எதிர்கால டெக்னாலஜி இதுதான்!

By Keerthi
|

ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது அது அந்த நாட்டில் உள்ள தொழில் நுட்பத்தை கணக்கில் கொண்டே கிடைக்கப் பெறுகிறது அந்த வகையில் தொழில் நுட்பமானது தினந்தோறும் வளர்ந்து வருகிறது எனலாம்

மேலும் அடுத்த 10 ஆண்டுகளில் கம்ப்யூட்டரில் என்ன மாற்றங்கள் வரும். இன்றைய தொழில் நுட்ப வளர்ச்சி யின் அடிப்படையில் கணித்த சில எதிர்பார்ப்புகளை இங்கு காணலாம்.

அதிக இடத்தை எடுத்துக் கொண்டு, மெதுவாகவும், சூடாகவும் இயங்கும் சிலிகான் நீக்கப்படும். கம்ப்யூட்டரின் புதிய கட்டமைப்பில் குறைவான அளவில் எலக்ட்ரான்களும் அதிக அளவில் ஆப்டிகல் இழைகளும் பயன்படும். ஆப்டிகல் கம்ப்யூட்டர்கள் வரும் நாள் வெகு தொலைவில் இல்லை.

கம்ப்யூட்டர்கள் திருடு போகாது. பயோமெட்ரிக் பயன்பாடு பரவலாகி, கைரேகைகளுக்கு மட்டுமே கம்ப்யூட்டரின் கதவு திறக்கும்.

கீ போர்டுகள் ஓரம் கட்டப்படும். டச் ஸ்கிரீன் இப்போதே வந்துவிட்டது. இனி சைகை மூலம் நாம் கம்ப்யூட்டரையும், சாப்ட்வேர் அப்ளிகேஷனையும் இயக்க லாம். அடுத்ததாக நம் குரல் மூலமே அனைத்தையும் இயக்கும் வழிகள் கண்டறியப்படும்......

ஸ்மார்ட் போன் கேரிக்கு

#1

#1


கம்ப்யூட்டர்கள் கையடக்க சாதனமாக மாறும். அலுவலகத்தில் டெஸ்க்குகளில் உள்ள இணைப்புகளில் இணைத்த பின்னர், டாப்பில் உள்ள பெரிய திரைகளில் கம்ப்யூட்டர் இயங்குவதைப் பார்க்கலாம். எனவே டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் இனி டெஸ்க்கில் உள்ள டாப் கம்ப்யூட்டராக இயங்கும்.

#2

#2


வீடுகளில் உள்ள கம்ப்யூட்டர்கள் நமக்காக, நம் பெர்சனல் தேவைகளுக்காக இயங்கும். நாம் அலுவலகத்திலிருந்து வந்தவுடன் நம்மை ஓய்வெடுக்கச் சொல்லி, நமக்காக சாதனங்களை இயக்கும். சமையல், வாஷிங், டிவி, ஏர்கண்டிஷனர் இயக்கம் ஆகியவற்றைக் கம்ப்யூட்டரே பார்த்துக் கொள்ளும்.

#3

#3


டிவிடிக்கள் பல டெராபைட்டுகள் கொள்ளளவினைக் கொண்டிருக்கும். பிளாஸ்டிக் பிளாட்டர் படு வேகத்தில் சுழலும். ஹோலோ கிராபிக் தொழில் நுட்பத்தில் எழுதுவதற்கு ஒரு பக்கத்தில் ஒரு லேசரும், இன்னொரு பக்கத்தில் இன்னொன்றுமாக இயங்கும்.

#4

#4


இப்போதிருக்கும் சிபியு அப்படியே இருக்கும். ஆனால் எலக்ட்ரானிக் மைக்ரோ ப்ராசசருக்குப் பதிலாக ஆப்டோ எலக்ட்ரானிக் இன்டக்ரேய்டட் சர்க்யூட் அமைக்கப்படும். இதனை ஸ்விட்ச் ஆன் செய்திட சிலிகான் இருக்கும். ஆனால் மற்ற இயக்கவேலைகளை ஆப்டிக்ஸ் பார்த்துக் கொள்ளும். தற்போது கிடைக்கும் இயக்க வேகத்தினைக் காட்டிலும் 100 மடங்கு அதிக வேகத்தில் சிபியு இயங்கும்.

#5

#5

இனி ரேம் மெமரி ஹோலோகிராபிக் ஆக இருக்கும். இது முப்பரிமாணம் உடையதால், எத்தனை அடுக்குகளையும் இது கொள்ளும். எனவே கொள்ளளவு கற்பனையில் எண்ண முடியாத அளவில் அமையும்.

#6

#6


இன்டெல் நிறுவனத்தின் புதிய ப்ராசசர்கள் எண்ணிப் பார்க்க இயலாத வேகத்தில் செயல்படும்.

#7

#7

இன்டர்நெட் டிவி புழக்கம், கம்ப்யூட்டருடன் இணைக்கப்படும் டிவி, ஸ்மார்ட் போன், பல மானிட்டர்களுடன் இயங்கும் கம்ப்யூட்டர், புளு ரே டிவிடி, விண்டோஸ் புதிய சிஸ்டம் தரும் முழு பயன்பாடு, நம் வேலைகளுக்கேற்ப இயக்க வேகத்தை மாற்றிக் கொள்ளும் சிப் என வரும் ஆண்டுகளில் முற்றிலும் புதிய தொழில் நுட்பங்கள் வரலாம்.

ஸ்மார்ட் போன் கேரிக்கு

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X