Just In
- 7 min ago
கம்மி விலையில் இந்தியாவில் அறிமுகமாகும் புதிய Motorola போன்: அறிமுக தேதி இதுதான்.!
- 1 hr ago
காத்திருந்தது தப்பே இல்ல.! அறிமுகமானது Samsung Galaxy S23.. விலை என்ன தெரியுமா?
- 1 hr ago
பூமியின் மையப்பகுதி கூல் ஆகிறதா? இது ஆபத்தா? பூமியை அளிக்கக்குடியதா? விஞ்ஞானிகள் விளக்கம்.!
- 1 hr ago
சத்தமின்றி ரூ.359 ப்ரீபெய்ட் திட்டத்தில் கூடுதல் நன்மையை வழங்கிய Airtel : என்ஜாய் செய்யும் பயனர்கள்.!
Don't Miss
- News
பெயர் மாறினாலும்.. போட்டோ இல்லை.. மோடி, அண்ணாமலை எங்கே? எடப்பாடியின் முடிவிற்கு இப்படி ஒரு காரணமா?
- Movies
மாமனிதன் படத்துக்கு கிடைத்த மற்றுமொரு அங்கீகாரம்.. மகிழ்ச்சியில் இயக்குநர் சீனு ராமசாமி!
- Automobiles
போறபோக்க பாத்தா மாருதி, டாடா எல்லாம் நம்ம ஆளு பின்னாடிதான் நிக்கணும் போலிருக்கே! தொடர் வெற்றியில் மஹிந்திரா!
- Finance
Budget 2023: இது தேர்தல் பட்ஜெட் அல்ல.. ஒரு சமநிலையான பட்ஜெட்.. இலவசங்கள் கிடையாது..!
- Sports
சுயநலமான கேப்டன்சியா??.. ஹர்திக் பாண்ட்யா மீது எழும் பரபரப்பு குற்றச்சாட்டுகள்.. என்ன நடந்தது?
- Lifestyle
இந்த 4 ராசிக்காரங்க பணத்தை கையாளுவதில் கில்லாடிகளாம்... இவங்களுக்கு எப்பவும் பணக்கஷ்டம் வராதாம்...!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
இந்த Dating ஆப்ஸில் குவியும் ஆண்கள்/பெண்கள்: அப்படி என்னதான் இருக்கிறது?
பிரான்சை தளமாகக் கொண்ட க்ளீடேன் (Gleeden) என்ற மொபைல் ஆப்ஸ், திருமணத்திற்கு பின்பான டேட்டிங் அனுபவத்தை வழங்க கூடிய மொபைல் ஆப்ஸ் ஆக இருக்கிறது. இந்த ஆப்ஸை உலக அளவில் 10 மில்லியன் பயனர்கள் டவுன்லோட் செய்து பயன்படுத்துகின்றனர் என்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருமணத்திற்கு பின்பும் ஆண்கள்/பெண்கள் டேட்டிங் செய்கிறார்களா?
இந்த திருமணத்திற்கு பிந்தைய டேட்டிங் ஆப்ஸ் இல் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறதென்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆம், இந்த ஆப்ஸை டவுன்லோட் செய்த பயனர்களில் ஏராளமான இந்திய ஆண்களும், பெண்களும் குவிந்துகிடக்கின்றனர் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த பகிரங்கமான உண்மை இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

'ஒருத்தனுக்கு ஒருத்தி' அல்லது 'ஒருத்திக்கு ஒருத்தன்' கலாச்சாரம் காற்றோடு போயாச்சு.!
'ஒருத்தனுக்கு ஒருத்தி' அல்லது 'ஒருத்திக்கு ஒருத்தன்' என்ற கலாச்சாரத்தை இந்தியர்கள் மறந்துவிட்டதாக ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும், இந்த செய்தி தீயாய் பரவி வருகிறது.
அப்படி, இந்த ஆப்ஸில் என்ன இருக்கிறது? எதனால், இந்தியர்கள் இதை அதிகமாக டவுன்லோட் செய்து பயன்படுத்தி வருகின்றனர் என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

எது.! இந்த ஆப்ஸ் இல் 2 மில்லியன் இந்தியர்கள் இருக்கிறார்களா?
இந்த Gleeden ஆப்ஸை பதிவிறக்கம் செய்த பயனர்களில் 20% பேர் இந்தியாவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆப்ஸ் இல் இரண்டு மில்லியன் பயனர்களுக்கும் அதிகமாக இந்தியர்கள் உள்ளனர் என்பதை நிறுவனத்தின் கணக்கு காண்பிக்கிறது.
கடந்த செப்டம்பர் 2022ல் இருந்து இந்த எண்ணிக்கை, இப்போது 11 சதவீதமாக அதிகரித்துள்ளது.

