Subscribe to Gizbot

வாட்டர் ஏடிஎம் : இதற்கு நாம் பெருமைப்படக்கூடாது, வெட்கப்பட வேண்டும்.!

Written By:

கடைசியாக, தொடர்ந்து 4 அலல்து 5 நாட்களுக்கு மழையில் நனைந்தது எப்போதென்று உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா.?? அல்லது தொடர்ச்சியான இரவு பகல் மழையை சந்தித்த காலம் எப்போதென்றாவது நினைவில் இருக்கிறதா.?

வாட்டர் ஏடிஎம் : இதற்கு நாம் பெருமைப்படக்கூடாது, வெட்கப்பட வேண்டும்.!

இந்த கேள்விகளுக்கான தேடல்கள் நமக்கு கற்பிப்பது என்னெவென்று தெரிகிறதா.?? - தீர்க்கமான மற்றும் செழிப்பான மழைகாலங்களை நாம் மெல்ல மெல்ல இழந்துகொண்டே வருகிறோம் என்பது தான். ஒரு ஆண்டுக்கு, ஒரு குறிப்பிட்ட அளவிலான பூமி வளங்களை மனிதர்கள் அனுபவிக்கலாமென்று ஒரு கணக்கு வைத்துக்கொண்டால் அந்த எல்லையை 7-8 மாதத்திற்கு முன்னரே நாம் கடந்து விடுகிறோம் என்கிறது ஒரு ஆய்வு.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
பெரும் பாடமாய் அமையும்

பெரும் பாடமாய் அமையும்

பேராசைக்கூட்டமாய் திரியும் மனிதர்களுக்கு, வளங்களை அள்ளியள்ளி கொடுக்கும் அதே பூமிதான் ஒன்றுமே கொடுக்காமல் பெரும் பாடமாய் அமையும் என்பதில் சந்தேகமேயில்லை ஏற்கனவே தண்ணீரை காசு கொடுத்து வாங்க ஆரம்பித்து பல ஆண்டுகள் ஓடிவிட்டது இப்போது வாட்டர் ஏடிஎம் (Water ATM).!

சுத்தமான நீரை அணுக முடியாது மக்களுக்கா

சுத்தமான நீரை அணுக முடியாது மக்களுக்கா

கடந்த சனிக்கிழமையன்று, ஹைதராபாத் நகரின் முதல் தண்ணீர் ஏடிஎம் அறிமுகம் செய்யப்பட்டு, பயன்பாட்டிற்கு திறந்து விடப்பட்டது. பொது மக்களுக்கு சுத்தமான மற்றும் கனிமங்கள் நிறைந்த நீர் வழங்கும் நோக்கத்தில், குறிப்பாக இந்த அளவிலான சுத்தமான நீரை அணுக முடியாது மக்களுக்காக இந்த தண்ணீர் ஏடிஎம்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

200-க்கும் மேற்பட்ட தண்ணீர் ஏடிஎம்கள் நகரம் முழுவதும்

200-க்கும் மேற்பட்ட தண்ணீர் ஏடிஎம்கள் நகரம் முழுவதும்

நகரின் என்.டி.ஆர் கார்டனில் அமைந்துள்ள இந்த வாட்டர் ஏடிஎம்களை மேயர் பி. ராம்மோகன் துவங்கி வைத்தார். இந்த ஆண்டு இறுதிக்குள் 200-க்கும் மேற்பட்ட தண்ணீர் ஏடிஎம்கள் நகரம் முழுவதும் தொடங்கப்படுமென்று கிரேட்டர் ஹைதராபாத் முனிசிபல் கார்ப்பரேஷன் (Greater Hyderabad Municipal Corporation - GHMC) கூறியுள்ளது.

ரூ.1/-க்கு 1 கிளாஸ்

ரூ.1/-க்கு 1 கிளாஸ்

இந்த மெஷின்களில் ரூ.1/-க்கு 1 கிளாஸ் தண்ணீரும், ரூ.2/-க்கு 1 லிட்டர் தண்ணீரும், ரூ.5/-க்கு 10 லிட்டர் தேநீரும் மற்றும் ரூ.10/-க்கு 20 லிட்டர் தண்ணீரும் கிடைக்கும், அதாவது வாங்கி கொள்ளலாம். "இந்த தண்ணீர், எந்தவிதமான சேறு உருவாக்கமும் (sludge formation), எந்த இரசாயன பயன்பாடும் இல்லாமலும் உருவான 99 சதவிகிதம் தூய்மையான நீராகுமென்று" ஜோசப் இந்தியாவின் மேலாளர் தினேஷ் ரெட்டி தெரிவித்துள்ளார்.

ஏழைப்பகுதிகளின் மீது முக்கிய கவனம்

ஏழைப்பகுதிகளின் மீது முக்கிய கவனம்

நகரத்தின் ஏழைப்பகுதிகளின் மீது முக்கிய கவனம் செலுத்தும் நோக்கத்திலேயே இந்த வாட்டர் ஏடிஎம்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதென்பது வெளிப்படை. மேலும் இதுபோன்ற தண்ணீர் ஏடிஎம்கள் மெதுவாக நாடு முழுவதும், அதாவது நாக்பூர், பெங்களூரு, தில்லி மற்றும் குர்கான் (மானேசர்) ஆகிய நகரங்களில் அறிமுகம் செய்யப்படவும் திட்டமிடப்பட்டுள்ளது.

மகிழ்வதா.? வருத்தம் கொள்வதா.??

மகிழ்வதா.? வருத்தம் கொள்வதா.??

ஏழைகளுக்கு சுத்தமான குடிநீர் மிகவும் மலிவான விலையில் கிடைக்கிறது என்று மகிழ்வதா.? அல்லது மிகவும் அத்தியாவசிய பொருளான தண்ணீரை ஒரு சேவையாக விநியோகம் செய்யாமல், இப்படி காசு கொடுத்து தண்ணீர் வாங்கும் நிலையை அரசாங்கமோ உருவாக்குவதை எண்ணி வருத்தம் கொள்வதா.??

வாழ்த்துக்கள் மனித இனமே

வாழ்த்துக்கள் மனித இனமே

அல்லது இந்த நிலைக்கு மனிதர்களாகிய நாம் தான் காரணம், நாம் இதை அனுபவிக்க வேண்டியவர்கள் தான், இது வெறும் ஆரம்பம் தானென்று சகித்துக்கொள்வதா.?? - தெரியவில்லை. அடுத்தது என்ன.? ஆக்சிஜனை காசு கொடுத்து வாங்குவோம், அதானே.? - வாழ்த்துக்கள் மனித இனமே மழைக்கான மரங்களையும், மனிதர்களுக்கான நிழல்களையும் வெள்ளையடித்ததற்கு.!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
From ₹1 to ₹10: First of 200 Water ATMs Opens in Hyderabad. Read more about this in Tamil GizBot.

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot