எழுதி வச்சிக்கோங்க! ஆகஸ்ட் 6 - 10 க்குள்.. நம்மில் பலரும் புது Phone வாங்குவாங்க!

|

எழுதி வைத்துக்கொள்ளுங்கள்! ஆகஸ்ட் 6 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10 ஆம் தேதிக்குள்.. நம்மில் பலரும் புது ஸ்மார்ட்போன்களை சொந்தமாக்கி கொள்வோம்!

வெறும் ரூ.6,599 க்கு புதிய ஸ்மார்ட்போன், லேட்டஸ்ட் மாடல்கள் மீது ரூ.15,000 வரை தள்ளுபடிகள் கிடைத்தால் யார் தான் புதிய மொபைல் போன்களை வாங்க மாட்டார்கள்!?

மாஸ் ஓப்பனிங் கொடுத்த Amazon Great Freedom Festival Sale 2022!

மாஸ் ஓப்பனிங் கொடுத்த Amazon Great Freedom Festival Sale 2022!

2022 ஆம் ஆண்டிற்கான Amazon Great Freedom Festival Sale (அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் சேல்) ஆனது நிறுவனத்தின் ப்ரைம் மெம்பர்களுக்காக - ஒரு தினத்திற்கு முன்னதாகவே, அதாவது ஆகஸ்ட் 5 ஆம் தேதி நள்ளிரவு 12:00 மணி முதல் - திறந்து விடப்பட்டுள்ளது

ப்ரைம் மெம்பராக இல்லாதவர்களுக்கு, இதே சிறப்பு விற்பனை ஆகஸ்ட் 6 ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கி ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை நடைபெறும்.

வழக்கம் போல இம்முறையும் ஸ்மார்ட்போன்கள் மீது ஆபர் மழை!

வழக்கம் போல இம்முறையும் ஸ்மார்ட்போன்கள் மீது ஆபர் மழை!

அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் சேலின் போது பல வகையான பொருட்கள் மீது விலைக்குறைப்புகள், தள்ளுபடிகள், மற்றும் சலுகைகள் அணுக கிடைத்தாலும் கூட, உங்கள் கவனம் முழுவதும் ஸ்மார்ட்போன்கள் மீதான ஆபர்களிலேயே தான் இருக்கும் என்றால் - கவலையை விடுங்கள் - நீங்கள் சரியான இடத்திற்கு தான் வந்துள்ளீர்கள்!

ஏனெனில் OnePlus, Apple, Xiaomi, Redmi, Tecno, Samsung, Realme, iQoo மற்றும் Oppo போன்ற நிறுவனங்களிடம் இருந்து என்னென்ன ஸ்மார்ட்போன்கள் மீது என்னென்ன சலுகைகள் அணுக கிடைக்கும் என்கிற Full List (முழு பட்டியல்) இதோ:

SBI, ICICI, Bajaj Finserv, Amazon Pay Later-ஐ பயன்படுத்தினால் கூடுதல் சலுகைகள்!

SBI, ICICI, Bajaj Finserv, Amazon Pay Later-ஐ பயன்படுத்தினால் கூடுதல் சலுகைகள்!

வழக்கமான ஆபர்களுடன் சேர்த்து, அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் விற்பனையின் போது, ​​எஸ்பிஐ கிரெடிட் கார்டுகள் மற்றும் கிரெடிட் இஎம்ஐ வழியாக கூடுதலாக 10 சதவீத உடனடி தள்ளுபடி கிடைக்கும்.

மேலும் நீங்கள் பஜாஜ் ஃபின்சர்வ் EMI கார்டு, Amazon Pay ICICI கிரெடிட் கார்டு, Amazon Pay Later போன்ற விருப்பங்களை தேர்வு செய்தால் நோ காஸ்ட் EMI விருப்பங்களையும் பெறலாம்.

இதுதவிர, அமேசான் கூப்பன்களை கொண்டு ரூ.7,000 வரையிலான கூடுதல் தள்ளுபடியையும் பெறலாம் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்மார்ட்போன்களின் மீது ரூ.6,000 வரை எக்ஸ்சேஞ் வேல்யூ-வையும் பெறலாம்.

எந்தெந்த OnePlus போன்கள் மீது என்னென்ன ஆபர்கள்?

எந்தெந்த OnePlus போன்கள் மீது என்னென்ன ஆபர்கள்?

OnePlus 9 Series ஸ்மார்ட்போன்கள் ஆனது ரூ.37,999 முதல் வாங்க கிடைக்கும். இதன் மேல் ரூ.15,000 வரை தள்ளுபடி, ரூ.5,000 வரையிலான கூடுதல் எக்ஸ்சேஞ்ச் சலுகைகள் மற்றும் SBI வங்கி சலுகைகள் அணுக கிடைக்கும்.

OnePlus 10R ஆனது 6 மாதங்கள் வரையிலான நோ காஸ்ட் EMI உடனாக ரூ.4,000 என்கிற தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கும், எக்ஸ்சேஞ்ச் மற்றும் வங்கி சலுகைகளை சேர்த்தால் கூடுதலாக ரூ.3,000 தள்ளுபடி கிடைக்கும்.

OnePlus 10 Pro 5G மீது ரூ.5000 கூப்பன் தள்ளுபடி, ரூ.6000 எஸ்பிஐ தள்ளுபடி மற்றும் 9 மாதங்கள் வரை நோ காஸ்ட் EMI மற்றும் ரூ.5,000 எக்ஸ்சேஞ் போன்ற சலுகைகள் அணுக கிடைக்கும்.