நகரங்களில் இல்லற வாழ்க்கைக்கு பின்பு டேட்டிங் கலாச்சாரம் தொடர்கிறதா?
பெரும்பாலான புதிய சந்தாதாரர்கள் 66 சதவீதம் அடுக்கு 1ம் தர ஹைடெக் நகரங்களில் இருந்து வந்திருப்பதாகவும், மீதமுள்ளவர்கள் 44 சதவீதம் பயனர்கள் அடுக்கு 2ம் தர மற்றும் 3ம் தர சிறு நகரங்களில் வசிப்பவர்களாகவும் இருக்கின்றனர் என்று கூறப்பட்டுளது.
Gleeden ஆப்ஸில் உள்ள பெரும்பாலான இந்திய பயனர்கள், சமூகப் பொருளாதார சூழ்நிலை சார்ந்தவர்கள் என்று நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த திருமணத்திற்கு பின்பு டேட்டிங் ஆப்ஸில் இருப்பவர்கள் யார் தெரியுமா?
இதில் பல இன்ஜினியர்கள், தொழில்முனைவோர், ஆலோசகர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் மருத்துவர்கள் என்று பல தொழில்களில் முக்கிய இடத்தில் பணியாற்றுபவர்கள் என்று நிறுவனத்தின் தகவல் காண்பிக்கிறது.
இந்த எண்ணிக்கையில் கணிசமான அளவில் இல்லத்தரசிகளும் இருக்கின்றனர் என்பது ஆச்சரியம் அளிக்கிறது. இந்தப் பயனர்களின் வயதை பொருத்தவரை ஆண்கள் பெரும்பாலும் 30+ வயதை கடந்தவர்களாக உள்ளனர்.

எத்தனை வயது ஆண்கள் மற்றும் பெண்கள் இதில் அதிகமாக உள்ளனர்?
அதே நேரத்தில், பெண்களைப் பொறுத்தவரை 26+ வயதை கடந்தவர்களாக உள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த ஆப்ஸை பயன்படுத்தும் இரு பாலர்களின் அளவை பற்றி பார்க்கையில், ஆண்கள் இதில் 60% ஆகவும், பெண்கள் இதில் 40 சதவீதமாகவும் உள்ளனர் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
இந்தியா திருமணங்கள் மற்றும் ஒரு தாரம் என்ற நெறிமுறையில் இயங்குகிறது.
ஒருத்தனுக்கு ஒருத்தி என்ற கட்டுப்பாடு இந்தியாவில் நீண்ட காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

டேட்டிங் சைட்டில் ஆக்ட்டிவ் ஆகும் திருமணமான ஆண்கள் மற்றும் பெண்கள்.!
ஆனால், இந்த ஆப்ஸ் வெளியிட்ட தகவலின் படி, திருமணத்திற்கு பின்பு ஆண்களும்; பெண்களும் மற்றொரு உறவில் தலையிட அதிக ஆர்வம் கட்டுவதாக தெரிகிறது.
கடந்த ஆண்டு 1.7 மில்லியனில் இருந்த பயனர்களின் எண்ணிக்கை, இப்பொழுது இரண்டு மில்லியன் எண்ணிக்கையை தாண்டி செல்கிறது.
திருமணமானவர்களுக்காக இந்த டேட்டிங் ஆப்ஸ் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டதால், உலக அளவில் உள்ள பயிர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருகிறது.

இந்தியாவின் கலாச்சாரம் பற்றி உங்களுடைய கருத்து என்ன?
மற்ற அயல்நாடுகளில் உள்ள கலாச்சாரத்துடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் கலாச்சாரம் முற்றிலும் வேறுபட்டதாக இருக்கிறது.
இருப்பினும் இந்திய பயனர்களின் எண்ணிக்கை இதில் அதிகமாக காணப்படுவதனால், மக்கள் மத்தியில் பாரம்பரிய கலாச்சார கருத்துகள் மாறி வருகின்றன என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய ஆப்ஸ் பற்றிய உங்களின் கருத்து என்ன என்பதை எங்களுடன் கமெண்டில் பகிர்ந்து கொள்ளுங்கள்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470