புதிய சந்தையில் 'சைலண்ட் என்ட்ரி'யாகும் நிறுவனம்!
ஸ்மார்ட்போன் கருவிகளின் மூலம் இந்தியாவில் மிக வேகமாகப் பிரபலமான லீஇகோ நிறுவனம் அடுத்த அதிரடிக்கு தயாரிகி விட்டது. லீஇகோ நிறுவனம் விலை உயர்ந்த அம்சங்கள் கொண்ட சூப்பர்போன் கருவிகளைக் குறைந்த விலைக்கு வழங்கி வருகின்றது.
அந்த வகையில் லீஇகோ நிறுவனம் தொலைக்காட்சி சந்தையில் நுழைய இருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் லீஇகோ சார்பில் வெளியாகும் புதிய தொலைக்காட்சிகள் பெரிய திரை கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகின்றது.

மாடல்
எவ்வித கருவியை வாங்க வேண்டுமானாலும் இந்திய பயனர்களுக்கு தேர்வு செய்ய நிறைய வாய்ப்புகள் இருக்கின்றது. இந்தியாவில் பல பிரான்டுகள், பல்வேறு அம்சங்கள், அனைத்து வித விலை பட்டியல் என எல்லாவற்றிலும் சிறந்த கருவிகளைத் தேர்ந்தெடுக்க முடியும்.

டிவி
இதோடு சிறந்த டிவியை வாங்கும் முன் வீட்டு அறையை அதற்கு ஏற்ப மாற்றுவதும் அவசியமாகும். டிவி பொருத்தும் இடத்தை வைத்து ஒட்டு மொத்த அறையையும் மாற்றியமைக்க நேரிடும்.

விலை
வாங்கும் டிவி குறைந்தது சில ஆண்டுகளுக்காவது வேலை செய்ய வேண்டும், பல்வேறு அம்சங்கள் மற்றும் விலையும் குறைந்ததாக இருக்க வேண்டும். இதற்கு ஆன்லைன் சலுகை மற்றும் கேஷ்பேக் போன்றவற்றைப் பயன்படுத்துவது பணத்தை மிச்சப்படுத்தும்.

அம்சம்
இன்று டிவி வாங்குவோர் தங்களுக்கு பிடித்த நிகழ்ச்சிகளை அவர்களுக்குக் கிடைக்கும் நேரத்தில் பார்க்கவே விரும்புகின்றனர். இதனால் வாங்கும் டிவியில் சில ஸ்மார்ட் அம்சங்கள் இருப்பதை உறுதி செய்வது நல்லது.

பொழுதுபோக்கு
ஸ்மார்ட்போன் கருவிகளை போன்றே லீஇகோ டிவிகளில் அதிகளவு பொழுதுபோக்கு அம்சங்கள் வழங்கும். லீஇகோ நிறுவனம் தனது சூப்பர்போன் கருவிகளுடன் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களை இலவசமாக வழங்கியது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications