Home
News

புது ரூல்ஸ்.. பிப்ரவரி 1 முதல் அமல்.. ஃபாஸ்டாக் முதல் எஸ்பிஐ IMPS கட்டண உயர்வு வரை.. இதோ முழு விவரம்..

வரும் பிப்ரவரி மாதம் பொதுமக்களின் குடும்ப பட்ஜெட்டை பாதிக்கும் வகையில் நிறைய மாற்றங்கள் வருகின்றன. அதாவது ஃபாஸ்டாக், வங்கிச் சேவைகள் போன்றவற்றில் புதிய விதிகள் (New Rules) அமலுக்கு வருகின்றன. இது குறித்த விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

ஃபாஸ்டாக் புதிய மாற்றம்
ஃபாஸ்டாக் (FASTag) முறையை மேலும் எளிதாக்க இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. அதாவது வரும் பிப்ரவரி 1-ம் தேதி முதல் கார்கள், ஜீப்புகள் மற்றும் வேன்களுக்கான புதிய ஃபாஸ்டாக்குகளுக்கு ' Know Your Vehicle' (KYV) சரிபார்ப்பு தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புது ரூல்ஸ்.. பிப்ரவரி 1 முதல் அமல்.. இதோ முழு விவரம்..

குறிப்பாக இதன் மூலம் ஃபாஸ்டாக் பெறுவதிலும் பயன்படுத்துவதிலும் எந்தவித தாமதங்கள் இருக்காது. ஆவணங்களை மீண்டும் மீண்டும் சமர்ப்பிக்கும் சிரமங்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் புகார்கள் குறைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய பட்ஜெட் தாக்கல்
வரும் பிப்ரவரி 1-ம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். குறிப்பாக இந்த பட்ஜெட்டில் நடுத்தர நடுத்தர வர்க்கத்தினரும், வருமான வரி செலுத்துவோரும் பல எதிர்பார்ப்புகளை வைத்துள்ளனர். மேலும் இந்த பட்ஜெட்டில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு, பெண்களுக்கு அதிகாரமளித்தல், விவசாயிகள் நலன் போன்ற முக்கியமான அறிவிப்புகள் இருக்கும் என்று கூறப்படுகிறது.

எஸ்பிஐ வங்கி ஆன்லைன் ஐஎம்பிஎஸ் கட்டண உயர்வு
எஸ்பிஐ வங்கி ஆன்லைன் ஐஎம்பிஎஸ் (IMPS) கட்டணங்களில் சில மாற்றங்களை அறிவித்துள்ளது. குறிப்பாக இந்த புதிய நடைமுறை வரும் பிப்ரவரி 15-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை இன்டர்நெட் பேங்கிங் மற்றும் மொபைல் ஆப் மூலம் செய்யப்படும் IMPS பரிமாற்றங்களுக்குக் கட்டணம் ஏதும் வசூலிக்கப்படாமல் இருந்தது. ஆனால் இனிமேல் பெரிய தொகை அனுப்பும்போது ஒரு சிறிய தொகையைக் கட்டணமாகச் செலுத்த வேண்டியிருக்கும்.

எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு இந்த மாற்றத்தால் பெரிய பாதிப்பு எதுவும் இருக்காது. காரணம் என்னவென்றால் ரூ.25,000 வரை செய்யப்படும் பணப்பரிமாற்றங்களுக்கு எப்போதும் போல எந்தக் கட்டணமும் கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே சிறிய அளவிலான தொகையை அனுப்புபவர்கள் எப்போதும் போல தாராளமாகப் பணத்தை அனுப்பலாம். சரி இப்போது ஆன்லைனில் ரூ.25000-க்கு மேல் பணம் அனுப்பும் போதும் எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படும் என்பதை பார்க்கலாம்.

புதிய கட்டண விவரங்கள்
ரூ.25000 முதல் ரூ.1 லட்சம் வரை: ரூ.2 + ஜிஎஸ்டி செலவாகும்.
ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை: ரூ.6 + ஜிஎஸ்டி செலவாகும்.
ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை: ரூ.10 + ஜிஎஸ்டி செலவாகும்.

புது ரூல்ஸ்.. பிப்ரவரி 1 முதல் அமல்.. இதோ முழு விவரம்..

சிலிண்டர் விலை
ஒவ்வொரு மாதமும் சமையல் எரிவாயு (LPG), வணிக எரிவாயு மற்றும் விமான எரிபொருள் விலைகளில் மாற்றம் ஏற்படுவது வழக்கமான விஷயம் தான். கடந்த ஜனவரி 1-ம் தேதி வீட்டு உபயோகத்திற்கான 14.2 கிலோ சிலிண்டரின் விலை மாறாமல் இருந்தது, ஆனால், 19 கிலோ வணிக சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டது. ஆகவே இந்த முறையும் அதாவது வரும் பிப்ரவரி 1-ம் தேதி சிலிண்டர் விலையில் மாற்றம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
From FASTag to SBI IMPS fee hike: New rules to come into effect from February 1, 2026
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X