வரும் ஜனவரி 15 முதல் 11 இலக்க மொபைல் நம்பர்.! காரணம் என்ன?

|

வெளிவந்த தகவலின் அடிப்படையில் வரும் 2021 ஜனவரி 15-இலிருந்து மொபைல் எண்களுக்கு அழைப்பதற்கு முன் லேண்ட்லைன் பயனர்கள் கண்டிப்பாக பூஜ்ஜியத்தை சேர்க்க வேண்டியது அவசியம் என்கிற புதிய விதிமுறை வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேர்க்க வேண்டும் என தகவல் தொடர்பு அமைச்சகம் அதன் அதிகாரப்பூர்வ வெளியீட்டில் தெரிவித்துள்ள

அதாவது 2021-ம் ஆண்டு ஜனவரி 15-ம் தேதி முதல் மொபைல் எண்களுக்கு அழைப்பு விடுப்பதற்கு முன்பு லேண்ட்லைன் பயனர்கள் பூஜ்ஜியத்தை சேர்க்க வேண்டும் என தகவல் தொடர்பு அமைச்சகம் அதன் அதிகாரப்பூர்வ வெளியீட்டில் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சொல்ல வேண்டும் என்றால்,

குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், நீங்கள் 95##99##85 என்கிற மொபைல் நம்பரை லேண்ட்லைன் வழியாக அழைக்க வேண்டும் என்றால், வருகிற ஜனவரி 15-ம் தேதி முதல் குறிப்பிட்ட நம்பருக்கு முன் 0-ஐ சேர்த்து 095##99##85 என்று அழைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

BSNL ரூ .247 திட்டம்.. தினமும் 3ஜிபி.. வேலிடிட்டி முன்பை விட 10 நாட்கள் அதிகம்..

துறை (டிஓடி

இதற்குமுன்பு தொலைத்தொடர்பு துறை (டிஓடி) தனது இணையதளத்தில் தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய், அனைத்து லேண்ட்லைன் எண்கள் வழியாகவும் மொபைல் எண்களை டயல் செய்யும் போது பூஜ்ஜியத்தை சேர்ப்பதற்கான முன்மொழிவை ஏற்றுக்கொண்டதாக அறிக்கை வெளியிட்டு இருந்தது. ஆனால் தற்சமயம் அது எப்போது நடைமுறைக்கு வரும் என்கிற தேதியும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

ம் தேதி முதல் 0 சேர்த்து

குறிப்பாக 2021 ஜனவரி 15-ம் தேதி முதல் 0 சேர்த்து டயல் செய்யப்படும் என்று தகவல் தொடர்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த புதிய திருத்தத்தின் கீழ், fixed to fixed, mobile to fixed மற்றும் mobile to mobile அழைப்புகளில் எந்த மாற்றமும் இருக்காது என்று கூறப்படுகிறது.

ட்லைன் பயன

பயனர்கள் 0 என்கிற Prefix-ஐ பயன்படுத்தாமல் எதாவது ஒரு மொபைல் எண்ணிற்கு அழைத்தால், அவர் டயல் செய்யும் போதெல்லாம் பொருத்தமான அறிவிப்பு இயக்கப்படும். அதாவது பூஜ்ஜியத்துடன் டயல் செய்ய வேண்டியதன் அவசியம் குறித்தும் பயனர்களுக்கு தெரிவிக்க பொருத்தமான அறிவிப்பு இயக்கப்படும் என்று DoT குறிப்பிட்டுள்ளது. இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், லேண்ட்லைன் பயனர்கள் 0 என்ற என்ற Prefix இல்லாமல் மொபைல் எண்ணை டயல் செய்யும் போதெல்லாம் இந்த அறிவிப்பு இயக்கப்படும் என்று கூறப்படுகிறது.

 பயனர்களுக்கும் 0 டயலிங்

மேலும் அனைத்து பயனர்களுக்கும் 0 டயலிங் வசதி வழங்கப்படும் என்றும், இதன் மூலம் 2539 மில்லியன் நம்பரிங் தொடர்களை உருவாக்க எதிர்பார்ப்பதாக அமைச்சகம் குறிப்பிட்டது. இந்த வசதி எதிர்கால பயன்பாட்டிற்கு போதுமான எண்ணிக்கையிலான வளங்களை விடுவிக்கும் என்றும் அது விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

அறிமுகப்படுத்துவது தொலை

இருந்தபோதிலும், ஒரு குறிப்பிட்ட வகை அழைப்பிற்கான டயலிங் Prefix-ஐ அறிமுகப்படுத்துவது தொலைபேசி எண்ணில் இலக்கங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு ஒத்ததல்ல என்று டிராய் அமைப்பு குறிப்பிட்டுள்ளது. அதேசமயம் போதுமான எண்ணிக்கையிலான வளங்களை விடுவிப்பது எதிர்காலத்தில் அதிக எண்ணிக்கையிலான இணைப்புகளை சேர்க்கும் மற்றும் மொபைல் பயனர்களுக்கு பெருமளவில் பயன்கொடுக்கும் என்று தகவல் தொடர்பு அமைச்சகம் கூறியுள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
From 2021 January 15, landline users will be required to add zero before calling mobile numbers: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X