"ரிக்‌ஷா இழுக்க தான் சரினு சொந்தக்காரங்க சொன்னாங்க"- ஃப்ரெஷ்வொர்க்ஸ் சிஇஓ தமிழர் கிரீஷ்: இப்போ வேற லெவல்!

|

சோர்வடையும் நேரத்தில் பலரின் வாழ்க்கை பயணமும், அவர்கள் பிரச்சனைகளை எதிர்கொண்ட விதத்தையும் அறிந்து கொள்ளும் போது நமக்கு உந்துதலாக இருக்கும். அதன்படி பலரின் வாழ்க்கை பயணங்களின் வெற்றியை நாம் அறிந்து கொள்வது நமக்கு பெரிய எடுத்துக் காட்டாக இருக்கும். அதன்படி தற்போது ப்ரெஷ்வொர்க்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியின் முன்னேற்றமும் அவரது பேச்சும் இருக்கிறது. பலரும் இதை சமூகவலைதளங்களில் பகிர்ந்து பாராட்டி வருகின்றனர்.

ஃப்ரெஷ்வொர்க்ஸ்.இங்க் என்ற நிறுவனம்

ஃப்ரெஷ்வொர்க்ஸ்.இங்க் என்ற நிறுவனம்

ஃப்ரெஷ்வொர்க்ஸ்.இங்க் என்ற நிறுவனத்தை நிறுவியவர் கிரீஷ் மாத்ரூபூதம், 46 வயதான இவர் திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர். அதீத வளர்ச்சியில் முன்னோக்கி சென்று கொண்டிருக்கிறது இந்நிறுவனம். பங்குச் சந்தைகளில் உலகளவில் முக்கியமாக இருப்பது நியூயார்க் பங்கு சந்தை (நாஸ்டாக் குறியீடூ), இதில் நிறுவனம் பட்டியலிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்த நிறுவனத்தின் முக்கிய முதலீட்டாளர்களில் ஒருவரான அக்சல் நிறுவனம், அமெரிக்க சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள முதல் இந்திய மென்பொருள் சேவை நிறுவனம் இதுதான் என தெரிவித்துள்ளது.

ஃப்ரெஷ்வொர்க்ஸ் நிறுவனர் கிரீஷ் மாத்ருபூதம்

ஃப்ரெஷ்வொர்க்ஸ் நிறுவனர் கிரீஷ் மாத்ருபூதம்

பெரும்புகழ் பெற்று வரும் நிறுவனமான ஃப்ரெஷ்வொர்க்ஸ்-ஐ நிறுவியவர் கிரீஷ் மாத்ருபூதம், தனது வெற்றிக்கு முன்பு, தான் ரிக்‌ஷாக்காரராக இருப்பதற்கு தான் சரியானவர் என தனது உறவினர்கள் கூறியதாக குறிப்பிட்டுள்ளார். தற்போது அவர் நிறுவிய ஃப்ரெஷ்வொர்க்ஸ், இந்தியாவின் மிகப்பெரிய மென்பொருள் சேவைகளில் (SaaS) ஒன்றாக இருக்கிறது. நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கிரீஷ் மாத்ருபூதத்தின் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பின் மூலமாக தற்போது பல பில்லியன் டாலர் மதிப்பீட்டில் வளர்ந்துள்ளது.

வளர்ச்சிக்கு காரணமாக இருந்த கிரீஷ்

வளர்ச்சிக்கு காரணமாக இருந்த கிரீஷ்

ஃப்ரெஷ்வொர்க்ஸ்-ன் வளர்ச்சிக்கு காரணமாக இருந்த கிரீஷ்-ஐ, அவரை இந்த வாழ்க்கைக்கு முன்பு அவரது உறவினர்களால் கேலி உட்பட ஏணைய பிரச்சனைகளை எதிர்கொண்டதாக குறிப்பிட்டார். மேலும் தன்னை ரிக்‌ஷாக்காரனாக இருக்க தான் சரியானவர் எனவும் குறிப்பிட்டதாக தெரிவித்தார். படிப்பில் மந்தநிலையில் இருந்தபோது மிகவும் ஏணைய ஏளனச் சொல்லுக்கு உள்ளானதாக குறிப்பிட்டார்.

