Smartphone கேமராவை தூக்கி போடுங்க! Fujifilm Instax Mini 12 உடனே வாங்குங்க! எல்லாமே இதுல இன்ஸ்டன்ட்!
ஸ்மார்ட்போனுடன் கேமரா வந்த பிறகு மக்கள் டிஜிட்டல் கேமராக்களை முழுமையாக மறந்துவிட்டனர். உண்மையை சொல்ல போனால், டிஜிட்டல் கேமராக்கள் இருந்த போது, மக்கள் அதிகமான போட்டோக்களை ஃபிரேம் செய்தனர். ஆனால், இன்றோ எல்லாரும் மொபைலிலேயே பத்திரப்படுத்திவிடுகின்றனர்.
நம்முடைய நினைவுகளை எல்லாம் நாம் இப்போது போட்டோஸ் கேலரியில் வைத்து லாக் செய்துவிடுகிறோம். இது நம்முடைய வாழ்க்கையில் நடந்த சில சிறந்த நிமிடங்களை, அதன் நினைவோடு கேலரியில் பூட்டப்படுகிறது. நம்முடைய சிறந்த நிமிடங்களையும், நினைவுகளையும் படம் பிடித்து, அதை கேலரியில் லாக் செய்து வைப்பதினால் என்ன பயனிருக்கிறது சொல்லுங்கள். நாம் இப்படி மாறியதற்கு பல காரணங்கள் இருந்தாலும், முக்கிய காரணமாக போட்டோக்களை டெவலப் செய்வது மக்களுக்கு பெரும் கஷ்டமாக இருந்தது.

ஆம், உண்மை இது தான். நாம் எடுக்கும் புகைப்படங்களை டெவலப் செய்து, அல்லது அவற்றை பிரிண்ட் செய்து, போட்டோ பிரேம்களில் அழகேற்றி, வீட்டில் வைத்து அழகு பார்ப்பதற்குள், நமக்கு அலைச்சலால் உடலே அலுத்துப் போய்விடும். இத்தகைய சிக்கல்களை சுலபமாக கடக்க உருவாக்கப்பட்ட சாதனம் தான் Fujifilm Instax Mini 12 ஆகும். இந்த இன்ஸ்டாக்ஸ் கேமரா, நீங்கள் விரும்பும் நிகழ்வை உடனே படம்பிடித்து, அதை உடனே பிரிண்ட் செய்து வழங்குகிறது.
இதனால், உங்களுடைய இனிமையான நினைவுகளை இனி போட்டோ கேலரியில் லாக் செய்து வைத்து பார்ப்பதை தவிர்த்துவிட்டு. இனி தாராளமாக கைகளில் ப்ரிண்டட் போட்டோக்களாக ரசித்து பார்க்க இந்த Fujifilm Instax Mini 12 சாதனம் அனுமதிக்கிறது. Fujifilm இந்தியாவில் புதிய Instax Mini 12 இன்ஸ்டன்ட் கேமராவை அறிமுகப்படுத்தியுள்ளது. இது Instax Mini 11 இன் மேம்படுத்தப்பட்ட புதிய வாரிசாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இது புத்துணர்ச்சியூட்டும் பேஸ்டல் ஷேட்களையும், ஆட்டோ எக்ஸ்போஷர் போன்ற அம்சங்களையும் கொண்டு வருகிறது. Fujifilm Instax Mini 12 கேமரா இப்போது இந்தியாவில் ரூ.10,000 விலைக்குள் வாங்க கிடைக்கிறது. Fujifilm வழங்கும் அறிமுகம் சலுகையை சரியாக பயன்படுத்திக்கொண்டால், இந்த புதிய இன்ஸ்டன்ட் கேமராவை வெறும் ரூ.7,000 விலையில் வாங்க ஒரு அரிய வாய்ப்பு கிடைக்கிறது.

இன்ஸ்டாக்ஸ் மினி 12 என்பது புஜிஃபில்மின் இன்ஸ்டன்ட் கேமரா மாடலாகும். இது கிலே வைட், லிலியாக் பர்பிள், மின்ட் க்ரீன், பேஸ்டல் ப்ளூ மற்றும் ப்ளாசம் பிங்க் வண்ணங்களில் வாங்க கிடைக்கிறது. இதன் சிறப்பம்சமாக ஆட்டோ எக்ஸ்போஷர் திகழ்கிறது. இது இன்ஸ்டன்ட்டாக புகைப்படங்களை எடுத்து, குறிப்பிட்ட சூழ்நிலைக்கு ஏற்ற சரியான வெளிப்பாட்டை பிரிண்ட் வடிவத்தில், சில நொடிகளில் வழங்குகிறது.
இந்த கேமராவில் க்ளோஸ்-அப் மோட் அம்சமும் உள்ளது. இது செல்ஃபிகள் மற்றும் நெருக்கமான காட்சிகளுக்கு ஏற்றது. சிறந்த செல்ஃபி புகைப்படங்களை எடுக்க, இதில் செல்ஃபி மிரர் மோட் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஸ்டன்ட் கேமரா LED பிளாஷ் உடன் வருகிறது. Fujifilm Instax Mini 12 இல் ஒரு வியூ பைண்டர் (Viewfinder) உள்ளது. இதில் காணப்படுவது போலவே உங்கள் போட்டோவின் இறுதி பிரிண்ட் இருப்பதை உறுதிப்படுத்த உதவுகிறது.
இந்த கேமரா 2 பேர் லென்ஸ் மற்றும் 2 AAA சைஸ் பேட்டரிகளுடன் வருகிறது. இதன் ஃபிலிம்கள் தனித்தனியாக விற்கப்படுகின்றன. Fujifilm Instax Mini 12 விலை ரூ.9,499 ஆகும். இப்போது இது Amazon, Flipkart, Nykaa மற்றும் முன்னணி சில்லறை விற்பனை கடைகள் வழியாக வாங்க கிடைக்கிறது. இன்ஸ்டாக்ஸ் இணையதளத்தில் இந்த சாதனம் பெஸ்டான சலுகையாக ரூ.7,499 என்ற தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications