Home
News

ப்ரீடம் 651, விலை ரூ.651 - ஏமாற்றுவோம், ஏமாற வேண்டாம்..!!

By Muthuraj

உலகிலேயே மிகவும் விலைக்குறைந்த மற்றும் மிகப்பெரிய பரபரப்புகளை கிளப்பிய ஸ்மார்ட்போன் ஆன ஃப்ரீடம் 251 தற்போது ஃப்ரீடம் 651 என்ற புது அவதாரம் ஒன்றை எடுத்துள்ளது. உடனே ப்ரீடம் ஸ்மார்ட்போனின் அடுத்த மாடல் தான் 651 என்று கற்பனை செய்ய ஆரம்பித்து விடாதீர்கள்..!

ஃப்ரீடம் 651 என்பது 'முழுக்க முழுக்க 100%' ஃப்ரீடம் 251 ஸ்மார்ட்போனை கேலி செய்யும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ள ஒரு வலைதளம் ஆகும். இது யார் பார்த்த வேலை என்று தெரியவில்லை. ஆனால், மரண கலாய். ஃப்ரீடம் 251 வலைதள டிசைனை அப்படியே 'அட்டை-டு-அட்டை' காப்பி அடித்து, ஃப்ரீடம் 651 பற்றி அவர்கள் செய்திருக்கும் விளம்பரங்களை நீங்களே கொஞ்சம் பாருங்களேன்..!

இப்போதே வாங்காதீர்கள் :

இப்போதே வாங்காதீர்கள் :

ப்ரீடம் 651 - புதுவகையான சுதந்திரத்தை அனுபவியுங்கள், விலை ரூ.651, இப்போதே வாங்காதீர்கள் என்று ப்ரீடம் 251 நிறுவனத்தை 'கேலி' செய்து விளம்பரம் செய்கிறது ஃப்ரீடம் 651 வலைதளம்.

ஜூன் 30, 2026 :

ஜூன் 30, 2026 :

அது மட்டுமின்றி, 2026-ஆம் ஆண்டு ஜூன் 30-ஆம் தேதிக்குள் அனைத்து டெலிவரிகளும் முடிக்கபெறும் உடன் பறக்கும் ட்ரோன்கள் மூலம் டெலிவரி செய்யப்படும் என்று ஃப்ரீடம் 251 நிறுவனத்தை மிக மோசமாய் கிண்டல் செய்கிறது ஃப்ரீடம் 651 வலைதளம்.

செவ்வாய் கிரக பொருட்கள் :

செவ்வாய் கிரக பொருட்கள் :

ஃப்ரீடம் 651 பாகங்கள் அனைத்தும் செவ்வாய் கிரக பொருட்களால் உருவானது, மனிதர்கள் 2025-ஆம் ஆண்டுக்குள் செவ்வாய் கிரகம் செல்லும் வாய்ப்பு அதிகமாகிக் கொண்டே போவதால் தான் ஃப்ரீடம் 651 மிக குறைவான விலைக்கு விற்கப்படுகிறது.

சிறிய, தெளிவற்ற :

சிறிய, தெளிவற்ற :

இதன் 0.3 எம்பி முன்பக்க கேமிரா மூலம் நீங்கள் எடுக்கும் புகைப்படங்கள் அனைத்தும் மிக உண்மையில் இருப்பதை விட மிக சிறியதாக, தெளிவற்றதாக காட்டும் என்றும் ஃப்ரீடம் 251 மோசமாக விமர்சனம் செய்யப்பட்டுள்ளது.

அற்புதமான இணைப்பு வசதி :

அற்புதமான இணைப்பு வசதி :

இந்த ஸ்மார்ட்போனை சார்ஜருடன் இணைக்கலாம் அல்லது வேறொரு சார்ஜருடன் கூட இணைக்கலாம். இதைவிட ஒரு அற்புதமான இணைப்பு வசதியை வேறெங்கும் காண இயலாது என்றும் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

க்விக்கர் விளம்பரம் :

க்விக்கர் விளம்பரம் :

உடன் லாவா 10எக்ஸ் விலை - ரூ.0 என்றும், ஃப்ரீடம் 251 - ரூ .251 என்றும் க்விக்கர் விளம்பரம் ஒன்றும் வலைதளத்தில் இடம் பெறுகிறது.

ஆராயுங்கள் :

ஆராயுங்கள் :

ஃப்ரீடம் 651 ஸ்மார்ட்போனை நன்றாக ஆராயுங்கள், 2026-ஆம் ஆண்டு உங்கள் கைகளுக்கு வரும் வரை எவ்வளவு முடியுமோ அவ்வளவு ஆராயுங்கள் ப்ரீடம் 251 நிறுவனத்தை 'கேலி' செய்து விளம்பரம் செய்கிறது ஃப்ரீடம் 651 வலைதளம்.

ஃபேஸியல், வாய்ஸ் ரீகைக்னைஷேஷன் :

ஃபேஸியல், வாய்ஸ் ரீகைக்னைஷேஷன் :

இதன் ஃபேஸியல் ரீகைக்னைஷேஷன் ஆனது "நீங்கள் தொடர்பு எல்லைக்கு வெளியே உள்ளீர்கள்" என்றும் கூறும், மேலும் இதன் வாய்ஸ் ரீகைக்னைஷேஷன் ஆனது அதை விட பிரமாதமாய் உங்களை டிஸ்கநெக்ட் செய்யும் என்றும் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

சிறப்பம்சங்கள் :

சிறப்பம்சங்கள் :

எல்லாவற்றையும் விட மிக மோசமான கலாய் ப்ரீடம் 651-ன் சிறப்பம்சங்கள் தான் : ஆண்ராய்டு ஸுச்சீனீ 26.2 வெர்ஷன் (2026-க்கு முன்புவரை மட்டுமே), வாரன்டி இல்லை, சர்வீஸ் சென்டர்கள் இந்தியாவில் இல்லை, செவ்வாய் கிரகத்தில் மட்டுமே..!

ஆதாரங்கள் :

ஆதாரங்கள் :

ஃப்ரீடம் 251 ஒரு பெரிய 'ஏமாத்து வேலை'..? 4 ஆதாரங்கள்..!

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

இந்தியாவே வெறுக்கும் ஒரு முகம் : நம்ம ஏர்டெல் 4ஜி பொண்ணு..??!


ஃப்ரீடம் 251 வேண்டாம், ரூ.499-க்கு டாப் 10 போன்கள் இருக்கு..!!

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

English summary
Freedom 651 by Doesn't Ring a Bell. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X