Home
News

புது ரூல்ஸ்.. ஏப்ரல் 1 முதல் அமல்.. UPI முதல் கிரெடிட் கார்டு வரை.. ரெடியா இருங்க மக்களே!

ஏப்ரல் 1 (நாளை) முதல் வங்கிக் கணக்கின் மினிமம் பேலன்ஸ், யூபிஐ (UPI), கிரெடிட் கார்டு என பல முக்கிய நிதி சார்ந்த விதிமுறைகள் நடைமுறைக்கு வர உள்ளன. குறிப்பாக இந்தியா முழுவதும் புதிய விதிமுறைகள் செயல்படுத்தப்படுவதால் வங்கி கணக்கு வைத்திருப்பவர்களுக்குப் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும். சரி இப்போது இது குறித்த விஷயங்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

மினிமம் பேலன்ஸ் (Minimum Balance)
வரும் ஏப்ரல் 1 முதல் எஸ்பிஐ, பஞ்சாப் நேஷனல் வங்கி, கனரா வங்கி மற்றும் பல வங்கிகள் புதிய மினிமம் பேலன்ஸ் தொகையில் மாற்றம் செய்துள்ளன. அதன்படி குறைந்தபட்ச இருப்பை (மினிமம் பேலன்ஸ்) பராமரிக்காத வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். ஆனால் இந்த குறைந்தபட்ச இருப்புத் தேவையானது நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களைப் பொறுத்து மாறுபடும் என்று கூறப்படுகிறது.

புது ரூல்ஸ்.. ஏப்ரல் 1 முதல் அமல்.. UPI முதல் கிரெடிட் கார்டு வரை..

AI சாட்பாட்கள்
டிஜிட்டல் தளங்களில் வங்கி சேவையை மேம்படுத்தும் வகையில் ஏஐ பயன்படுத்தப்படும். குறிப்பாக வாடிக்கையாளர்களுக்கு உதவ வங்கிகள் மேம்பட்ட ஆன்லைன் அம்சங்கள் மற்றும் ஏஐ சாட்பாட்களை அறிமுகம் செய்கின்றன. பின்பு டிஜிட்டல் பரிவர்த்தனைகளைப் பாதுகாக்க two-factor authentication மற்றும் பயோமெட்ரிக் சரிபார்ப்பு போன்ற மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் மேலும் வலுப்படுத்தப்படும்.

யுபிஐ (UPI) மாற்றம்
பேடிஎம் (paytm), போன் பே (PhonePe), கூகுள் பே (Google Pay) போன்ற யுபிஐ செயலிகளைப் பயன்படுத்தும் மக்களுக்கு வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் புதிய விதிமுறைகள் வருகின்றன. அதன்படி யுபிஐ செயலிகளுடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பர் குறிப்பிட்ட காலத்திற்குச் செயல்பாட்டில் இல்லையென்றால் அவை வங்கி கணக்கில் இருந்து அகற்றப்படும் என்று இந்திய தேசிய கொடுப்பனவுக் கழகம் (NPCI) தெரிவித்துள்ளது.

அதன்படி உங்களது வங்கி கணக்கில் செயலற்ற மொபைல் இணைக்கப்பட்டிருந்தால் அது நீக்கப்படும். பின்பு கூகுள் பே, போன் பே போன்ற யுபிஐ மூலம் நீங்கள் பணம் அனுப்ப முயற்சிக்கும் போது இது உங்களுக்குப் பிரச்சனையை ஏற்படுத்தும். தற்போது நாட்டில் சைபர் குற்றங்கள் அதிகரித்து உள்ளதால் NPCI இந்த முடிவை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக செயலற்ற மொபைல் நம்பர் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டிருந்தால் கண்டிப்பாக அவை யுபிஐ அமைப்புகளுக்குள் ஏதேனும் தொழில்நுட்ப கோளாறுகளை ஏற்படுத்தக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தான் வங்கி கணக்கில் செயலற்ற மொபைல் நம்பர் இணைக்கப்பட்டிருந்தால் அது நீக்கப்படும் என்று கூறப்படுகிறது. எனவே நீங்கள் பயன்படுத்தும் மொபைல் நம்பர் உங்கள் வங்கி கணக்குடன் இணைந்திருக்கிறதா என்பதை ஒன்றுக்கு இருமுறை சரிபார்த்துக் கொள்ளுங்கள்.

அதேபோல் உங்களது வங்கி கணக்கில் இணைக்கப்பட்ட மொபைல் நம்பர் செயலில் இல்லை என்றாலோ அல்லது சிறிது காலமாக ரீசார்ஜ் செய்யவில்லை என்றாலோ அந்த நம்பர் உங்களுடைய பெயரில் இருக்கிறதா என்பதை முதலில் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இதற்கு நீங்கள் ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா அல்லது எந்த ஆபரேட்டரை பயன்படுத்தியிருக்கிறீர்களோ அவர்களுடைய கஸ்டமர் கேருக்கு தொடர்பு கொள்ளலாம்.

கிரெடிட் கார்டு பலன்கள்
ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க், எஸ்பிஐ போன்ற முக்கிய வங்கிகள், தங்களின் கோ-பிராண்டட் விஸ்டாரா கிரெடிட் கார்டுகளின் பலன்களை மாற்றுகின்றன. அதன்படி டிக்கெட் வவுச்சர்கள், ரினீவல் பலன்கள் மற்றும் மைல்ஸ்டோன் ரிவார்ட் போன்ற பலன்கள் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆக்சிஸ் வங்கியும் ஏப்ரல் 18 முதல் இதேபோன்ற மாற்றங்களைச் செயல்படுத்தும், இதனால் அந்த வங்கியின் விஸ்டாரா கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களைப் பாதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
From bank minimum balance to UPI, new rules to come into effect from April 1: check details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X