செல்போன் நம்பரையே மாத்திட்டாரு: பிரான்ஸ் அதிபர் செல்போன் ஒட்டுக்கேட்பு விவகாரம்!
பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் தனது மொபைல் எண்ணையும், மொபைல் போனையும் மாற்றி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிபருக்கு முன்னதாகவே பல மொபைல் எண்கள் இருக்கும் காரணத்தால் இது ஒரு பாதுகாப்பு நடவடிக்கையாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பிரான்ஸ் நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரானின் மொபைல் எண் மாற்றப்பட்டது பாதுகாப்பு நடவடிக்கையே எனவும் இதன்மூலம் அவரது மொபைல் ஒட்டுக்கேட்கப்பட்டார் என்பதை உறுதி செய்யவில்லை எனவும் அந்நாட்டு அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

உலக நாடுகளில் பல்வேறு அரசியல் தலைவர்கள் இதில் சிக்கி உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், அதிகாரப்பூர்வமாக எடுக்கப்பட்ட முதல் நடவடிக்கையாக இது இருக்கிறது. பெகாசஸ் உளவு சாஃப்ட்வேர் என்பது சமீபத்தில் பேசுபொருளாக மாறி வருகிறது. தற்போது பெகாசஸ் சாஃப்ட்வேர் மூலம் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானின் செல்போன் எண்ணும் வேவு பார்க்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த எண்களை நாங்கள் கண்டறிந்தோம் ஆனால் இம்மானுவேல் மேக்ரானின் தொலைபேசியின் தொழில்நுட்ப பகுப்பாய்வை எங்களால் மேற்கொள்ள முடியவில்லை என லாரன்ட் ரிச்சர்ட் தெரிவித்தார்.
பெகாசஸ் சாஃப்ட்வேர் மூலம் வேவுபார்க்கப்பட்டதாக உலகம் முழுவதும் சர்ச்சைகள் எழுந்து வருகிறது. இந்த விவகாரத்தில் தினந்தோறும் புதுப்புது தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்து வருகிறது. அதன்படி தற்போது பிரான்ஸ் நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரானின் செல்போன் எண்ணும் உளவு பார்க்கப்பட்டதாக புகார்கள் எழுந்துள்ளது.

பிரான்ஸ் நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரானின் செல்போன் எண் உளவு பார்க்கப்பட்டதாக எழுந்த புகாரையடுத்து, இதுகுறித்து விசாரணை நடத்த அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டு முதல் இம்மானுவேல் மேக்ரான் பயன்படுத்திய செல்போன் எண்களில் ஒன்றை ஒட்டுக்கேட்க மொராக்கோ நாட்டு உளவுத்துறையால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரான்ஸ் நாட்டின் லீ மான்டி நாளிதழ் தெரிவித்துள்ளது.
மொராக்கோ நாட்டு சார்பில் இதுகுறித்து வெளியான அறிக்கை குறித்து பார்க்கையில், பெகாசஸ் சாஃப்ட்வேர் மூலம் பிரான்ஸ் நாட்டு அதிபர் செல்போன் எண் உளவு பார்க்கப்பட்டதாக எழுந்த புகார் ஆதாரமற்றது எனவும் முறையற்ற தவறான குற்றச்சாட்டு எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இது உண்மை என நிறுவப்பட்டால் விளைவு மிக தீவிரமாக இருக்கும் என மேக்ரானின் அலுவலக செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். பாரிஸை தளமாகக் கொண்ட ஃபோர்பிடன் ஸ்டோரீஸ் மற்றும் அம்னஸ்டி இன்டர்நேஷனல் ஆகியவை ஆரம்பத்தில் கசிந்த எண்களை அணுகியது. பின் தி வாஷிங்டன் போஸ்ட், தி கார்டியன் மற்றும் லு மொன்ட் உள்ளிட்ட செய்தி நிறுவனங்கள் பகிர்ந்து கொண்டன.
அதேபோல் ஈராக் அதிபர், தென் ஆப்பிரிக்க அதிபர், பாகிஸ்தான் பிரதமர், எகிப்து பிரதமர், மொராக்கோ அதிபர் ஆகியோரின் செல்போன் எண்களும் வேவு பார்க்கப்பட்டதாக அமெரிக்கா பிரபல நாளிதழான வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. பெகாசஸ் மென்பொருள ஹேக்கிங் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது.
இஸ்ரேலை தளமாகக் கொண்ட என்எஸ்ஓ நிறுவனத்தின் PEGASUS என்ற சாஃப்ட்வேரை பயன்படுத்தி ஏணைய நாடுகளை சேர்ந்த முக்கிய புள்ளிகளின் செல்போன் புகைப்படங்கள், உரையாடல்கள், பகிர்வு என அனைத்து நடவடிக்கைகளும் கண்காணிக்கப்படுவதாக புகார்கள் எழுந்தது. இதில் பத்திரிக்கையாளர்கள், அரசியல் தலைவர்கள் என பலர் இருக்கலாம் என கருதப்பட்டது.


Click it and Unblock the Notifications