மனிதனின் கண்களுக்குள் நெளிந்த மைக்ரோ சைஸ் புழுக்கள்.. அலட்சியத்தால் ஏற்பட்ட விபரீதம்.. இறுதியில் என்னானது?

|

மனிதன் அவனுடைய உடலை ஆரோக்கியமாகப் பார்த்துக்கொள்வதற்கும், அவனின் உடலைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்வதற்கும் பல முக்கிய நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டியதுள்ளது. குறிப்பாக சில விஷயங்களை நாம் செய்தால் அது நமக்குத் தான் ஆபத்து என்பதை மனிதர்கள் உணர்ந்திருக்கிறார்கள். உதாரணத்திற்கு, தீ சுடும் என்பது தெரிந்தும் யாராவது தீயில் கைவைப்பார்களா? இல்லை தானே. அப்படி தான், மனிதன் செய்யக் கூடிய பல விஷயங்கள், மனிதன் செய்யக் கூடாத பல விஷயங்கள் மற்றும் பாதுகாப்புடன் செய்ய வேண்டிய சில விஷயங்கள் என்று பல விஷயங்கள் இருக்கிறது.

அலட்சியத்தால் ஏற்படும் விளைவுகள்

அலட்சியத்தால் ஏற்படும் விளைவுகள்

என்னதான் நாம் பலதரப்பட்ட வேலைகளைச் செய்து வந்தாலும், சில வேலைகளைச் செய்யும் போது பாதுகாப்புடன் செய்ய வேண்டியதுள்ளது. இதை நாம் சரியாகக் கடைப்பிடிக்காத போது, ஏதேனும் ஒரு சிக்கலில் சிக்கிக்கொள்கிறோம். இயல்பாகவே மனிதனுக்கு அலட்சியமும், கவனக்குறைவு அதிகமாகவே இருக்கிறது. ஒரு வேலையை நாம் தொடர்ந்து செய்து வரும் போது, அதில் அலட்சியம் ஏற்படுவது மனித இயல்பு தான் என்றாலும் கூட, அதற்காக சில நேரங்களில் நாம் சந்திக்கும் விளைவுகள் பெருமளவில் இருக்கிறது.

நீண்ட நேரம் நீடித்த கண் எரிச்சல் கண்களுக்குள் 'என்ன' புகுந்தது?

நீண்ட நேரம் நீடித்த கண் எரிச்சல் கண்களுக்குள் 'என்ன' புகுந்தது?

அப்படி ஒரு சிறிய அலட்சியத்தால், பிரான்சில் உள்ள ஒரு நபரின் கண்களுக்குள் 'என்ன புகுந்தது' என்பதைப் பற்றித் தான் பார்க்கப் போகிறோம். கண்ணின் அரிப்பு பொதுவாக உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான மக்களால் புறக்கணிக்கப்படுகிறது. சிலருக்குக் கண் அரிப்பு வெறும் சில நிமிடங்கள் மட்டுமே நீடிக்கும், ஆனால், பிரான்சில் உள்ள ஒரு மனிதனின் கண் எரிச்சல் மணிக்கணக்கில் தொடர்ந்துள்ளது. ஆம், இவரின் கண் அரிப்பு பல மணிநேரம் வரை நீடித்துள்ளது. கண் எரிச்சல் வலியாக மாறிய பின்னர், அந்த நபர் மருத்துவரைச் சந்தித்திருக்கிறார்.

ஏலியன்களால் ஒரு பெண் கர்ப்பமா? UFO சாட்சிகளுடன் மனிதர்களுக்கு பாலியல் சந்திப்பா? பென்டகன் ஆவணம் சொன்ன உண்மை..ஏலியன்களால் ஒரு பெண் கர்ப்பமா? UFO சாட்சிகளுடன் மனிதர்களுக்கு பாலியல் சந்திப்பா? பென்டகன் ஆவணம் சொன்ன உண்மை..

மருத்துவரை உறைய வைத்த 'அந்த' காட்சி

மருத்துவரை உறைய வைத்த 'அந்த' காட்சி

ஆனால், அந்த நபரைப் பரிசோதனை செய்த மருத்துவர் கண்ட காட்சி, அவரை உறைய வைத்துள்ளது. ஆம், கண் மருத்துவ பரிசோதனையில், அந்த நபரின் கண்களுக்குள் ஒரு டஜன் லார்வாக்களை மருத்துவர்கள் கண்டுபிடித்து அதிர்ந்துபோயுள்ளனர். கண்களுக்குள் லார்வாக்கள் எப்படிச் சென்றது? உண்மையில் லார்வாக்கள் என்றால் என்ன தெரியுமா? லார்வாக்கள் என்பது முட்டையிலிருந்து சற்று முன்னரே வெளிவந்த, குட்டையான, பருத்த, மென்மையான உடலுடைய, கால்கள் இல்லாத பூச்சி என்பதாகும்.

அவசர அவசரமாக அனுமதிக்கப்பட்ட 53 வயது நபரின் கண்களுக்குள் லார்வா புழுக்கள்

அவசர அவசரமாக அனுமதிக்கப்பட்ட 53 வயது நபரின் கண்களுக்குள் லார்வா புழுக்கள்

நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசினில் சமீபத்தில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வறிக்கையின் படி, அடையாளம் காணப்படாத 53 வயதான நபரின், வலது கண்ணில் அரிப்புடன் மருத்துவமனையில் அவசர அவசரமாக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அனுமதிக்கப்பட்ட நபர் கூடிய தகவலின் படி, அன்றைய தினம் குதிரை மற்றும் செம்மறி பண்ணைக்கு அருகில் தோட்டம் அமைத்துக் கொண்டிருந்தபோது கண்களில் ஏதோ ஒன்று புகுந்ததை உணர்ந்ததாக அவர் மருத்துவர்களிடம் கூறியுள்ளார். ஆனால், அவர் கண்களுக்குள் எதுவும் தென்படவில்லை என்று கூறியிருக்கிறார்.

