Home
News

ஆகஸ்ட் 1 முதல் எல்லாமே மாறுது.. SBI முதல் UPI வரை.. கவனிக்க வேண்டிய விஷயங்கள்..

2025 ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் பல விதிமுறைகள் இந்தியாவில் மாறவிருக்கின்றன. குறிப்பாக சிலிண்டர் விலை மற்றும் வங்கிச் சேவைகளில் மாற்றம் வரும். இதுதவிர யுபிஐ (upi) கட்டணங்கள் தொடர்பாக பெரிய மாற்றங்கள் வரவிருக்கின்றன. இது குறித்த விரிவான தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

சிலிண்டர் விலையில் மாற்றம்: அதாவது ஒவ்வொரு மாதமும் சமையல் சிலிண்டர் விலையில் மாற்றம் வருவது வழக்கம் தான். அந்த வகையில் வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி சிலிண்டர் விலையில் மாற்றம் வரும் என்று கூறப்படுகிறது. இந்த ஜூலை மாதம் தொடக்கத்தில் வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.60 குறைக்கப்பட்டது. அதேபோல் வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி சிலிண்டர் விலை மாறுமா அல்லது அப்படியே இருக்குமா என பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

ஆகஸ்ட் 1 முதல் எல்லாமே மாறுது.. SBI முதல் UPI வரை..

எஸ்பிஐ (sbi): வரும் ஆகஸ்ட் மாதம் முதல் எஸ்பிஐ கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஒரு முக்கியமான மாற்றம் வருகிறது. அதவது ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் எஸ்பிஐ வங்கி பல பிராண்டட் கிரெடிட் கார்டுகளில் இலவச விமான விபத்து காப்பீட்டை நிறுத்துவதாகத் தெரிவித்துள்ளது.

குறிப்பாக செண்ட்ரல் வங்கி, யூகோ வங்கி, கரூர் வைஸ்யா வங்கி, அலகாபாத் வங்கி மற்றும் எஸ்பிஐ ஆகியவை சில எலைட் மற்றும் பிரைம் கார்டுகளில் ரூ.1 கோடி அல்லது ரூ.50 லட்சட் காப்பீட்டை வழங்கின. ஆனால் இனி அந்த சலுகை கிடைக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுபிஐ புதிய விதிகள்:

ஒரு நாளில் 50 முறை மட்டுமே: ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் கூகுள் பே, பேடிஎம், போன்பே போன்ற யுபிஐ செயலிகளில், ஒரே நாளில் 50 முறை மட்டுமே கணக்கு இருப்பு (Account Balance) பார்வையிட முடியும். அதாவது ஒவ்வொரு யுபிஐ செயலிகளிலும் 24 மணி நேரத்திற்கு உங்களுக்கு அதிகபட்சம் 50 முறை மட்டுமே பேங்க் பேலன்ஸ் பார்க்க அனுமதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மொபைல் எண் + வங்கி கணக்கு: வரும் ஆகஸ்ட் 1 2025 முதல் உங்களது மொபைல் எண் எந்த வங்கிக் கணக்குகளுடன்(linked accounts) இணைக்கப்பட்டுள்ளது என்பது குறித்த தகவல்களை ஒரு நாளைக்கு 25 முறை மட்டுமே பார்க்க முடியும். அதாவது பல யுபிஐ செயலிகள் பின்னணி செயல்பாடுகளில் மீண்டும் மீண்டும் உங்கள் linked bank accounts-ஐ சரிபார்க்கும். இது சேவையை மெதுவாக்கும், backend-ல் அதிக சுமையை ஏற்படுத்தும். இதை தவிர்க்கும் வகையில், ஒரு நாளுக்கு 25 முறை என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

பரிவர்த்தனை ஸ்டேட்டஸ்: சர்வீஸ் ப்ரோவைடர்கள் அல்லது வங்கிகள் மூலம் பரிவர்த்தனையின் நிலையைச் (Transaction Status) சரிபார்க்கும் எண்ணிக்கையை புதிய விதிகளின் படி கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எனவே இனி அதிகட்சம் 3 முறை மட்டுமே பரிவர்த்தனை நிலையைச் சரிபார்க்க முடியும் என்று கூறப்படுகிறது. இதில் இரண்டு சரிபார்ப்பு முயற்சிகளுக்கிடையில் குறைந்தது 90 நொடிகள் இடைவெளி இருக்க வேண்டும்.

ஆகஸ்ட் 1 முதல் எல்லாமே மாறுது.. SBI முதல் UPI வரை..

Auto-Debit பணப்பரிவர்த்தனை: அதாவது Auto-Debit என்பது உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து தானாகப் பணம் பிடிக்கப்படும் நடைமுறை ஆகும். Netflix, Hotstar போன்ற ஓடிடி சந்தாக்கள், SIP முதலீடுகள், இஎம்ஐ, காப்பீடு கட்டணம் போன்றவை தானாக செலுத்தக் கூடிய கட்டணங்கள் ஆகும். வரும் ஆகஸ்ட் 1 முதல் இந்த ஆட்டோ டெபிட் முறையில் நேரம் மாற்றியமைக்கப்படும்

அதன்படி காலை 10 மணிக்கு முன், மதியம் 1 மணி முதல் 5 மணி வரை, இரவு 9:30 மணிக்கு பிறகு ஆகிய நேரங்களில் மட்டுமே இனி பணம் பிடித்தம் செய்யப்படும். எனவே இந்த நேரங்களுக்கு மட்டுமே ஆட்டோ டெபிட் பணம் செலுத்த முடியும் என்பதைக் கவனிக்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
From UPI to credit cards, big changes coming from August 1: Check out the full list
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X