அமெரிக்காவிற்கு போகவே கூடாது என்பதற்கான 9 காரணங்கள்.!

அதிர்ச்சிக்குரிய வகையில் அமெரிக்காவின் என்எஸ்ஏ-வினால் அனுதினமும் நடத்தப்படும் பெரிய அளவிலான உளவு, கண்காணிப்பு மற்றும் நம் ஒவ்வொருக்கு எதிராக நடவடிக்கைகள் என்னென்ன..?

|

"ஆமாம்.. ஆமாம்.. நான் அமெரிக்காவுல இருந்து தான் பேசுறேன்" என்ற பந்தா பார்ட்டிகள், நம்மிடம் வேண்டுமானால் "சீன்" போடலாம். ஆனால் உண்மையில் அவர்களெல்லாம் அமெரிக்காவில் தான் இருக்கிறார்கள் என்றால் - அவர்கள் பந்தா பார்ட்டிகள் அல்ல, பாவப்பட்ட பார்ட்டிகள் என்பது தான் உண்மை.

அமெரிக்காவிற்கு போகவே கூடாது என்பதற்கான 9 காரணங்கள்.!

பொதுவாக அயல்நாடுகளில் வாழுவதென்பது சிறப்பான காரியமில்லை மிகவு, சிரமமான காரியம் என்பதை வெளிநாடுவாழ் வேற்றுநாட்டு மக்கள் நன்கு அறிவர். அதிலும் அமெரிக்கா போன்ற நாட்டில் வாழ்வதென்பது இன்னும் கடினமான ஒன்று என்பதை சில காலங்களுக்கு முன்பு வரை யாருமே ஒற்றுக்கொள்ளவில்லை.

பின்னர் ஒற்றுக்கொள்ள வேண்டிய நிர்பந்தத்தை எட்வார்ட் ஸ்னோடன் உண்டாக்கினார். அமெரிக்க தேசிய பாதுகாப்பு நிறுவனம் (NSA) பற்றிய சர்ச்சைக்குறிய உளவு திட்டங்களை வெளியிட்டார். இருப்பினும் கூட, அமெரிக்க அரசாங்கத்தின் அதிகப்படியான வேவு பார்த்தல் என்பது மிகவும் குறைந்த விகிதத்தில் தான் குறைக்கப்பட்டுள்ளது என்பது தான் நிதர்சனம்.

அமெரிக்காவிற்கு போகவே கூடாது என்பதற்கான 9 காரணங்கள்.!

அமெரிக்காவின் என்எஸ்ஏ அதன் குடிமக்களை மட்டுமின்றி (கிட்டத்தட்ட 30% அமெரிக்கர்களின் தொலைபேசி அழைப்புகள் பதிவு செய்யப்பட்டு என்எஸ்ஏ-வினால் சேகரிக்கப்பட்டு வருகிறது) வெளிநாட்டவர்களையும் காரணம் மற்றும் சந்தேகம் ஏதுமின்றி உளவு பார்க்கிறது. அப்படியாக, அதிர்ச்சிக்குரிய வகையில் அமெரிக்காவின் என்எஸ்ஏ-வினால் அனுதினமும் நடத்தப்படும் பெரிய அளவிலான உளவு, கண்காணிப்பு மற்றும் நம் ஒவ்வொருக்கு எதிராக நடவடிக்கைகள் என்னென்ன.?

இடம், காலம், அழைப்பு நேரம், சம்பந்தப்பட்ட நபர்கள்

இடம், காலம், அழைப்பு நேரம், சம்பந்தப்பட்ட நபர்கள்

நம் தொலைபேசி தரவுகளை தினசரி அடிப்படையில், தற்போது வரையிலாக என்எஸ்ஏ சேகரித்து வருகிறது. இடம், காலம், அழைப்பு நேரம், சம்பந்தப்பட்ட நபர்கள், அவர்களின் எண்கள் போன்ற அனைத்து தரவுகளும் என்எஸ்ஏ-வின் பாரிய சேமிப்பு மையங்களில் சேகரிக்கப்படுகிறது.

சர்வதேச பணம், வங்கி மற்றும் கடன் அட்டை பரிவர்த்தனைகள்

சர்வதேச பணம், வங்கி மற்றும் கடன் அட்டை பரிவர்த்தனைகள்

என்எஸ்ஏ உங்கள் கிரெடிட் கார்ட் பேமண்ட்களை கண்காணிக்கிறது. சர்வதேச பணம், வங்கி மற்றும் கடன் அட்டை பரிவர்த்தனைகள் என்எஸ்ஏ-வினால் கண்காணிக்கப்படுகின்றன. குறிப்பாக விசா போன்ற பெரிய கடன் அட்டை நிறுவனங்கள் தான் இதன் இலக்கு.

