மே 29-க்கு அப்புறம் எங்களை கையில புடிக்க முடியாது.. செம்ம குஷியில் Gaming பிரியர்கள்.. BGMI ரிட்டர்ன்ஸ்!
பப்ஜி மொபைல் வீடியோ கேம் (PUBG Mobile Video Game) ஆனது இந்தியாவில் தடை செய்யப்பட்ட பின்னர், பப்ஜி பிரியர்களுக்கு பெரும் ஆறுதலாய் இருந்தது பிஜிஎம்ஐ (BGMI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் பேட்டில்கிரவுண்ட்ஸ் மொபைல் இந்தியா (Battlegrounds Mobile India) வீடியோ கேம் தான்!
ஏனென்றால் பப்ஜி மொபைலும், பிஜிஎம்ஐ-யும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான வீடியோ கேம் தான். இன்னும் சொல்லப்போனால் இது முழுக்க-முழுக்க இந்திய கேமர்களை (Indian Gamers) மனதிற்கொண்டு உருவாக்கப்பட்ட கேமாகும், இருப்பினும் கூட கடந்த 2022-ல் பிஜிஎம்ஐ கேம் இந்தியாவில் தடை செய்யப்பட்டது.

பப்ஜி மொபைலை போலவே இதுவும் கூட பாதுகாப்பு காரணங்களுக்காக (Security Concerns) இந்தியாவில் தடை (Ban) செய்யப்பட்டது. நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சீனாவில் அமைந்துள்ள சர்வர்களுடன் (Servers) தொடர்பு கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டு பிஜிஎம்ஐ கேம் இந்திய அரசால் தடை செய்யப்பட்டது.
பின்னர் பல மாதங்கள் கழித்து, இந்திய அரசாங்கத்தின் சில விதிமுறைகளை ஏற்றுக்கொண்டதன் விளைவாக, கிராஃப்டன் நிறுவனத்தின் பிஜிஎம்ஐ கேம் மீதான தடை சமீபத்தில் விலக்கப்பட்டது; அதனை தொடர்ந்து பிஜிஎம்ஐ கேம், கூகுள் பிளே ஸ்டோரில் (Google Play Store) அடவுன்லோட் செய்ய கிடைத்தது; ஆனால் அதை விளையாட முடியவில்லை.
இதற்கிடையில் கிராஃப்டன் நிறுவனமானது, இன்று முதல் (அதாவது மே 27 ஆம் தேதி முதல்) ஆண்ட்ராய்டு பயனர்களால் கூகுள் பிளே ஸ்டோர் வழியாக பிஜிஎம்ஐ கேமை ப்ரீலோட் (Preload) செய்யலாம் என்றும், இந்த கேமை வருகிற மே 29 ஆம் தேதி முதல் விளையாடலாம் என்றும் கிராஃப்டன் நிறுவனம் அறிவித்துள்ளது.
மறுகையில் உள்ள ஐஓஎஸ் (iOS) பயனர்கள், வருகிற மே 29 முதல் இந்த கேமை பதிவிறக்கம் செய்து, அதே நாளில் விளையாட தொடங்கலாம் என்றும் கிராஃப்டன் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் இந்திய ரசிகர்கள் இந்த கேமை எந்த அளவு 'மிஸ்' செய்தார்கள் என்பதை வெளிப்படுத்தும் டீசர் ஒன்றையும் கிராஃப்டன் நிறுவனம் பகிர்ந்துள்ளது.
பிஜிஎம்ஐ கேமிங் வெர்ஷன் மற்றும் சைஸ்: முன்னரே குறிப்பிட்டபடி, பேட்டில்கிரவுண்ட்ஸ் மொபைல் இந்தியா கேம் ஆனது கூகுள் பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது. இந்த மொபைல் கேமின் சமீபத்திய வெர்ஷன் 2.5.0 ஆகும். இதன் அளவு 800எம்பி ஆகும். தற்போதைக்கு இந்த கேமை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஆனால் சர்வர்கள் இன்னும் நேரலையில் இல்லாததால், விளையாட முடியாது.
எனவே இந்த கேமை விளையாட இன்னும் 2 நாட்கள் ஆகும். அதாவது மே 29 வரை நீங்கள் காத்திருக்க வேண்டும். சர்வர்கள் இயங்கியதும், நீங்கள் பிஜிஎம்ஐ ஆப்பை இன்ஸ்டால் செய்து விளையாட தொடங்கலாம். நிறுவனத்தின் கூற்றுப்படி, "இந்த அணுகுமுறை பிளேயர்கள் எந்த இடையூறும் இல்லாமல் கேமை தடையின்றி அனுபவிப்பதை உறுதிசெய்யும்."
பிஜிஎம்ஐ மீதான இந்த திடீர் தடை நீக்கத்திற்கு பின்னால் இந்திய அரசாங்கத்தின் சில விதிமுறைகளே காரணம் என்று கூறப்படுகிறது. இந்திய அரசங்கமானது பிஜிஎம்ஐ கேமிற்கு கால வரம்பை சேர்க்குமாறு கிராஃப்டன் நிறுவனத்தை கேட்டுள்ளதாம், இது கேமர்களின் போதைப்பழக்கத்தை (Addiction) குறைக்குமென்று இந்திய அரசு நம்புகிறது.
மேலும் பிஜிஎம்ஐ வீடியோ கேமின் யூஸர் இன்டர்பேஸ் (User Interface) ஆனது இந்திய பயனர்களுக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கப்பட வேண்டும் என்றும் இந்திய அரசு கேட்டுக்கொண்டதாக தெரிகிறது. இதுபோன்ற சில விதிமுறைகளை கிராஃப்டன் நிறுவனம் ஏற்றுக்கொண்டதன் விளைவாகவே பிஜிஎம்ஐ கேம் மீண்டும் இந்தியாவிற்குள் நுழைந்துள்ளது!


Click it and Unblock the Notifications