எதிர்வினைகளை உந்துதலாக மாற்றுவது எப்படி

தொடர்ந்து பேசிய கிரீஷ் மாத்ரூபூத், கடினமாக வேலை செய்வதற்கும் சிறப்பாக செயல்படுவதற்கும் உந்துதலாக மாற்றுவது எப்படி, விமர்சனத்தை எதிர்கொள்வது எப்படி என்பது குறித்து தெரிவித்தார். கிரீஷ் மாத்ருபூதம் தனது 12 ஆம் வகுப்பு தேர்வுகள் மற்றும் பொறியியல் நுழைவுகளில் சிறப்பாக செயல்பட முடியாத போது அவரது உறவினர்களிடம் இருந்து பல ஏளன கருத்துகளை பெற்றதாக தெரிவித்தார். கிரீஷ் மேலும், கல்வி ரீதியில் ஏற்பட்ட மந்தநிலை காரணமாக தன்னை ரிக்‌ஷாக்காரராக இருக்கவே சரியானவர் என உறவினர்கள் குறிப்பிட்டதாகவும் கூறினார்.

விமர்சனங்களை எப்படி எதிர்கொள்வது எப்படி?

விமர்சனங்களை எப்படி எதிர்கொள்வது எப்படி?

இந்த விமர்சனங்களை எப்படி எதிர்கொள்வது எப்படி சந்திப்பது என்பது குறித்தும் கிரீஷ் விளக்கமளித்தார். இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால் இதுபோன்ற விளைவுகளை சந்திக்கும் நேரத்தில் நீங்கள் சண்டையிடவோ, அதற்கு எதிர்வினையாற்றவோ, பதிலளிக்கவோக்கூட தேவையில்லை என குறிப்பிட்டார். இதை ஆக்கப்பூர்வமாக மாற்றி செயல்பட வேண்டும் என மாத்ருபூதம் குறிப்பிட்டார்.

ஒட்டுமொத்த மதிப்பீடு 13 பில்லியன் டாலர்

ஃப்ரெஷ்வொர்க்ஸ் ஆரம்பத்தில் 10 பில்லியனுக்கு அதிக மதிப்புடையதாக இருந்தது எனவும் தற்போது அதன் ஒட்டுமொத்த மதிப்பீடு 13 பில்லியன் டாலராக இருப்பதாகவும் கூறினார். இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்ரால் ஐபிஓவுக்கு பிறகு அமெரிக்க பங்குச் சந்தையான நாஸ்டாக்கில் பட்டியலிடப்பட்ட முதல் இந்திய நிறுவனமாக மாறி இருக்கிறது.

பலரையும் ஊக்கமளிக்கும் வகையில் பேச்சு

பலரையும் ஊக்கமளிக்கும் வகையில் பேச்சு

கிரீஷ் மாத்ருபூதத்தின் கதை பலருக்கு ஊக்கமளிக்கும் வகையில் இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. இவரது ஆரம்பம் தாழ்மையான இடத்தில் இருந்து ஆரம்பத்தாலும் தற்போது இவர் வளர்ச்சி மிகப்பெரிய அளவில் இருக்கிறது. கிரீஷ் தனது படைப்பாற்றல் மற்றும் கடின உழைப்புக்கான உந்துதல்கள் மூலம் நிறைய சாதித்திருக்கிறார். இவரது பேச்சும், செயல்பாட்டு திறனும் பலரையும் கவர்ந்து இருக்கிறது. கிரீஷ் தனது பிரச்சனைகளை வித்தியாசமாக அணுகி, எளிமையாக தீர்வுகளை கையாண்டுள்ளார்.

Best Mobiles in India

English summary
FreshWorks Inc Becomes First Indian Origin Company to list on US Exchange: CEO Girish Inspirational Speech

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X