iPhone: முழுக்க முழுக்க ஐபோனில் படமாக்கப்பட்ட இந்திய திரைப்படம்; யூட்யூப்பில் வெளியானது!
உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள், திரைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது; அதுவும் இந்திய திரைப்படம்! இந்த திரைப்படத்தின் பெயர் என்ன? இந்த திரைப்படத்தை படமாக்க பயன்படுத்தப்பட்ட ஐபோன் மாடல் என்ன? இந்த திரைப்படம் படமாக்கப்பட்டது எப்படி? இதோ விவரங்கள்:
நோ சினிமா கேமரா.. ஒன்லி ஐபோன் 14 ப்ரோ கேமரா!
உலகெங்கிலும் உள்ள திரைப்பட இயக்குநர்கள், விளம்பரப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் மியூசிக் வீடியோ கிரியேட்டர்கள், ஆப்பிள் ஐபோனை பயன்படுத்தி வீடியோக்களை பதிவு செய்வது ஒன்றும் புதிதல்ல!

நினைவூட்டும் வண்ணம், அமெரிக்க பாடகி செலினா கோமஸின் பிரபலமான பாடல்களில் ஒன்றான "லூஸ் யூ டு லவ் மீ" மியூசிக் வீடியோவானது முழுக்க முழுக்க ஐபோனை பயன்படுத்தி படமாக்கப்பட்டு இருந்தது. இப்போது, ஆப்பிள் நிறுவனம் முழுக்க முழுக்க ஐபோன் 14 ப்ரோவில் படமாக்கப்பட்ட ஒரு இந்திய குறும்படத்தை வெளியிட்டுள்ளது.
அந்த குறும்படத்தின் பெயர் என்ன?
முழுக்க முழுக்க ஐபோன் 14 ப்ரோவில் படமாக்கப்பட்ட குறும்படத்தின் பெயர் - ஃபர்சாட் (Fursat) ஆகும். இது பாலிவுட் பாணியிலான, அதே சமயம் இசையை மையமாக கொண்ட ஒரு குறும்படமாகும்.

விஷால் பரத்வாஜ் இயக்கியுள்ள இந்த குறும்படத்தின் நீளம் வெறும் 30 நிமிடங்கள் மட்டுமே ஆகும். இருப்பினும் இந்த படத்தில் பாடல்கள் மற்றும் நடனங்கள் என "வழக்கமான சினிமாவில்" உள்ள எல்லாமே உள்ளது!
இந்த குறும்படத்தை பார்ப்பது எப்படி?
ஃபர்சாட் திரைப்படத்தை பார்க்க விரும்புபவர்கள் யூட்யூப் (YouTube) தளத்தை அணுகலாம். மேலும் இந்த திரைப்படம் ஆப்பிள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் வழியாகவும் பார்க்க கிடைக்கிறது.
மிரட்டிய ஆக்ஷன் மோட்!
பிரபல புகைப்பட இயக்குனரான ஸ்வப்னில் சோனாவனே (Swapnil Sonawane), ஃபர்சாட் திரைப்படமானது ஆப்பிள் ஐபோனை எவ்வளவு அருமையாக கையாள முடியும் என்பதற்கான ஒரு நல்ல எடுத்துக்காட்டு என்று கூறியுள்ளார்.

மேலும். "ஐபோனில் உள்ள ஆக்ஷன் மோட் ஒரு அற்புதமான அப்டேட் ஆகும். ஆக்ஷன் மோட்-ஐ பயன்படுத்தி, கிம்பலின் உதவி இல்லாமலேயே ஒரு நடிகரை பார்த்து முழு பலத்துடன் ஓடினாலும் கூட, அது மிகவும் நிலையான காட்சியாக பதிவாகும்" என்றும் அவர் கூறி உள்ளார்!
மாஸ் காட்டிய சினிமாடிக் மோட்!
ஐபோனில் உள்ள சினிமா மோட் (Cinematic Mode), ஃபோகஸ் புல்லரை (Focus Puller) போல வேலை செய்கிறது; திறமையான முறையில் ஃபோகஸை ஷிஃப்ட் (Focus Shift) செய்கிறது என்றும் ஸ்வப்னில் சோனாவனே கூறி உள்ளார்!
ஃபர்சாட் குறும்படத்தின் இயக்குனரான விஷால் பரத்வாஜ், "இந்த திரைப்படத்தில் மிகவும் சுதந்திரமாக செயல்பட்டேன். அதே சமயம் ஒரு ஐபோனால் என்னென்ன செய்யமுடியும் என்பதையும் புரிந்துகொண்டேன்" என்று கூறி உள்ளார்.
விஷால் பரத்வாஜ்ஜும் கூட ஐபோனில் உள்ள இரண்டு மோட்களின் (ஆக்ஷன் மோட் மற்றும் சினிமா மோட்) திறமைகளை புகழ்பாடி உள்ளார்.
ஓடுவது, நடப்பது, நகர்வது போன்ற சூழ்நிலைகளில்!
ஆக்ஷன் மோட் ஆனது நிலையான, மென்மையான வீடியோவை வழங்குகிறது. வீடியோ மோடில் இருந்தபடியே ஆக்ஷன் மோடிற்கு மாறுவதும் கூட எளிதான செயல்முறையாகவே உள்ளது. மேலும் ஓடுவது, நடப்பது, நகர்வது போன்ற சூழ்நிலைகளில் இது கூடுதல் ஸ்டெபிலைசேஷனை வழங்குகிறது.
4கே தரத்தில் அணுக கிடைக்கும் சினிமாடிக் மோட் ஆனது டெப்த்-ஆஃப்-ஃபீல்ட் எஃபெக்ட் மற்றும் ஆட்டோமெட்டிக் ஃபோகஸ் சேஞ்சஸ் போன்றவைகளை எளிமையாக செயல்படுத்துகிறது என்றும் விஷால் பரத்வாஜ் குறிப்பிட்டுள்ளார்!


Click it and Unblock the Notifications








