ஆதார் முதல் பிஎஃப் வரை.. இந்த 2025 ஜூன் முதல் எல்லாமே மாறுது.. கட்டாயம் இதை தெரிஞ்சுக்கோங்க..
ஆதார் (Aadhaar), பிஎஃப் (PF) பணம், யுபிஐ (UPI) உள்ளிட்ட சில விஷயங்களில் இந்த ஜூன் மாதம் நிறைய விதிமுறை மாற்றங்கள் வர உள்ளன. அதுவும் ஆதார் கார்டை இலவசமாக அப்டேட் செய்ய இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ளன. சரி இந்த ஜூன் மாதம் அமலுக்கு வரும் முக்கிய விதிமுறைகளை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
ஆதார் அட்டை (Aadhaar Card): இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டையை இலவசமாகப் புதுப்பிப்பதற்கான (அப்டேட் செய்ய) கடைசி தேதி 2025 ஜூன் 14 என்று அறிவித்துள்ளது. எனவே ஆதார் அட்டையில் பெயர்,முகவரி அல்லது பிறந்த தேதி போன்ற மாற்றங்களைச் செய்ய விரும்பினால் அல்லது அப்டேட் செய்ய விரும்பினால் இப்போது எந்த கட்டணமும் இலவசமாகச் செய்யலாம்.

ஒருவேளை இந்த காலக்கெடு முடிவடைந்துவிட்டால் 50 முதல் 100 ரூபாய் வரை செலுத்த வேண்டும். குறிப்பாக ஜூன் 14-க்கு பின்பு கட்டணம் செலுத்தினால் மட்டுமே பெயர், முகவரி, பிறந்த தேதி போன்ற மாற்றங்களைச் செய்ய முடியும் என்று கூறப்படுகிறது.
தற்போது ஆதார் அட்டையை இலவசமாக அப்டேட் செய்ய விரும்பினால் UIDAI இன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான My Aadhaar போர்ட்டலைப் பயன்படுத்தவும். அதேபோல் உங்கள் ஸ்மார்ட்போனில் MyAadhaar செயலியைப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம் என்பதைக் கவனத்தில் கொள்க.
யுபிஐ (UPI): இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) இந்த UPI சிஸ்டமில் ஒரு மிகப் பெரிய மாற்றத்தைக் கொண்டுவர உள்ளது. அதுவும் இந்த மாற்றம் வரும் ஜூன் 30ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2025 ஜூன் 30-ம் தேதி முதல் கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற அனைத்து யுபிஐ ஆப்களும் இனி பரிவர்த்தனைகளின்போது பெறுநரின் அதிகாரப்பூர்வ பேங்க் அக்கவுன்ட் பெயரை மட்டுமே காண்பிக்கும்.
தற்போது யூசர்களின் ஸ்மார்ட்போனில் உள்ள யுபிஐ செயலிகளில் பணம் பெறுவோரின் பெயர் அல்லது புனைப்பெயர் போன்றவை தெரியும். ஆனால் இந்த புதிய விதிகளின் கீழ் இனி புனைப்பெயர் (nickname) தெரியாது. மொத்தமாக வரும் ஜூன் 30-க்குப் பிறகு, பணம் மாற்றப்படுவதற்கு முன்பு, பணம் பெறும் நபரின் அதிகாரப்பூர்வ வங்கி பதிவு செய்யப்பட்ட பெயரை UPI சிஸ்டம் தானாகவே காண்பிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மோசடி செய்பவர்கள் தங்கள் அடையாளத்தை மறைக்க புனைப் பெயர்களைப் பயன்படுத்துகின்றனர் என்றும், இந்த புதிய விதி மாற்றத்தால் UPI மூலம் நடைபெறும் மோசடி தடுக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. அதுவும் வரவிருக்கும் இந்த புதிய அப்டேட் சைபர் கிரிமினல்கள் செய்யும் மோசடிகளை தடுக்க மற்றும் பரிவர்த்தனையில் வெளிப்படைத் தன்மையை மேம்படுத்தவும் உதவும் நேரடி முயற்சியாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக இந்த யுபிஐ மாற்றம் பியர் டு பியர் (Peer to Peer - P2P) மற்றும் பியர் டு பியர் மெர்ச்சன்ட் (Peer to Peer Merchant - P2PM) பரிவர்த்தனைகள் ஆகிய இரண்டிற்குமே பொருந்தும்.
பிஎஃப் (PF) மாற்றம்: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) தொடர்ந்து பல்வேறு புதிய மாற்றங்களைச் செய்து வருகிறது. குறிப்பாக இந்த அமைப்பு கொண்டுவரும் ஒவ்வொரு திட்டங்களும் பயனுள்ள வகையில் இருக்கிறது. அதன்படி இந்த அமைப்பு EPFO 3.0 திட்டத்தை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது.
அதுவும் இந்த ஜூன் மாதத்தில் EPFO 3.0 திட்டம் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த திட்டம் அமலான பிறகு, PF பணத்தை எடுப்பது மிகவும் எளிதாகிவிடும். அதாவது PF கணக்குகளில் இருந்து ஏடிஎம் மற்றும் UPI மூலமாகவும் பணத்தை எடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








