ஆன்லைனில் விற்பனையை எதிர்த்து இரவு 12 மணி முதல் மருந்தகங்கள் ஸ்டிரைக்.!
ஆன்லைனில் மருந்து விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து வணிர்கள் 24 மணி நேரம் மருந்தகங்களை அடைத்து ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நோயாளிகள் மருந்துகளை பெற முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மே
ஆன்லைனில் மருந்து விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து வணிர்கள் 24 மணி நேரம் மருந்தகங்களை அடைத்து ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் நோயாளிகள் மருந்துகளை பெற முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும் இந்த நிலை தொடர்ந்தால் நோயாளிகள் கடும் அவதிக்கு ஆளாகி நேரிடும்.

மத்திய அரசு முடிவு:
இந்த மாத தொடக்கத்தில் ஆன்லைன் மூலம் மருந்துகளை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவெடித்துள்ளது. மேலும் இந்த மருந்துகள் அமேசான், பிளிப்கார்ட், ரிலையன்ஸ் டிஜிட்டல் ஆன்லைன் உள்ளிட்ட பல்வேறு ஆன்லைன் தளங்களிலும் விற்பனைக்கு வரலாம். இதனை கண்டித்து 24 மணி நேரம் தமிழகம் முழுவதும் மருந்து கடைகளை மூடி விற்பனையாளர்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.

உயிர்காக்கும் மருந்து:
மேலும் உயிர் காக்கும் பொருளாக மருந்துகள் இருப்பதால், அவைகளை ஆன்லைனில் விற்பனை செய்ய மத்திய அரசு அனுமதிக்க கூடாது என விற்பனையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விற்பனையாளர்கள் கருத்து:
ஆன்லைன் மூலம் வாங்கும் போது மருந்துகள் மாறுவதற்கும் காலாவதியான மருந்துகள் அனுப்பி வைக்கப்படுவதற்கும் வாய்ப்புகள் அதிகளவில் உள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நோயாளிகள் அவதி:
தற்போது மருத்துகடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் தமிழகம் முழுவதும் உள்ள நோயாளிகள் உரிய மருந்துகளை பெற முடியாமல் அவதியுள்ளனர். மேலும் இந்த நிலைதொடர்ந்தால் அவர்களுக்கு உயிருக்கும் கூட ஆபத்து நேரிடலாம் என்று கூறப்படுகின்றது.


Click it and Unblock the Notifications