கூகுளில் செய்தி வெளியிடும் பதிப்பாளர்களுக்கு நிதி: சுந்தர் பிச்சை தகவல்.!

|

கூகுள் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது என்றுதான் கூறவேண்டும், குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு தொழில்நுட்ப வசதியும் பல்வேறு மக்களுக்கு பயன்படும் வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும்.

அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார் எ

இந்நிலையில் உலகம் முழுவதும் இருந்து கூகுள் தளத்தில் செய்திகளை வெளியிடும் பதிப்பாளர்களுக்கு நிதி வழங்கப்படும் என்று
அந்நிறுவன தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர்,

குறிப்பாக இதுபற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், சில்லறை விற்பனையாளல்கள் தங்களது தயாரிப்புகளை இலவசமாக கூகுளில் விளம்பரம் செய்யலாம் என்றும், அக்டோபர் நடுப்பகுதியில் இந்த திட்டம் தொடங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

பிஎஸ்என்எல் அறிமுகம் செய்த 4புதிய திட்டங்கள்.! என்னென்ன சலுகை.!பிஎஸ்என்எல் அறிமுகம் செய்த 4புதிய திட்டங்கள்.! என்னென்ன சலுகை.!

கூகுள் நியூஸ் ஷோகேஸ்

இதற்குவேண்டி கூகுள் நியூஸ் ஷோகேஸ் என்ற அமைப்பை உருவாக்கியிருப்பதாகவும், முதலில் ஜெர்மனியில் அறிமுகப்படுத்தப்பட்டு பின்னர் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் விரிவுப்படுத்தப்படும் என்றும் சுந்தர் பிச்சை குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த புதுமையான திட்டத்தின் மூலம் தரமான செய்திகளை வழங்கினால் நிச்சயம் நிதி வழங்கப்படும் என்றும் கூகுள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 7400கோடி ரூபாயை கூகுள் செலவிடும்

வெளிவந்த தகவலின் அடிப்படையில் அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து செய்திகளை வாங்கி வெளியிட சுமார் 7400கோடி ரூபாயை கூகுள் செலவிடும் என்று அதன் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

பட்ஜெட் விலையில் வாங்கச் சிறந்த ஸ்மார்ட்போன்: மோட்டோ E7 பிளஸ்பட்ஜெட் விலையில் வாங்கச் சிறந்த ஸ்மார்ட்போன்: மோட்டோ E7 பிளஸ்

உட்பட பல நாடுகளில் இருந்து

மேலே குறிப்பிட்ட படி இது முதலில் ஜெர்மனியில் துவங்கப்பட்டு அங்குள்ள பத்திரிகைகளுடன் செய்திகளை பெறுவதற்கான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. மேலும் ஆஸ்திரேலியா, பிரிட்டன், பிரேசில், உட்பட பல நாடுகளில் இருந்து சுமார் 200பதிப்பாளர்கள் இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள நிலையில் இந்தியா, பெல்ஜியம் உள்ளிட்டநாடுகளுக்கும் இது விரிவுபடுத்த உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சுந்தர் பிச்சை அவர்கள்

சுருக்கமாக கூறவேண்டும் என்றால், பல வகையான, தரமான செய்திகளை வெளியிடுவதற்கு இந்த நிதி பயன்படுத்தப்படும் என்று சுந்தர் பிச்சை அவர்கள் தமது Blog-ல் குறிப்பிட்டுள்ளார்.

Best Mobiles in India

English summary
Funding for News Publishers on Google: Sundar Pichai Information!: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X