எல்லாமே மாறுது.. கூகுள் டிவி ரிமோட்.. இவ்வளவு சிறப்பு அம்சம் இருக்கா.. கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..
கூகுள் டிவி மாடல்களுக்கு என்றே பேட்டரி தீர்ந்து போகாத ஒரு புதிய ரிமோட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த புதிய ரிமோட் ஆனது அசத்தலான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த புதிய ரிமோட் குறித்த தகவல்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
ஜி32 சோலார் பவர்ட் ரிமோட்
பொதுவாக கூகுள் டிவி ரிமோட்கள் AA அல்லது AAA பேட்டரிகளை தான் பயன்படுத்துகின்றன. ஆனால் இதுபோன்ற பேட்டரிகள் விரைவில் சார்ஜ் தீர்ந்துவிடும். ஆனால் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய ஜி32 (G32) சோலார் பவர்ட் ரிமோட் ( solar-powered G32 Google TV remote) மாடலில் சார்ஜ் தீர்ந்துபோகும் கவலை இருக்காது. அதேபோல் பேட்டரியை மாற்றவும் தேவை இருக்காது.

அதாவது ஜி32 சோலார் பவர்ட் ரிமோட்டின் முன்பக்கத்திலும் பின்புறத்திலும் ரிச்சார்ஜபிள் பேட்டரிக்கு சக்தி அளிக்கும் சோலார் பொருத்தப்பட்டுள்ளது. இது சூரிய ஒளி இருந்தால் மட்டுமே ரீசார்ஜ் ஆகும் என்பது இல்லை உங்கள் வீட்டில் எரியும் பல்பின் வெளிச்சத்தின் மூலம் ரீசார்ஜ் ஆகிவிடும் என்று கூறப்படுகிறது. அதுவும் இந்த ரிமோட் ஒளியுடன் தொடர்பில் இருக்கும் வரை சார்ஜ் ஆகிக்கொண்டே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இது இருட்டான இடத்தில் அல்லது லைட் ஆப் செய்தாலோ சார்ஜ் ஆவது நின்றுவிடும், இதன் மூலம் உங்களின் ரிமோட் பேட்டரி தீர்ந்து போகும் பிரச்சனை இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அதிநவீன ரிமோட்டை கூகுளின் அதிகாரப்பூர்வ சப்ளையரான ஓசங் எலக்ட்ரானிக்ஸ் (Ohsung Electronics) தயாரித்துள்ளது.
ஓசங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் கொண்டுவந்துள்ள இந்த புதிய ரிமோட்டில் யூடியூப் (YouTube), நெட்பிளிக்ஸ் (Netflix) ஆகிய ஷார்ட்கட் கீகள் உள்ளன. இதுதவிர வழக்கமான வால்யூம், மியூட், சேனல் மற்றும் நேவிகேஷன் கீகள் கூட இதில் உள்ளன. மேலும் வாய்ஸ் கண்ட்ரோல் ஆதரவும் கொண்டுள்ளது இந்த ரிமோட்.
சூரிய சக்தியில் இயங்கும் ரிமோட்டுகளைப் பார்ப்பது இதுவே முதல் முறை அல்ல. சாம்சங் அதன் டிவிகளுக்கு சூரிய சக்தியில் இயங்கும் ரிமோட்டுகளை வழங்கி வருகிறது. இருப்பினும், கூகுளின் அதிகாரப்பூர்வ சப்ளையரான ஓசங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் ஆனது ரிமோட்டுகளில் புதிய தொழில்நுட்பத்தை வழங்கியுள்ளது. அதுவும் இது பேட்டரி மாற்றங்களின் தேவையை முடிவுக்குக் கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விரைவில் அனைத்து ஸ்மார்ட் டிவி நிறுவனங்களும் இந்த புதிய வகை ரிமோட் உடன் ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வரை எந்த நிறுவனம் இந்த புதிய வகை ரிமோட் உடன் டிவியை அறிமுகம் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் கூகுள் நிறுவனம் சமீபத்தில் கூகுள் மேப்ஸில் ஜெமினி (Gemini) அம்சத்தைச் சேர்த்துள்ளது. இது குறித்த தகவல்களையும் இப்போது பார்க்கலாம்.

கூகுள் மேப்ஸ் புதிய அம்சங்கள்
கூகுள் மேப்ஸில் ஜெமினி (Gemini) அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. எனவே இனி கூகுள் மேப்ஸ் ஆனது ஜெமினி உடன் இணைந்து வழிகாட்டும். அதுவும் கூகுள் மேப்ஸில் முதல்முறையாக கைகளைக் கையாளாமல், உரையாடல் முறையில் இயங்கும் டிரைவிங் அனுபவத்தை அறிமுகப்படுத்துகிறோம் என கூகுள் தனது வலைப்பதிவில் தெரிவித்துள்ளது.
குறிப்பாக கூகுள் மேப்ஸில் ஜெமினி இணைக்கப்பட்டுள்ளதால், உங்கள் பயணப் பாதையில் உள்ள இடங்களைத் தேடுவது, மின்சார வாகன (EV) சார்ஜர்கள் உள்ளதா என்பதைச் சரிபார்ப்பது, அல்லது ஆண்ட்ராய்டில் உங்கள் வருகை நேரத்தை (ETA) நண்பர்களுடன் பகிர்வது இன்னும் எளிதாகியுள்ளது. அதாவது இனி எதற்கும் கையால் தேடவேண்டிய அவசியம் இருக்காது, நீங்கள் நேரடியாகக் கேட்டால் போதும், அதுவே அனைத்தையும் தெளிவாக காட்டிவிடும்.
photo credit: androidauthority


Click it and Unblock the Notifications








