தடை அதை உடை புதுசரித்திரம் படை: சொந்தமாக புதிய வலைதளத்தை தொடங்கிய டிரம்ப்- அக்கவுண்ட் ஓபன் பண்ணலாமா?
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் சமூகவலைதள பக்கத்திற்கு தடை விதிக்கப்பட்டது. டிரம்பின் பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூகவலைதள பக்கம் முடக்கப்பட்டது. இதையடுத்து தற்போது டிரம்ப் தனது சொந்த சமூகவலைதள பக்கத்தை தொடங்கி உள்ளார். From the Desk of Donald J Trump என தனது சொந்த சமூகவலைதளத்தை தொடங்கி உள்ளார்.

டுவிட்டர், பேஸ்புக் மற்றும் யூடியூப்
டுவிட்டர், பேஸ்புக் மற்றும் யூடியூப் போன்ற சமூகவலைதளங்களில் இருந்து டிரம்ப் வெளியேற்றப்பட்ட சில மாதங்களுக்கு பிறகு இந்த அறிவிப்பு வெளியானது. டிரம்ப் புதிய தளம் அறிமுகப்படுத்தியதை அடுத்து, அவரது செய்தி தொடர்பாளர் ஜேசன் மில்லர் தனது டுவிட்டர் பக்கத்தில் டிரம்பின் வலைதளம் அவர் பதவியில் இருந்த காலத்தில் வெளியிடப்பட்ட அறிக்கைகள், சிறப்பம்சங்களும் இருக்கும் எனவும் குறிப்பிட்டார்.

புதிய தகவல் தொடர்பு தளம்
டிரம்பின் புதிய தகவல் தொடர்பு தளம் குறித்து ஃபாக்ஸ் நியூஸ் முதலில் செய்தி வெளியிட்டது. அதேபோல் இது பேஸ்புக் தளத்துக்கு நிகராக இருக்கும் எனவும் வதந்திகள் பரவின. ஆனால் இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இது சமூகவலைதளம் அல்ல என அவரது செய்தி தொடர்பாளர் தெளிவுப்படுத்தினார். அதேபோல் இந்த புதிய தளமானது டிரம்ப் தனது கருத்துகளை பகிர்ந்து கொள்வதற்கும், வீடியோக்களை பதிவிடவும் அவரை பின்தொடர்பவர்கள் அவரிடம் உரையாடவும் மட்டுமே என குறிப்பிட்டார்.

சுதந்திரத்தின் விளக்கு
இந்த தளத்தில் முன்னதாகவே டிரம்பின் வீடியோ, ஜனநாயகக் கட்சி குறித்த கருத்துகளும் உள்ளன. மேலும் பொய்களின் யுகத்தில் சுதந்திரத்தின் விளக்கு எனவும் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் பேசுவதற்கான இடம் எனவும் இந்த தளம் குறிப்பிடப்பட்டிருக்கிறது. டிரம்ப்பின் முடக்கப்பட்ட சமூகவலைதள பக்கம் எப்போது மீண்டும் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தனக்கென ஒரு தளத்தை தொடங்கினார். இந்த தளத்தில் டிரம்ப் பதிவிடப்படும் பதிவுகளை அவரை பின்தொடர்பவர்கள் லைக் செய்வதோடு மட்டுமில்லாமல் கருத்து தெரிவித்து அதை டுவிட்டர் பேஸ்புக் போன்ற தளங்களில் பகிர முடியும் என கூறப்படுகிறது.

நாடாளுமன்றத்தில் புகுந்து கலவரம்
அமெரிக்காவில் கடந்த ஜனவரி மாதம் 6 ஆம் தேதி அதிபர் டிரம்பின் ஜனநாயக கட்சி ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்தில் புகுந்து கலவரத்தில் ஈடுபட்டனர். வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு போன்ற பல்வேறு புகார்கள் முன்வைக்கப்பட்டது. இந்த சம்பவம் நடந்து கொண்டிருந்த நேரத்தில் டிரம்ப் சமூகவலைதளங்களில் தேர்தல் முறைகேடு நடைபெற்றதாக கூறி பல பதிவுகள் பதிவிட்டார்.

தனக்கென தளத்தை தொடங்கிய டிரம்ப்
டிரம்ப் பதிவிட்ட பதிவுகள் வன்முறையை தூண்டும்விதமாக இருக்கிறது என அவரது டுவிட்டர், பேஸ்புக், யூடியூப் தளங்களை சமூகவலைதள நிறுவனங்கள் முழுமையாக முடிக்கின, இதையடுத்து அப்போதே டிரம்ப் தனக்கென சொந்தமாக சமூகவலைதளத்தை தொடங்குவார் என்ற அறிவிப்பு வெளியானது. இதை உறுதிப்படுத்தும் வகையில் டிரம்ப் தனக்கென தளத்தை தொடங்கியுள்ளார்.
File Images


Click it and Unblock the Notifications