பிஎஸ்என்எல் அலுவலகத்தில் ஜப்தி.. BSNL செலுத்த வேண்டிய வரித் தொகை எவ்வளவு தெரியுமா?

|

திண்டிவனம் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் இருந்த மரச்சாமான்களை பேரூராட்சி அதிகாரிகள் சனிக்கிழமை மாலை பறிமுதல் செய்தனர். பல அறிவிப்புகளுக்குப் பிறகும் நிலுவையில் உள்ள வரிகளை திண்டிவனம் பிஎஸ்என்எல் நிர்வாகம் செலுத்தத் தவறியதை அடுத்து இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான முழு தகவலை இப்போது பார்க்கலாம்.

பிஎஸ்என்எல் அலுவலகத்தில் ஜப்தி

பிஎஸ்என்எல் அலுவலகத்தில் ஜப்தி

திண்டிவனம் நகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது: டவுன் ரயில் நிலையம் அருகே செயல்படும் பிஎஸ்என்எல் அலுவலகம், திண்டிவனம் நகராட்சிக்கு ₹8,70,090 வரியும், சென்னை சாலையில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள மொபைல் போன் சிக்னல் டவருக்கு ₹7,24,446 வரியையும் திண்டிவனம் பிஎஸ்என்எல் செலுத்த வேண்டும். பல முறை நோட்டீஸ் கொடுத்தும், பிஎஸ்என்எல் நிர்வாகம் நிலுவையில் உள்ள தொகையைச் செலுத்தாததால், அலுவலகத்தில் இருந்த மரச்சாமான்கள் அதிரடியாகப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தண்டோரா மேளம் வாசித்து BSNL அலுவலத்தில் ஜப்தி செய்த அதிகாரிகள்

தண்டோரா மேளம் வாசித்து BSNL அலுவலத்தில் ஜப்தி செய்த அதிகாரிகள்

சனிக்கிழமை மாலை, கமிஷனர் சௌந்தரராஜன் தலைமையில், நகராட்சியைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் தொழிலாளர்கள் குழுவினர், பிஎஸ்என்எல் அலுவலகத்திற்கு வந்து, நிலுவையில் உள்ள வரிக்கு பதிலாக, ஜப்தி செய்யப் போவதாகத் தண்டோரா மேளம் வாசித்து அறிவித்தனர். இதற்கு ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்த போதிலும், போலீசார் பேரூராட்சி அதிகாரிகளுக்குப் பாதுகாப்பு அளித்து, பறிமுதல் செய்ய உதவினர்.

வீண் டிராஃபிக் அபராதத்தை தவிர்க்க: உடனே டிஜிலாக்கரில் ஓட்டுநர் உரிமத்தை சேவ் செய்யுங்கள்.. எப்படி தெரியுமா?வீண் டிராஃபிக் அபராதத்தை தவிர்க்க: உடனே டிஜிலாக்கரில் ஓட்டுநர் உரிமத்தை சேவ் செய்யுங்கள்.. எப்படி தெரியுமா?

பேரூராட்சி பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருவதற்கு இது தான் காரணமா?

பேரூராட்சி பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருவதற்கு இது தான் காரணமா?

நிலுவையில் உள்ள வரித் தொகையைச் செலுத்தாவிட்டால், ஓரிரு நாட்களில் பிஎஸ்என்எல் அலுவலகம் சீல் வைக்கப்படும் என அப்பகுதியின் வட்டார தகவல் தெரிவித்துள்ளது. மற்றொரு சம்பவத்தில், நிலுவையில் உள்ள வரியாக சுமார் 12 லட்சம் செலுத்த வேண்டிய தொழிலதிபருக்கும் தண்டோரா அறிவிப்பு வெளியானது என்று கூறப்பட்டுள்ளது. செய்தியாளர்களிடம் பேசிய திண்டிவனம் நகராட்சி ஆணையர் சௌந்தரராஜன், நிலுவையில் உள்ள வரியை பலர் செலுத்தாததால், பேரூராட்சி எல்லையில் வளர்ச்சி பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருகிறது.

வரியை உரிய காலத்தில் செலுத்தத் தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

வரியை உரிய காலத்தில் செலுத்தத் தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

பொதுமக்கள் வரியை உரியக் காலத்தில் செலுத்தி வராமல் இருக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நீண்ட கால மற்றும் அதிக அளவு வரி நிலுவையில் வைத்திருக்கும் மக்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக அதிரடி நடவடிக்கையும் எடுக்கப்பட்டும் என்றும் அவர் கூறியுள்ளார். இது போன்ற சிக்கலை சந்திக்காமல் இருக்க மக்கள் சரியான நேரத்தில் அவர்களின் வரியைத் தவறாமல் செலுத்தி வந்தாலே போதுமானது என்றும் அவர் கூறியுள்ளார்.

ஜியோவை விட மிக சிறந்த நன்மைகள் கிடைக்கும் Vi ரூ. 299 திட்டம்.. உண்மையிலேயே ஜியோவை விட சிறந்ததா?ஜியோவை விட மிக சிறந்த நன்மைகள் கிடைக்கும் Vi ரூ. 299 திட்டம்.. உண்மையிலேயே ஜியோவை விட சிறந்ததா?

சிக்கலைச் சந்திக்காமல் இருக்க உடனே வரியைச் செலுத்த உத்தரவு

சிக்கலைச் சந்திக்காமல் இருக்க உடனே வரியைச் செலுத்த உத்தரவு

இதுவரை பல நோட்டிஸ்கள் அனுப்பப்பட்டு, இன்னும் அதற்கான வரியைச் செலுத்தாத நபர்கள் மீதும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. உள்ளூர் நகராட்சியில் இருந்து அனுப்பப்படும் நோட்டீஸ்களை மக்கள் உதாசீனப்படுத்தாமல், கவனத்துடன் எடுத்துக்கொள்ளுமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது. இதுவரை சரியான நேரத்தில் வரியை செலுத்தாத மக்கள், உடனடியாக அவர்களின் பேரில் மிஞ்சியுள்ள தொகையை கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதற்கு முன்னதாக செலுத்திவிடும் படி எச்சரிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Furniture From BSNL Office Seized Over Non Payment Of Nearly 16 Lakh Of Tax : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X