Home
News

அக்டோபர் 1 முதல் எல்லாமே மாறுது.. ரயில் டிக்கெட் முதல் UPI வரை.. புதிய விதிகள்.. இதோ முழு விவரம்..

வரும் அக்டோபர் 1, 2025 முதல் நாடு முழுவதும் பல முக்கிய புதிய விதிகள் (New Rules) செயல்படுத்தப்பட உள்ளன. அதுவும் யுபிஐ முதல் ரயில் டிக்கெட் வரை பல புதிய மாற்றங்கள் வர உள்ளன. அடுத்த மாதம் தொடங்க இன்னும் 1 நாள் உள்ள நிலையில் என்னென்ன புதிய மாற்றங்கள் வரும் என்பதை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

யுபிஐ புதிய விதிகள்
அக்டோபர் 1, 2025 முதல் யுபிஐ சேவையில் ஒரு புதிய மாற்றம் வருகிறது. அதாவது கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற யுபிஐ செயலிகளைப் பயன்படுத்தி உறவினர்கள், நண்பர்கள் அல்லது வேறு யாரிடமிருந்தும் நீங்கள் இனி நேரடியாக பணம் கோர முடியாது. அதாவது யுபிஐ-இன் கலெக்ட் ரெக்கொஸ்ட் (UPI Collect Request) அல்லது ஃபுல் டிரான்ஸாக்ஷன் அம்சம் முற்றிலும் நிறுத்தப்படுகிறது.

அக்டோபர் 1 முதல் எல்லாமே மாறுது.. ரயில் டிக்கெட் முதல் UPI வரை..

குறிப்பாக இது வேறொருவருக்கு கட்டணக் கோரிக்கையை அனுப்பி பணம் கேட்க உங்களை அனுமதிக்கும் அம்சமாகும். யுபிஐ (UPI) பரிவர்த்தனைகளை மிகவும் பாதுகாப்பானதாக்கவும், ஆன்லைன் மோசடி மற்றும் ஃபிஷிங்கைத் தடுக்க NPCI இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரயில் டிக்கெட் புதிய விதிகள்
அக்டோபர் 1, 2025 முதல் ஆதார் இணைக்கப்பட்ட IRCTC கணக்குகள் மட்டுமே முதல் 15 நிமிடங்களுக்கு ரயில் பொது முன்பதிவு டிக்கெட்டுகளை ஆன்லைனில் முன்பதிவு செய்ய முடியும். உதாரணமாக முன்பதிவு காலை 10 மணிக்கு திறந்தால், ஆதார் அங்கீகரிக்கப்பட்ட பயனர்கள் மட்டும் காலை 10 மணி முதல் காலை 10.15 மணி வரை முன்பதிவு செய்ய முடியும். அந்த 15 நிமிடங்களுக்குப் பிறகு IRCTC கணக்கு உள்ள எவரும் வழக்கம் போல் முன்பதிவு செய்யலாம்.

ஆனாலும் நேரடி கவுண்டர்களில் டிக்கெட் முன்பதிவுகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. அதாவது ஆதார் இல்லாமல் ரயில்வே கவுண்டர்களில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக ஐஆர்சிடிசி கணக்குகள் உடன் ஆதார் அட்டையை இணைப்பது போலி கணக்குகள் மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதைத் தடுக்க உதவும், அதிக விலைக்கு டிக்கெட்டுகளை வாங்கி விற்கும் தரகர்களைத் தடுக்கும் வகையில் தான் இந்த விதிகள் கொண்டுவரப்பட்டுள்ளன. முன்பு கூறியதை போல் இந்த விதிகள் ஏற்கனவே தட்கல் முன்பதிவுகளில் உள்ளது. இப்போது இந்த விதி பொது முன்பதிவுகளுக்கும் கொண்டுவரப்பட்டுள்ளது.

ஆதார் கார்டை இணைக்கும் வழிமுறைகள்
அதாவது ஐஆர்சிடிசி வலைத்தளம் அல்லது செயலியில் நுழையவும். அடுத்து மை ப்ரொபைல் பகுதிக்குச் செல்லவும். அதன்பின்னர் ஆதார் அங்கீகாரம் (Aadhaar Authentication) என்பதைக் கிளிக் செய்யவும். இப்போது உங்கள் 12 இலக்க ஆதார் எண்ணை உள்ளிடவும். உங்கள் ஆதாரில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பப்பட்ட ஓடிபி வரும் அதை இங்கு உள்ளிட்டு சரிபார்க்கவும். உங்கள் ஐஆர்சிடிசி கணக்கு விவரங்கள் (பெயர், மொபைல் எண் போன்றவை) ஆதாருடன் பொருந்துகின்றனவா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அக்டோபர் 1 முதல் எல்லாமே மாறுது.. ரயில் டிக்கெட் முதல் UPI வரை..

EPFO தீபாவளி பரிசு
அக்டோபர் மாதம் பிஎப் கணக்கு வைத்திருக்கும் மக்களுக்கு மத்திய அரசு ஒரு மிகப்பெரிய பரிசை வழங்க உள்ளது. அதாவது வரும் அக்டோபர் 10, 11 தேதிகளில் நடைபெறும் ஒரு முக்கியமான கூட்டத்தில், சந்தாதாரர்கள் தங்கள் பிஎப் கணக்குகளில் இருந்து நேரடியாக ஏடிஎம்களில் மூலம் பணம் எடுக்க அனுமதிக்கும் திட்டம் முன்வைக்கப்படும்.

இதுதவிர குறைந்தபட்ச ஓய்வூதியத்தை ரூ.1000 லிருந்து ரூ.1500-ரூ.2500 ஆக உயர்த்துவது இந்த EPFO கூட்டத்தில் விவாதிக்கப்படலாம். மேலும் இபிஎப்ஒ அதன் புதிய டிஜிட்டல் சேவையான இபிஎப்ஒ 3.0 அக்டோபரில் தொடங்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

ஆன்லைன் கேமிங்
அக்டோபர் 1 2025 முதல் ஆன்லைன் கேமிங் உலகமும் பெரிய மாற்றங்களுக்கு உள்ளாக உள்ளது. அதாவது விதிகளை அமல்படுத்துவதற்கு முன்பு, அரசாங்கம் கேமிங் நிறுவனங்கள் வங்கிகள் மற்றும் பிற பங்குதாரர்களுடன் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளது. மேலும் ஜனாதிபதி திரௌபதி முர்மு ஏற்கனவே சட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளார். இந்த விதிகள் ஆன்லைனில் கேமிங்கை மிகவும் பாதுகாப்பானதாகவும் வெளிப்படையானதாகவும் மாற்றுவதையும், வீரர்களை மோசடியிலிருந்து பாதுகாப்பதையும், நிறுவனங்களைக் கண்டிப்பாகக் கண்காணிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

அக்டோபர் 1 முதல் எல்லாமே மாறுது.. ரயில் டிக்கெட் முதல் UPI வரை..

சிலிண்டர் விலை
கடந்த சில மாதங்களாகவே வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் இருக்கிறது. எனவே வரும் அக்டோபர் 1-ம் தேதி சிலிண்டர் விலை ஏறலாம் அல்லது குறையலாம். இந்த இரண்டுமே சாமானிய மக்களின் வீட்டு பட்ஜெட்டில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

Best Mobiles in India

English summary
From train ticket booking to UPI, new rules to come into effect from October 1: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X