சிஇஓ டூ தலைவர்., விண்டோஸ் 10 டூ விண்டோஸ் 11- மைக்ரோசாஃப்ட் சத்யா நாதெள்ளா முன்னேற்றம்!

|

2020 ஆம் ஆண்டில் மைக்ரோசாஃப்ட் குழுவில் இருந்து பில் கேட்ஸ் விலகியதன் காரணமாக தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து நாதெள்ளா தனது டுவட்டர் பயோவில் மைக்ரோசாஃப்டின் சிஇஓ மற்றும் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மைக்ரோசாஃப்ட் அறிக்கை

மைக்ரோசாஃப்ட் அறிக்கை

தற்போதைய பொறுப்பில் நாதெள்ளா நிறுவனத்தின் மூலோபாய வாய்ப்புகளை உயர்த்துவதற்கும், குழு மதிப்பாய்வுக்கான முக்கிய சிக்கல் மற்றும் தணிப்பு அணுகுமுறைகளை அடையாளம் கண்டு வணிகத்தை ஆழமான புரிதலோடு மேம்படுத்துவார் என மைக்ரோசாஃப்ட் அறிக்கை தெரிவிக்கிறது. இது விண்டோஸ் 11 ஆக இருக்கலாம் என கூறப்படுகிறது.

விண்டோஸ் அப்டேட்

விண்டோஸ் அப்டேட்

2015-ல் விண்டோஸ் 10 வெளியிடப்பட்டது. இது விண்டோஸ் 8.1, விண்டோஸ் 8, விண்டோஸ் 7 உள்ளிட்ட முந்தைய பதிப்புகள் போல் இல்லாமல் மாதாந்திர புதுப்பிப்புகளுடன் நிலையானதாக இருந்தது. ஆனால் விண்டோஸ் 10 புதிய தயாரிப்பு வாங்க வேண்டியிருந்தது. விண்டோஸ் 11 அடுத்து வரலாம் என தகவல்கள் தெரிவிக்கிறது.

முக்கிய சந்தையாக விளங்கும் இந்தியா

முக்கிய சந்தையாக விளங்கும் இந்தியா

மைக்ரோசாப்ட் மற்றும் பிற தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு இந்தியா ஒரு முக்கிய சந்தையாக திகழ்கிறது என்பது ஆச்சரியம் இல்லை. சத்யா நாதெள்ள முதல்முறையாக பிப்ரவரி 2014 இல் மைக்ரோசாப்ட்டின் தலைமை நிர்வாக அதிகாரியாக பதிவியேற்றது முதல் ​​அந்நிறுவனம் தள்ளாட தொடங்கிவிட்டது. அதன் ஸ்மார்ட்போன் வணிகம் கடுமையான தோல்வியுற்றது, விண்டோஸ் 8 கடுமையாக விமர்சிக்கப்பட்டது மற்றும் நுகர்வோர் அந்நிறுவனத்தின் மீதான நம்பிக்கையை இழக்க தொடங்கி இருந்தனர்.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் மிகுந்த திறன்

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் மிகுந்த திறன்

அந்த சமயத்தில் தான் தனது உண்மையான பணியை ஆற்றச் சென்றார் சத்ய நாதெள்ளா. வெறும் ஐந்து ஆண்டுகளில் மைக்ரோசாப்ட்-ஐ மீண்டெழச்செய்த நாதெள்ளா, அதை மீண்டும் உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றாக மாற்றினார். 1967 ஆம் ஆண்டில் ஹைதராபாத்தில் பிறந்த இவர், குழந்தைபருவத்தில் தொழில்முறை கிரிக்கெட் வீரராக விரும்பினார். பின்னர் தான் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் மிகுந்த திறனை கொண்டிருப்பதை உணர்ந்தார்.

இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி

இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி

1988 ஆம் ஆண்டில் மணிப்பால் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி-ல் எலக்ட்ரானிக் இன்ஜினியரிங் பிரிவில் தனது இளங்கலை பட்டத்தை பெற்று, 1990 ஆம் ஆண்டு தனது முதல் உண்மையான கணினி அறிவியல் படிப்பில் பட்டம் பெற அமெரிக்காவிற்கு பயணம் செய்தார்.
சன் மைக்ரோசிஸ்டம்ஸ் நிறுவனத்தில் பணியாற்றிய நதெள்ளா, 1992 ஆம் ஆண்டில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் சேர்ந்தார். அப்போது பில்கேட்ஸ் அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த நிலையில், அது உலகின் முன்னணி நிறுவனமாக இருந்தது. அவர் பணியாற்றிய முதல் ப்ராஜெக்ட்களில் ஒன்று தோல்வியடைந்த விண்டோஸ் என்டி தளம் ஆகும்.

வியக்கத்தக்க வளர்ச்சி

வியக்கத்தக்க வளர்ச்சி

2014 ல் நாதெள்ளா பொறுப்பேற்றபோது அதற்குமுன்பு அப்பதவியில் இருந்த ஸ்டீவ் பால்மர் செய்தவற்றில் மாற்றங்கள் செய்வதில் விரைவாக இருந்தார். மைக்ரோசாப்ட் ஏசர் கிளவுட் ப்ளாட்பார்ம் துவங்கப்பட்ட போது அது ஒரு சூதாட்டம் போல இருந்தது. நாதெள்ளா ஒரு படி மேலே சென்றார். லினக்ஸ் ஏசர் தளத்தில் செயல்படுவது புற்றுநோய் போன்றது என்ற திறந்த மூல பால்மரின் கருத்திற்கு மாற்றாக ஓபன் சோர ஸ் போட்டியாளரான லினக்ஸை அனுமதிப்பது என்ன சர்ச்சைக்குரிய முடிவை வெளியிட்டார். அப்போதிருந்து அந்த தளம் வியக்கத்தக்க வளர்ச்சியைக் காட்டியுள்ளது என்றாலும், அது இன்னமும் அமேசானின் AWS ஐ விட பின்தங்கியே உள்ளது.

பயனர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

பயனர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

நாதெள்ளாவின் தலைமையின் கீழ், மைக்ரோசாப்ட் அதன் பிரபலமான மைக்ரோசாஃப்ட் ஆஃபீஸ் மென்பொருளை மற்ற தளங்களில் பயன்படுத்த அனுமதித்து. குறிப்பாக ஐஓஎஸ் மற்றும் ஆண்ராய்டு போன்கற மொபைல் தளங்களில். இது அவர்களுக்கு முன்னெப்போதும் இல்லாதவகையில் மில்லியன் கணக்கான புதிய பயனர்கள் பெற்றுத்தந்தது.

Best Mobiles in India

English summary
From CEO to Chairman.,From Windows 10 to Windows 11: Microsoft Satya Nadella's Growth!

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X