ஸ்மார்ட்போன் விலையில் AC வாங்கலாம்.. Realme அறிமுகம் செய்த புதிய Realme Techlife AC.. விலை என்ன தெரியுமா?ஸ்மார்ட்போன் விலையில் AC வாங்கலாம்.. Realme அறிமுகம் செய்த புதிய Realme Techlife AC.. விலை என்ன தெரியுமா?

கண்ணாடி போன்ற தோற்றத்தில் காணப்பட்ட நகரும் லார்வா புழுக்கள்

கண்ணாடி போன்ற தோற்றத்தில் காணப்பட்ட நகரும் லார்வா புழுக்கள்

பிரச்சனைக்கு என்ன காரணம் என்பதைக் கண்டறியச் சுகாதார வல்லுநர்கள் கூர்ந்து கவனித்தபோது, ​​​​அவரது கருவிழி மற்றும் வெண்படலத்தில் "பல நகரும் ஒளி ஊடுருவக்கூடிய லார்வாக்களை" மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். பிரான்சில் உள்ள Saint-Etienne பல்கலைக்கழக மருத்துவமனையின் ஆசிரியர்கள் கூறிய தகவலின் படி, அவர் கண்களுக்குள் காணப்பட்ட லார்வாக்கள் "Oestrus ovis, the sheep bot fly" என்று அடையாளம் காணப்பட்டதாக அறிக்கையில் எழுதியுள்ளனர். இவை செம்மறி ஆட்டின் மூக்கில் காணப்படும் சிறிய வகை லார்வாக்களாகும்.

லார்வாக்களால் கண்ணின் வெளிப்புற அமைப்புகளின் தொற்று

லார்வாக்களால் கண்ணின் வெளிப்புற அமைப்புகளின் தொற்று

கார்னியா என்பது கண்ணின் முன்பகுதியில் உள்ள வெளிப்படையான வெளிப்புற உறையாக இருந்தாலும், கான்ஜுன்டிவா என்பது கண்ணின் சவ்வு ஆகும். கண் இமையின் மேற்பரப்பை உள்ளடக்கிய தளர்வான இணைப்பு திசு இதுவாகும். அந்த நபருக்கு வெளிப்புற கண் நோய் அல்லது "லார்வாக்களால் கண்ணின் வெளிப்புற அமைப்புகளின் தொற்று" இருப்பது கண்டறியப்பட்டது. இவருடைய இந்த் தொற்று நிலைக்கு எந்த சிகிச்சையும் இல்லை என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். இருப்பினும், மருத்துவர்களுக்கு எஞ்சியிருக்கும் ஒரே தீர்வு என்றால் அது கடினமான முறையாக அமைந்துள்ளது.

OTT நன்மைகளுடன் கிடைக்கும் Jio ப்ரீபெய்ட் திட்டங்கள்.. ரூ.499 மதிப்பிலான Disney+ Hotstar சந்தா இலவசமா?OTT நன்மைகளுடன் கிடைக்கும் Jio ப்ரீபெய்ட் திட்டங்கள்.. ரூ.499 மதிப்பிலான Disney+ Hotstar சந்தா இலவசமா?

இந்த தொற்றிற்கான ஒரே தீர்வு என்ன தெரியுமா?

இந்த தொற்றிற்கான ஒரே தீர்வு என்ன தெரியுமா?

அது, பாதிக்கப்பட்ட நபரின் கண்களில் ஃபோர்செப்ஸைப் பயன்படுத்தி கண்ணிமையிலிருந்து லார்வா உயிரினங்களை ஒன்றின் பின் ஒன்றாக அகற்றுவது மட்டும் தான் எஞ்சியுள்ள ஒரே வழி என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். அவரது கண்ணில் இருந்து ஏதேனும் லார்வாக்களை அகற்றத் தவறினால் மருத்துவர்கள் அந்த நபருக்கு சில மேற்பூச்சு ஆண்டிபயாடிக் சிகிச்சைகளைப் பரிந்துரைத்தனர். இந்த லார்வாக்கள் அரிதான சமயங்களில் கண்ணிமைக்குள் புதைந்துவிடும் என்றும் அது ஒருவரின் பார்வைக்குக் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண் லார்வாக்கள் தான் மோசமானது காரணம் என்ன தெரியுமா?

புளோரிடா பல்கலைக்கழகத்தின் கூற்றுப்படி, லார்வா இனங்கள் உலகெங்கிலும் உள்ள செம்மறி ஆடுகளில் ஒட்டுண்ணி நோய்த் தொற்றுகளை ஏற்படுத்தக்கூடியது. "மற்ற ஈ லார்வாக்களைப் போலல்லாமல், பெண் லார்வாக்கள் 'லார்விபோசிட்' என்று அறியப்படுகின்றன. இதன் பொருள், பெண் லார்வாயினுள் இருக்கும்போதே முட்டைகள் குஞ்சு பொரித்து, அது உயிருள்ள லார்வாக்கள் அடங்கிய ஒரு துளியைச் செம்மறி ஆடுகளின் மூக்கில் காணப்படும்" என்று பல்கலைக்கழகம் அதன் இணையதளத்தில் தெரிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
French Man Felt Itching In The Eye And That Turns Out To Be Dozens Of Fly Larvae Says Doctors : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X