Home
News

ஜன.1 முதல் ரூ.10000 க்கு மேல் பணம் அனுப்ப புது சிக்கல்.. எந்தெந்த பேங்க் அக்கவுண்ட்? யாருக்கு பொருந்தும்?

ஜனவரி 1, 2026 முதல் பல வகையான புதிய விதிகள் மற்றும் கட்டுப்பாடுகள் (சரியாக சொன்னால் 8 மாற்றங்கள்) அமலுக்கு வருகின்றன. அவைகளில் மிகவும் முக்கியமான ஒரு மாற்றமாக - பேங்க் அக்கவுண்ட் மற்றும் ரூ.10,000 க்கு மேலான பணப்பரிமாற்றம் தொடர்பான ஒரு மாற்றம் பார்க்கப்படுகிறது.

இது 2026 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதிக்கு பிறகு ரூ.10,000 க்கு மேல் பணம் அனுப்புவது உட்பட பல வேலைகளில் / செயல்முறைகளில் புதிய சிக்கல்களை கொண்டு வர உள்ளது. சரி - இந்த சிக்கல் யாருடைய வங்கி கணக்குகளுக்கு ஏற்படும்?

ஜன.1 முதல் ரூ.10000 க்கு மேல் பணம் அனுப்ப புது சிக்கல்?

யாரெல்லாம் தங்களுடைய ஆதார் அட்டையை தங்களுடைய நிரந்தர கணக்கு எண்ணுடன் (PAN Aadhaar Link) இணைக்கவில்லையோ அவர்களுக்கு எல்லாம் இந்த சிக்கல் ஏற்படும். இதை செய்வதற்கான கடைசி காலக்கெடு டிசம்பர் 31, 2025 ஆகும். இவ்விரு முக்கியமான ஆவணங்களையும் இணக்காதவர்கள் ஜனவரி 1 ஆம் தேதி முதல் அபராதம் உட்பட பல வகையான சிக்கல்களை சந்திக்க நேரிடும்!

ஆதார் மற்றும் பான் எண்ணை இணைக்கத் தவறினால் என்ன நடக்கும்? ஏதேனும் காரணத்திற்காக, பொருந்தக்கூடிய தாமத கட்டணத்தை (அபராதம்) செலுத்தத் தவறி டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் ஆதார்-பான் இணைப்பு செயல்முறையை முடிக்கவில்லை என்றால், உங்கள் பான் அட்டை செயலிழந்துவிடும்.

பான் கார்டு செயல் இறந்தவுடன் வருமான வரி அறிக்கைகளை தாக்கல் செய்தல், புதிய வங்கி அல்லது டீமேட் கணக்குகளை திறப்பது, அதிக அளவு கொள்முதல் செய்தல் அல்லது வரி பணத்தை திரும்பப் பெறுதல் உள்ளிட்ட பல்வேறு நிதி மற்றும் வரி தொடர்பான பரிவர்த்தனைகளுக்கு உங்கள் பான் அட்டையை பயன்படுத்த முடியாது.

மேலும் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை வழங்குதல், வங்கி அல்லது தபால் நிலையத்தில் ரொக்க டெபாசிட் செய்தல் அல்லது வங்கி வரைவோலை அல்லது கட்டண ஆர்டரை ரொக்கமாக வாங்குதல் போன்றவற்றிலும் சிக்கல்களை சந்திக்க நேரிடும். இவை அனைத்தும் ஒரு நாளைக்கு ரூ.50,000 க்கும் குறைவாக மதிப்பிடப்பட வேண்டும். கடைசியாக மற்றும் முக்கியமாக ரூ.10,000 க்கு மேல் உள்ள அனைத்து வங்கி பரிவர்த்தனைகளும் அனுமதிக்கப்படாது.

இதோடு - பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்தல், மானியங்களை பெறுதல் மற்றும் வங்கிக் கணக்கு தொடங்குதல் போன்ற அரசு சேவைகளை பெறுவதற்கும் பான் மற்றும் ஆதார் அட்டைகளை சமர்ப்பிக்க வேண்டும். எனவே, பான் மற்றும் ஆதார் அட்டைகள் இணைக்கப்படாதபோது அரசு சேவைகளை அணுகுவது கடினமாகிவிடும்.

பான்-ஆதார் இணைக்கப்படாதபோது, ​​புதிய பான் அட்டையை பெறுவதும் கடினமாக இருக்கலாம், குறிப்பாக பழையது சேதமடைந்தாலோ அல்லது தொலைந்து போனாலோ. புதிய பான் அட்டைக்கு விண்ணப்பிக்கும் போது ஆதார் அட்டை எண்ணை குறிப்பிடுவது கட்டாயமாக இருப்பதால் இது ஒரு பிரச்சினையாக மாற வாய்ப்புள்ளது.

எனவே ஆதார் உடன் பான் எண்ணை இன்னும் இணைக்காதவர்கள் வேகமாக செயல்படவும். இப்போது இவ்விரு ஆவணங்களையும் இணைப்பதற்கு முன், வரி செலுத்துவோர்கள் வருமான வரி மின்-தாக்கல் போர்ட்டலில் ரூ.1,000 அபராதம் செலுத்த வேண்டும் (பொருந்தக்கூடிய இடங்களில்). இணைப்பு கோரிக்கையை சமர்ப்பிக்கும் முன் இந்த கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

இருப்பினும், அக்டோபர் 1, 2024 அன்று அல்லது அதற்கு பிறகு தங்கள் ஆதார் பதிவு ஐடியை பயன்படுத்தி தங்கள் பான் அட்டைகளை பெற்றவர்களுக்கு ரூ.1,000 கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. குறிப்பிட்ட நபர்கள் தங்கள் பான் எண்ணை ஆதாருடன் 31 டிசம்பர் 2025 வரை இலவசமாக இணைக்க அனுமதிக்கப்படுவதாக தெரிகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
From Jan 1 Bank Transactions Exceeding Rs 10000 May Affect For People Who fail to link PAN Aadhaar
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X