இதேபோல OnePlus Nord CE 2 Lite 5G ஆனது ரூ.18,999 க்கும், OnePlus Nord CE 2 5G ஆனது ரூ.23,999 க்கும் வாங்க கிடைக்கும்.

எந்தெந்த Apple iPhone மாடல்கள் மீது என்னென்ன ஆபர்கள்?

எந்தெந்த Apple iPhone மாடல்கள் மீது என்னென்ன ஆபர்கள்?

லேட்டஸ்ட் ஐபோன்களை வாங்க விரும்புவார்கள் iPhone 13, iPhone 13 Pro, iPhone 13 Pro Max மற்றும் iPhone 13 Pro Max ஆகியவற்றின் மீது ரூ.15,000 வரை என்கிற தள்ளுபடியை பெறலாம்.

எந்தெந்த Xiaomi, Redmi போன்கள் மீது என்னென்ன ஆபர்கள்?

எந்தெந்த Xiaomi, Redmi போன்கள் மீது என்னென்ன ஆபர்கள்?

Redmi 9 சீரிஸ் வெறும் ரூ.6,999 முதல் வாங்க கிடைக்கும். Redmi Note 10T 5G, Redmi Note 10 Pro, Redmi Note 10 Pro Max மற்றும் Redmi Note 10S மாடல்களை உள்ளடக்கிய ரெட்மி நோட் 10 சீரீஸ் ஆனது கூடுதல் வங்கி தள்ளுபடியுடன் வெறும் ரூ.10,999 முதல் வாங்க கிடைக்கும்.

லேட்டஸ்ட் ஆக அறிமுகமான Redmi K50i 5G ஆனது ரூ.25,999 முதல் வாங்க கிடைக்கும். இதன் மீது எக்ஸ்சேஞ்ச் சலுகை, வங்கி தள்ளுபடி மற்றும் நோ காஸ்ட் EMI விருப்பமும் அணுக கிடைக்கும்.

இதே போல Xiaomi 11 Lite ஆனது ரூ.23,999 க்கும் Xiaomi 11T Pro ஆனது ரூ.35,999 க்கும் வாங்க கிடைக்கும்.

எந்தெந்த Tecno போன்கள் மீது என்னென்ன ஆபர்கள்?

எந்தெந்த Tecno போன்கள் மீது என்னென்ன ஆபர்கள்?

டெக்னோ ஸ்மார்ட்போன்களின் மீது 30 சதவீதம் வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அமேசான் விற்பனையின் போது, டூயல் ரியர் கேமராக்களை பேக் செய்யும் Tecno Pop 5 LTE ஸ்மார்ட்போனை நீங்கள் வெறும் ரூ.6,599 க்கு வாங்கலாம்.

எந்தெந்த Samsung போன்கள் மீது என்னென்ன ஆபர்கள்?

எந்தெந்த Samsung போன்கள் மீது என்னென்ன ஆபர்கள்?

இந்த அமேசான் ஃப்ரீடம் விற்பனையின் போது சாம்சங் நிறுவனத்தின் மொத்த எம் சீரிஸ் மாடல்களின் மீதும் சலுகைகள் கிடைக்கும்.

குறிப்பாக Samsung Galaxy M33 5G மீது ரூ.10,000 வரை தள்ளுபடியும் மற்றும் Samsung M32 மீது ரூ.5,000 தள்ளுபடியும் கிடைக்கும்.

எந்தெந்த iQOO போன்கள் மீது என்னென்ன ஆபர்கள்?

எந்தெந்த iQOO போன்கள் மீது என்னென்ன ஆபர்கள்?

iQOO ஸ்மார்ட்போன்களின் மீது ரூ.10,000 வரை தள்ளுபடி கிடைக்கும். சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட iQOO Neo 6 5G ஆனது ரூ.3,000 என்கிற கூடுதல் தள்ளுபடி சலுகையுடன் ரூ.29,999 க்கு வாங்க கிடைக்கும்.

iQOO Z6 Pro ஆனது ரூ.23,999 க்கும், iQOO Z6 5G ஆனது கூப்பன் மற்றும் வங்கி தள்ளுபடிகளுடன் ரூ.14,999 க்கும் வாங்க கிடைக்கும்.

இதேபோல iQOO 9 SE, iQOO 9 5G மற்றும் iQOO 9 Pro 5G உள்ளிட்ட ஃபிளாக்ஷிப் போன்களின் மீதும் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

எந்தெந்த Realme போன்கள் மீது என்னென்ன ஆபர்கள்?

எந்தெந்த Realme போன்கள் மீது என்னென்ன ஆபர்கள்?

ரியல்மி போன்களின் மீது ரூ.7000 வரையிலான தள்ளுபடிகள் அணுக கிடைக்கும். Narzo 50 5G, Narzo 50 Pro மற்றும் Narzo 50A Prime போன்ற மாடல்கள் ரூ.11,499 முதல் வாங்க கிடைக்கும்.

எந்தெந்த Oppo போன்கள் மீது என்னென்ன ஆபர்கள்?

எந்தெந்த Oppo போன்கள் மீது என்னென்ன ஆபர்கள்?

Oppo A சீரீஸின் கீழ் ரூ.6500 வரையிலான தள்ளுபடியும், Oppo F சீரீஸின் கீழ் ரூ.5000 வரையிலான தள்ளுபடியும் கிடைக்கும். இந்த ஃப்ரீடம் விற்பனையின் போது Vivo ஸ்மார்ட்போன்களின் மீது ரூ.5000 வரையிலான தள்ளுபடி கிடைக்கும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Full List of Best Mobile Phone Offers Amazon Great Freedom Festival 2022 From August 6 to August 10

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X