் இன்ஃபிளட்டபில் கீஸ் கொண்ட டிஸ்பிளேவை இணைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
என்னது! டச் டிஸ்பிளேவில் கீபோட்-ஆ? அது எப்படி சாத்தியம்? என்று சிலர் ஆச்சரியமாக யோசித்திருப்பீர்கள். இப்படி யோசித்தும், சிலருக்கு உண்மையில் இது எத்தகைய தொழில்நுட்பம் என்று புரிந்துகொள்வதில் சில சிரமம் ஏற்படலாம். உங்களுக்கு தெளிவாக புரிய வேண்டும் என்றால், கீழே கொடுக்கப்பட்டுள்ள டிஸ்பிளே புகைப்படத்தை ஒரு முறை பார்வையிடுங்கள். வழக்கமான டச் டிஸ்பிளே போல் இது காட்சியளிக்கிறது தானே.

ஆனால், கொஞ்சம் உன்னிப்பாக உற்று கவனித்து பாருங்கள். உங்களுக்கு ஆங்காங்கே சில இடங்களில் ஸ்பீட் பிரேக்கர் மேடுகள் போல, சில கீஸ்கள் காட்சியளிக்கும். இவை தான் இன்ஃபிளட்டபில் கீபோர்ட் (inflatable keyboard) என்று அழைக்கப்படுகிறது. இந்த கீபோர்ட்கள் தான் எதிர்காலத்தில் டச் டிஸ்பிளேவின் மேல் அமரபோகிறது என்று புதிய ஆராய்ச்சி தகவல் தெரிவித்துள்ளது. சரி, எதற்காக டச் டிஸ்பிளேவில் இத்தகைய கீபோர்ட் திடீரென அமைக்கப்படுகிறது?
எதிர்காலத்தில் எதற்காக இந்த இன்ஃபிளட்டபில் கீபோர்ட்ஸ் தேவைப்படும் என்று தெரிந்துகொள்ளலாமா? வாங்க. கார்னகி மெலன் பல்கலைக்கழகத்தின் (CMU) ஃபியூச்சர் இன்டர்ஃபேஸ் க்ரூப் (FIG) இன் ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஓஎல்இடி (OLED) டிஸ்பிளேவில் ஊதப்பட்ட பட்டன்கள் மூலம் புதிய வகையான கீபோர்டை உருவாக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளனர். இதன் மூலம் டச் டிஸ்பிளே அம்சத்தை மாற்றியமைக்க முடியும் என்று நம்புகிறார்கள்.
இந்த வகை தொழில்நுட்பம் பிளாட் பேனல் ஹாப்டிக்ஸ் என்று அழைக்கப்படுகிறது. இந்த அம்சத்தில் கடந்த 15 ஆண்டுகளாக CMU வேலை செய்து வருகிறது. டிஸ்பிளேவின் இன்பில்ட் எலக்ட்ரோ-ஆஸ்மோடிக் பம்ப் (Embedded Electro-Osmotic Pump) அல்லது EEOP என்று அழைக்கப்படும் பம்ப்புகளை உருவாக்குவதன் மூலம் ஐந்து மில்லிமீட்டர் தடிமன் கொண்ட பிளாட் பேனல் ஹாப்டிக்ஸ் போர்டை FIG ஆல் உருவாக்க முடிந்தது என்பது புதிய முன்னேற்றமாக உள்ளது.

டெமோ வீடியோவின் படி, EEOP-கள் ஒரு சிறப்பு உந்தி திரவத்தின் மூலம் மின்சாரத்தை இயக்குவதன் மூலம் டிஸ்பிளேவில் டச் கீஸ்-களாக கையாள அனுமதிக்கிறது. இந்த பம்ப்கள் கீழே உள்ள இந்த திரவத்தின் நீர்த்தேக்கத்திற்கும் மேலே ஒரு நெகிழ்வான மேற்பரப்பும் அமைக்கப்பட்டுள்ளது. ஸ்டாக் வழியாக மின்சாரத்தை இயக்குவது, ஐந்து மில்லிமீட்டர் உயரம் வரை மேல் ஒரு திடமான பட்டன் போன்ற அமைப்பை உயர்த்துவதற்கு பம்ப்கள் அனுமதிக்கிறது.
இது உண்மையில் ஒரு புதுவிதமான முயற்சி தான். உண்மையிலேயே, இந்த தொழில்நுட்பத்தை விரிவாக விளக்கி, ஆரம்ப முன்மாதிரிகளில் குழு மென்மையான சிலிகானை மேல் அடுக்காகப் பயன்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. இன்ஃபிளட்டபில் கீபோர்ட் யாருக்கெல்லாம் பயன்படும் என்றால், நிஜ வாழ்க்கையில் முதலாவதாக, பார்வையற்றவர்களுக்கு இது சிறந்த ஸ்மார்ட்போன் அனுபவத்தை வழங்க உதவும். ஏனெனில் Siri போன்ற AI அசிஸ்டன்ட் உதவியுடன் பார்வையற்றவர்கள் போராடுவதை விட, இது இன்னும் சிறப்பான பயன்முறையை கொடுக்கும்.
இந்த தொழில்நுட்பம் பார்வையற்றவர்களுக்கு பயனுள்ளதாக அமையும் என்று கூறப்படுகிறது. இதற்கு முன்பு இது போன்ற அம்சத்தை எந்த ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமும் ஆதரிக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது. ஆனால், இனி எதிர்காலத்தில் இத்தகைய இன்ஃபிளட்டபில் கீபோர்ட்ஸ் OLED டிஸ்பிளேவுடன் வர வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது. இந்த அம்சம் பற்றி உங்களுடைய கருத்து என்ன என்பதை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்.


Click it and Unblock the Notifications