திடீர் டிஸ்கவுண்ட்.. ஜூன் 6 முதல் OnePlus 12, 12R உட்பட 4 ஒன்பிளஸ் போன்களின் விலை குறையும்.. அதுவும் ரூ.5000!
ஆரம்பத்தில் பெரிதாக கண்டுகொள்ளப்படாத ஒன்பிளஸ் நிறுவனமானது, தற்போது ஆப்பிளுக்கு அடுத்தபடியாக வைத்து பார்க்கும்படியான ஒரு பிராண்ட் ஆக வளர்ச்சி அடைந்துள்ளது. "வாங்கினால் ஒன்பிளஸ் பிராண்டட் தயாரிப்புகளை தான் வாங்குவேன்" என்கிற மனநிலையை உருவாக்கும்படியாக ஒன்பிளஸ் நிறுவனம் - ஸ்மார்ட்போன், டேப்லெட், இயர்பட்ஸ், ஸ்மார்ட் வாட்ச் என பல வகையான தயாரிப்புகளை அறிமுகம் செய்து வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்து வருகிறது. இதற்கிடையில் தான் ஒன்பிளஸ் நிறுவனம் அதன் கம்யூனிட்டி சேல் சலுகைகளை (OnePlus community sale offers) அறிவித்துள்ளது.
2024 ஜூன் 6 ஆம் தேதி முதல் தொடங்கும் ஒன்பிளஸ் கம்யூனிட்டி சேல்-ன் போது, சில தினங்களுக்கு முன் அறிமுகமான ஒன்பிளஸ் 12 க்ளேஷியல் ஒயிட் கலர் ஆப்ஷன், ஒன்பிளஸ் 12ஆர், ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4, ஒன்பிளஸ் ஓப்பன் போன்ற ஸ்மார்ட்போன்கள் மீது நேரடி தள்ளுபடி மற்றும் சிறப்பு சலுகைகள் அணுக கிடைக்கும்.

ஸ்மார்ட்போன்கள் மீது மட்டுமின்றி ஒன்பிளஸ் பேட், ஒன்பிளஸ் பேட் கோ, ஒன்பிளஸ் வாட்ச் 2, ஒன்பிளஸ் பட்ஸ் 2 ப்ரோ என மற்ற ஒன்பிளஸ் தயாரிப்புகள் மீதும் நேரடி தள்ளுபடி மற்றும் சிறப்பு சலுகைகள் அணுக கிடைக்கும். என்னென்ன தயாரிப்புகள் மீது என்னென்ன ஆபர்கள் கிடைக்கும்? இதோ விவரங்கள்:
1. ஒன்பிளஸ் 12 க்ளேஷியல் ஒயிட் (OnePlus 12 Glacial White): ஜூன் 6 தொடங்கும் ஒன்பிளஸ் கம்யூனிட்டி விற்பனையில், ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனின் புதிய க்ளேஷியல் ஒயிட் கலர் ஆப்ஷன் மீது ரூ.3,000 உடனடி வங்கி தள்ளுபடி மற்றும் ரூ.2,000 சிறப்பு கூப்பன் தள்ளுபடி அணுக கிடைக்கும். மேலும் முக்கிய பேங்க் கார்டுகளில் 12 மாதங்கள் வரையிலான நோ-காஸ்ட் இஎம்ஐ விருப்பமும் அணுக கிடைக்கும்.
கூடுதலாக பழைய ஸ்மார்ட்போனை எக்ஸ்சேன்ஜ் செய்தால் ரூ.12,000 வரையிலான போனஸும் கிடைக்கும். இந்த சலுகைகள் அமேசான், ஒன்பிளஸ் ஆன்லைன் ஸ்டோர், ஒன்பிளஸ் எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டோர்கள் மற்றும் ரிலையன்ஸ் டிஜிட்டல், க்ரோமா, விஜய் ஸ்லெஸ் மற்றும் பஜாஜ் எலெக்ட்ரானிக்ஸ் வழியாக அணுக கிடைக்கும்.
2. ஒன்பிளஸ் 12ஆர் (OnePlus 12R): ஒன்பிளஸ் 12 சீரிஸின் கீழ் உள்ள இன்னொரு ஸ்மார்ட்போன் ஆன ஒன்பிளஸ் 12ஆர் மீதான சலுகைகளை பொறுத்தவரை, ரூ.2000 உடனடி வங்கி தள்ளுபடி மற்றும் ரூ.2000 சிறப்பு கூப்பன் தள்ளுபடி கிடைக்கும். இந்த சலுகைகள் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்பிளஸ் 12ஆர் வேரியண்ட்களுக்கேயு மட்டுமே பொருந்தும். இதுதவிர்த்து ஐசிஐசிஐ பேங்க், எச்டிஎப்சி பேங்க் கார்டுகளை பயன்படுத்தும்போது பிரத்யேக வங்கி தள்ளுபடிகளும் அணுக கிடைக்கும்.
3. ஒன்பிளஸ் ஓப்பன் (OnePlus Open): ஒன்பிளஸ் நிறுவனத்தின் முதல் போல்டபிள் ஸ்மார்ட்போன் ஆன ஒன்பிளஸ் ஓப்பன் உடன் ஒன்பிளஸ் வாட்ச் 2 ஸ்மார்ட்வாட்ச் இலவசமாக கிடைக்கும். மேலும் ஐசிஐசிஐ வங்கி, எச்டிஎப்சி வங்கி கார்டுகளை பயன்படுத்தினால் ரூ.5000 வரையிலான உடனடி தள்ளுபடியும் கிடைக்கும். கூடவே 12 மாதங்கள் வரையிலான நோ-காஸ்ட் இஎம்ஐ விருப்பமும் அணுக கிடைக்கும்.
4. ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 (OnePlus Nord CE4): ஒன்பிளஸ் நிறுவனத்தின் இந்த பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனை, வாங்கும்போது ஐசிஐசிஐ வங்கி, எச்டிஎப்சி, ஒன்கார்டு, பாப்கார்டுமற்றும் ஐடிஎப்சி ஃபர்ஸ்ட் வங்கி கார்டுகளை பயன்படுத்தினால் ரூ.2,000 உடனடி வங்கி தள்ளுபடி கிடைக்கும். கூடவே இந்த ஸ்மார்ட்போன் வாங்க 6 மாதங்கள் வரையிலான நோ-காஸ்ட் இஎம்ஐ விருப்பமும் அணுக கிடைக்கும்.
ஒன்பிளஸ்-ன் மற்ற தயாரிப்புகள் மீது என்னென்ன ஆபர் கிடைக்கும்? ஒன்பிளஸ் பேட் மீது ரூ.3,000 மற்றும் ஒன்பிளஸ் பேட் கோ மீது ரூ.2,000 சிறப்பு விலை கூப்பனை பெறலாம். மேலும், வாடிக்கையாளர்கள் 9 மாதங்கள் வரையிலான நோ-காஸ்ட் இஎம்ஐ விருப்பதையும் பெறலாம்; கூடவே முறையே ரூ.5,000 மற்றும் ரூ.2,000 உடனடி வங்கி தள்ளுபடிம் அணுக கிடைக்கும். ஒன்பிளஸ் வாட்ச் 2-ஐ பொறுத்தவரை, இது ரூ.2,000 தள்ளுபடி விலையின் கீழ் வாங்க கிடைக்கும்; கூடவே 12 மாதங்கள் வரையிலான நோ-காஸ்ட் இஎம்ஐ விருப்பமும் அணுக கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