ஐபோன்கள், ஆண்ட்ராய்டு, பிளாக்பெரி

ஐபோன்கள், ஆண்ட்ராய்டு, பிளாக்பெரி

நாள் ஒன்றிற்கு சுமார் 200 மில்லியன் டெக்ஸ்ட் மெஸேஜ்களை என்எஸ்ஏ சேகரிக்கிறது. உங்களின் ஸ்மார்ட்போன் ஆப் பயன்பாடு குறித்த தரவுகளை கூட அணுக முடியும். அதாவது ஐபோன்கள், ஆண்ட்ராய்டு, பிளாக்பெரி போன்ற அனைத்து முக்கிய ஸ்மார்ட்போன்களும் என்எஸ்வி-னால் ஹேக் செய்யப்படுகின்றன.

என்க்ரிப்ட் செய்தி

என்க்ரிப்ட் செய்தி

தனியார் தொலைபேசி உரையாடல்களை என்எஸ்ஏ-னால் குறிநீக்கம் (decrypt) செய்ய முடியும். அதாவது என்க்ரிப்ட் செய்திகளை கூட என்எஸ்ஏ-வினால் அதன் அதிநவீன மறைவிலக்க திட்டங்கள் மூலம் குறியாக்க நீக்கம் செய்ய முடியும்.

இமெயில்கள், ஆன்லைன் சாட்கள் மற்றும் ப்ரவுஸிங் ஹிஸ்டரி

இமெயில்கள், ஆன்லைன் சாட்கள் மற்றும் ப்ரவுஸிங் ஹிஸ்டரி

உங்கள் இமெயில்கள், ஆன்லைன் சாட்கள் மற்றும் ப்ரவுஸிங் ஹிஸ்டரி என எல்லாமே என்எஸ்ஏ-வினால் சேகரிக்க முடியும். என்எஸ்ஏ-வின் திட்டமான எக்ஸ்கீஸ்கோர் (XKeyscore) மூலம் மில்லியன் கணக்கான பயனர்களின் தனிப்பட்ட ஆன்லைன் வரலாறு சார்ந்த பரந்த தகவல்கள் சேமிக்கப்படுகிறது.

பேஸ்புக், ட்விட்டர்

பேஸ்புக், ட்விட்டர்

என்எஸ்ஏ உங்கள் சமூக வலைத்தள நடவடிக்கைகளை கண்காணிக்கிறது. உங்கள் தகவல்களை மட்டுமின்றி உங்கள் சமூக ஊடக சுயவிவரங்கள் (பேஸ்புக், ட்விட்டர் முதலியனவற்றில்) இருந்தும் தகவல்களை சேகரிக்கிறது. உங்கள் ஜிபிஎஸ், நீங்கள் அடிக்கடி கொள்ளும் தொடர் போன்ற தனிப்பட்ட தரவுகள் அதன் மூலம் சேகரிக்கப்படுகின்றது.

ஆன்லைன் கேமிங்

ஆன்லைன் கேமிங்

என்எஸ்ஏ, ஆன்லைன் கேமிங் மூலமாகவும் தரவுகளை சேகரிக்கும். ஆன்லைன் கேமிங் என்பது சர்வதேச தகவல் அளவில் தொடர்பு கொள்ளும் பயனுள்ள போர்டலாக உள்ளது என்எஸ்ஏ-வின் கண்காணிப்பு கருவி அந்த தகவல்களை தனதாக்கி வருகிறது.

வானொலி மற்றும் வயர்லெஸ்

வானொலி மற்றும் வயர்லெஸ்

ஆஃப்லைனில் இருக்கும் கணினிகளை கூட என்எஸ்வி-னால் ஹேக் செய்ய முடியும். இவ்வகை ஹேக் ஆனது வானொலி மற்றும் வயர்லெஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நிகழ்த்தப்படுகிறது.

மிரர் சைட்ஸ்

மிரர் சைட்ஸ்

என்எஸ்ஏ பிரதிபலிப்பு தளங்களில் (Mirror Sites) உங்களை நுழைய செய்து, உங்கள் செயல்பாடு பதிவுகளை பெற வல்லது. எடுத்துக்காட்டுக்கு நீங்கள் யாஹூ சர்வரை அணுகினால் என்எஸ்ஏ உங்கள் கோரிக்கையை இடைமறித்து ஒரு பிரபலிப்பு தளத்திற்கு அழைத்து சென்று அதன் மூலம் உங்களை கண்காணிக்க மற்றும் உங்கள் செயல்பாடுகளை பதிவு செய்யும். என்எஸ்ஏ விண்டோஸ் க்ராஷ் அறிக்கைகளையும் திருடுகிறது.

Best Mobiles in India

English summary
From Mobile data, Browsing history to Mirror Sites NSA Surveillance. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X