இனி பேடிஎம் மூலம் Fullerton India-க்கு தவணை செலுத்தலாம்!

ஒரு வங்கி அல்லாத நிதி நிறுவனமான ஃபுல்லர்டான் இந்தியா கிரிடிட் நிறுவனம், தனது வாடிக்கையாளர்களுக்கு பணம் செலுத்துவதை எளிமைப்படுத்தும் வகையில், பேடிஎம் உடன் கைகோர்த்துள்ளது.

|

தங்களின் கடனுக்கு செலுத்த வேண்டிய தொகையை, வாடிக்கையாளர்கள் தகுந்த இடைவெளியிலும் சரியான நேரத்திலும் செலுத்துவதற்கு வழிவகை ஏற்பட்டுள்ளது.

இனி பேடிஎம் மூலம் Fullerton India-க்கு தவணை செலுத்தலாம்!

ஒரு வங்கி அல்லாத நிதி நிறுவனமான ஃபுல்லர்டான் இந்தியா கிரிடிட் நிறுவனம், தனது வாடிக்கையாளர்களுக்கு பணம் செலுத்துவதை எளிமைப்படுத்தும் வகையில், பேடிஎம் உடன் கைகோர்த்துள்ளது.இந்த கூட்டுறவின் மூலம் மாதந்தோறும் செலுத்த வேண்டிய தவணைகள் (இஎம்ஐ-கள்) மற்றும் தங்களின் கடந்த கால தவணைகளை பேடிஎம்மில் ஒரே ஒரு கிளிக் மூலம் வாடிக்கையாளர்களுக்கு செலுத்த வழிவகை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இது குறித்து இந்நிறுவன தரப்பில் கூறுகையில், "இந்த பேப்பர் இல்லாத மற்றும் பாதுகாப்பான தளத்தின் மூலம் ஃபுல்லர்டான் இந்தியாவின் இணையதளம் அல்லது பேடிஎம் அப்ளிகேஷனில் உள்நுழைந்து, தங்களின் கடன் தவணைகளை எளிமையாகவும் சுமூகமாகவும் செலுத்துவதற்கு வாடிக்கையாளர்களுக்கு எதுவாக உள்ளது. இதன்மூலம் தங்களின் கடனுக்கு செலுத்த வேண்டிய தொகையை, வாடிக்கையாளர்கள் தகுந்த இடைவெளியிலும் சரியான நேரத்திலும் செலுத்துவதற்கு வழிவகை ஏற்பட்டுள்ளது. இந்த சேவையானது, தற்போது ஃபுல்லர்டான் இந்தியாவின் நகர்புற வணிக பகுதிகளைச் சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனி பேடிஎம் மூலம் Fullerton India-க்கு தவணை செலுத்தலாம்!

இந்த கூட்டுறவை குறித்து ஃபுல்லர்டான் இந்தியாவின் சிஇஓ மற்றும் நிர்வாக இயக்குனரான ராஜாஸ்ரீ நம்பியார் கூறுகையில், "பேடிஎம் உடனான எங்களின் கைகோர்ப்பை குறித்து அறிவிப்பதில் நாங்கள் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம். இதன்மூலம் எங்கள் வாடிக்கையாளர்களின் வளர்ந்து வரும் தேவைகளுக்கு ஏற்ப பணம் செலுத்துவதில் எந்த தங்குதடையின்றி ஏற்படாமல் தடுக்க முடியும்.

மேலும் இந்த கூட்டுறவு என்பது இரு முனை செயல்பாட்டையும் டிஜிட்டல் மையமாக மாற்றி தகுந்த வளர்ச்சியைப் பெற வேண்டும் என்ற ஃபுல்லர்டான் இந்தியாவின் திட்டத்தில் ஒரு படி முன்னேற உதவி உள்ளது" என்றார்.

இனி பேடிஎம் மூலம் Fullerton India-க்கு தவணை செலுத்தலாம்!

இந்த நிறுவனத்திற்கு ஏஎஸ்ஹெச்ஏ என்று அழைக்கப்படும் சுயமாக கற்றுக் கொள்ளும் செட்பேட், பேஸ்புக் மெசேஜ்ஜரில் உள்ளது. இதன்மூலம் கடனுக்கு விண்ணப்பம் அளிப்பது, ஆவணங்களைச் சமர்ப்பிப்பது மற்றும் லோன் ஒப்புதலை பெறுவது போன்ற கலந்தாய்வு ஊடகமாக செயல்படுகிறது.


மேலும் தனிகடனைப் பெற விரும்பும் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களுக்காக, ஃபுல்லர்டான் இந்தியா ஒரு சிறப்பான ஆண்ட்ராய்டு அப்ளிகேஷனான இன்ஸ்டாலோனை செயல்பாட்டில் வைத்து உள்ளது. பயோ-மெட்ரிக் அங்கீகார செயல்பாடுகள் மற்றும் பணபரிமாற்ற சாதனங்கள் ஆகியவை இந்நிறுவனத்தால் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட தனித்துவமான முயற்சிகள் ஆகும்.

Best Mobiles in India

English summary
Fullerton India join hands with Paytm for payment solutions: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X